Tag: அலமாரி

  • ஹரி பார்த்திக்கு சொன்னது : “இன்று காலை தில்லியிலிருந்து கிளம்பிய போது சுசிதாவும் அதே விமானத்தில் வருகிறாள் என்று எனக்கு தெரியாது. இருவரும் சேர்ந்து ஒரே தொழிற் கண்காட்சிக்கு செல்கிறோம் என்றாலும் சுசிதா என்னுடன் பயணம் செய்ய மாட்டாள் என்று தெரியும். நானும் என் பயண விவரங்களை அவளுக்கு தெரிவிக்கவில்லை. கண்காட்சித் திடலுக்கு வந்த பின்னர் போனில் தொடர்புகொள்வதாக சொல்லிவிட்டேன். நேர்முகத்துக்குப் பிறகு பணியமர்த்தப்படும் தகுதி சுசிதாவுக்கில்லை என்று நாம்இருவருமே பரிந்துரைத்தோம். ஆனால் நேர்முகமே கண்  துடைப்பு…

  • ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…