Tag: அழுக்கு

  • பிச்சைக்காரர்கள்————————-

    அந்தக் குவியலில் இருந்ததை
    நீ அறிந்திருக்கவில்லை
    அது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்
    ஒரு பார்வையாளன் கண்டான்
    அவர்கள் தமது உள்ளங்கைகளின்
    வெற்றிடத்தை விற்கிறார்கள்

    பார்வையாளனுக்கு அவர்கள்
    அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;
    அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை
    (அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள்

    அவர்களின் திரிந்த பார்வையில்
    அவனின் அந்நிய முகம் கோணுகிறது;
    தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,
    அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர்.

    – Rainer Maria Rilke

    தமிழாக்கம் : அடியேன்