Tag: கட்டிடம்
-
தெஹ்ரானில் ஒரு உயரமான கட்டிடம். மிகவும் வேறுபட்ட சமூக நிலைமைகள், மத அல்லது மத சார்பற்ற நோக்குநிலைகள், தார்மீக அல்லது ஒழுக்கக்கேடான நடத்தைகளை பிரதிபலிக்கும் அண்டை வீட்டார். பழமைவாத குடும்பங்கள், மூர்க்கத்தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட இளைஞர்கள் (மது, போதைப்பொருள், தேவையற்ற டீனேஜ் கர்ப்பம்), தொழில்முறை குற்றவாளிகள், ஏன் ஒரு செக்ஸ் வொர்க்கர் கூட – எல்லாம் கலப்பு, எல்லாம் முரண், எல்லாம் புதிர். ரேடியோவில் மதச் சொற்பொழிவு ஒலிபரப்பை கேட்டுக்கொண்டே கொடூரமான கொலையைச் செய்கிறார்கள் குற்றவாளிகள்.…
-
நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள். கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை – சுவர்கள் முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றிஅவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர் இப்போது நானிங்கே விரக்தியில்.வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது; வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை? ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள். மொழியாக்கம்…