Tag: ஆப்பிள்
-
அலுவல் ரீதியான குழப்பங்கள் தூங்க விடாமல் செய்தன. மூன்று மணிக்கே எழுந்து விட்டேன். குழப்பங்களுக்கு திடத் தன்மை இல்லை என்ற எண்ணத்தை விதைத்து சற்று அமைதியாய் அமர்ந்திருந்தேன். குழப்பம் எங்கிருந்து தொடங்குகிறது? என்ற கேள்வியை எழுப்பி முடிச்சை அவிழ்க்க முயன்றேன். நிறைய முடிச்சுகள். ஒரு வலைக்குள் அமர்ந்திருக்கிறோம்! இந்த வலையில் பல்லாயிரம் முடிச்சுகள். என்னுள் இருந்த மிலரேபா கண் விழித்தார். —- லட்சியம் என்பது வெறுமைஅது பல காரணகாரியங்களைச் சார்ந்த, அறிய முடியாத எதிர்காலத்தில் என்றோ நிகழத்தக்க…
-
தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.
-
பழத்தில் உள்ள விதைகளை எண்ணுதல் எளிது. விதைக்குள் இருக்கும் பழங்களை எண்ணுவது எப்படி? +++++ அறுத்துவைத்த ஆப்பிளுக்குள் இருந்த விதை ஆறு ! பத்திரப்படுத்தி வைத்திருந்த விதைகளைக் கவர்ந்ததாரு? என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள். விதைகளை கொண்டு தாரும் ! கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம். விதையிருந்தால் போதும். +++++ காணாமல்போன விதைகளைத்தேடி கானகம் வரை வந்துவிட்டேன். நிறைய மரங்கள் ! என் வீட்டிலிருந்து களவு போன விதையிலிருந்து எந்த மரம் முளைத்தது? யாராவது சொல்லுங்கள் !…