Tag: ஆஸ்திரேலியா

  • சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில்…

  • எனது நண்பன் – கார்த்திக்குக்கு, எங்களது HR அணியிடமிருந்து வந்த ஈமெயில் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. “அனுபவமிக்க, ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வல்ல மூத்த நிர்வாகியை தேடுகிறோம். உங்களின் தற்குறிப்பை ஒரு வேலைவாய்ப்பு இணைய தளத்தில் கண்டோம். எனவே உங்களை தொடர்புகொள்கிறோம்” கார்த்திக் கரிசனத்துடன் “என்னடா உங்க ஆளுங்க இன்னொரு மேலாளரை தேடுறாங்களா? ஏதேனும் பிரச்சனையா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னுமில்லடா…நிறுவன விரிவாக்கத்துக்காக இன்னொரு ஆளை நியமனம் பண்ணுவாங்களா இருக்கும்?” என்று தைரியத்தை செயற்கையாக எனது குரலில் வரவழைத்து…