Tag: அரசன்
-
அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள்…
-
உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ; அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ; பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள். “உடற்கழு தனையோ வுயிர்க்கழு…