Tag: ஒட்டகம்

  • நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார்.…

  • மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர். வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி…