Tag: உறக்கம்

  • சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை…

  • அமைதியை குலைத்து அறைக்குள் நுழைந்த இசையை விரட்டியடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி காதை பொத்திக்கொண்டேன் இசை இப்போது தென்படவில்லை. இசை கண்ணுக்கு தெரியாமல் எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை கை வலிக்கத் துவங்கியபோது இரு கைகளை தொங்கப்போட்டு வலியை துரத்தினேன். இசை அவ்விடத்திலிருந்து ஏற்கெனவே விலகிச் சென்றிருக்கலாமென எண்ணிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன்

    நோயாளி