Tag: ஏரி
-
பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு…
-
ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…