Tag: அணை
-
துணுக்கு (trivia) எனக்கு மிகவும் பிடித்த வாசிப்பு வகைமை. வெவ்வேறு வடிவங்களில் அதனை எழுதிப் பார்த்தல் – கட்டுரைகளில் அவற்றை அடுக்குதல், உரையாடல்களுக்கு நடுவே அவற்றை புகுத்துதல், நாவலின் நெடும்பத்திகளில் அவற்றை பதிவுசெய்தல், கவிதைகளில் குறிப்பாக்குதல் என – பல விதங்களில் விரியும். இந்தியாவில் எல்லைகளில் இருக்கும் மூன்று நாடுகளில் உள்ள மூன்று நகரங்களைப் பற்றிய துணுக்கு தோரணத்தை என்றோ எழுதினேன். மீர்ப்பூர் அறுபதுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் மீர்ப்பூரில் ஜீலம் ஆற்றுக்கு மேல் மிகப்…
-
என் கவிதைக்கான கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்தேன். பீய்ச்சியடித்த ஊற்று, மணலில் சீறிப்பாய்ந்து பாறைகளைத்தள்ளி விரையும் காட்டாறு. அதி உச்சியின் மேலிருந்து கொட்டும் அருவி. சமவெளிகளில் நகரும் நதி. கிளைக்கும் கால்வாய்கள். புனித நகரங்களின் இரு மருங்கிலும் படரும் ஜீவ நதி. அணைகளால் தடுக்கப்பட்ட ஒட்டத்தை தன் மட்டத்தை உயர்த்தி மீட்டெடுத்து கடும் வேகத்தில் பயணமாகி, பரந்து விரிந்த கடலுடன் சங்கமமாகி தன் அடையாளமிழக்கும் ஆறு. குழாயிலிருந்து விடுபட்டு கழுவியில் நிறைந்து, குழிந்து, வெளிச்செல்லும்குழாயின் உள் புகும் நகராட்சி…