Tag: எடை
-
சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு. ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே…
-
தலைகளில்லா முண்டங்கள் ஒரு படை அமைத்தன தலைவன் ஒருவனை நியமிக்க தலை தேடும் பணியில் இறங்கின கிடைக்காமல் போன தலைக்கு பதிலாய் தலையின் சித்திரம் வரைந்த பலகையொன்றை எடுத்து ஒரு முண்டத்தின் மேல் ஒட்டி வைத்தவுடன் அதன் உயரம் பன்மடங்காகி எடை பல்கிப் பெருகி அதன் காலடி நிழலின் சிறு பகுதிக்குள் மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின.