Tag: இலை

  • சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின்…

  • சிறு தளிர்கள் உதிர்ந்து விழுந்தன மொட்டுகள் மூச்சுத் திணறி வாடிப்போயின வேர் வழி உருவிலா நஞ்சு பரவி மரம் தள்ளாடிற்று ஒரு மரம் அழித்து தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி அதி விரைவில் எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது கருத்தின் வடிவிலும் கொள்கையின் வடிவிலும் தீவிரம் என்னும் உடையணிந்து வாதம் எனும் மகுடியூதி மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.

  • ஞாபகார்த்த இலை காணாமல் போனது மரத்திலிருந்து விடுபட்ட இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை புத்தகப்பக்கங்களுக்கு நடுவில் சிறைப்படுத்தி வைத்திருந்தாய் புத்தகயாவின் புனித மரத்தின் இலையது என்பதை மறந்து போனாயா?

  • வெகு காலமாக புரட்டப்படாத புத்தகத்தின் பக்கங்களுக்குள் கிடந்தது இலை பச்சை மங்கி வெண்மைப் பட்டுப் போன ஆனால் வடிவம் குன்றா அந்த இலையில் வாசம் தொலைந்திருந்தது பழைய புத்தகத்தின் வாசனையை விரும்பி முகர்கையில் இலையின் வாசமும் சேர்ந்து வந்தது. இலை கிடந்த பக்கத்தில் காணாமல் போயிருந்த எழுத்துகள் சில இலையில் பதிந்திருந்தன