• இப்போது இல்லாது மறைந்து போன பௌத்த பூமியை மறு-கற்பனை செய்ய வைக்கிறது மணிமேகலை காப்பியம். பாத்திரங்கள் தமிழகத்தில் வசித்தன ; தமிழ் பேசின. ஆனால் காப்பியத்தின் பௌத்த தரிசனம் ஒற்றை மொழியியல்-நில அடிப்படையிலானதன்று. சர்வ-தேசிய, சர்வ-மொழி அடிப்படையிலானது. கதையில் பல்வேறு தமிழரல்லாத பாத்திரங்கள். சுதமதி வங்காளப் பெண். புண்ணியராசன் இந்தோனேசியாவின் ஜாவா பெருந்தீவை ஆளும் மன்னன். ஆபுத்திரனின் தாயார் கங்கைச் சமவெளியிலிருந்து (வாராணசி) கன்னியாகுமரி வந்தவள். மகாபாரதக் குறுங்கதை வருகிறது. திருக்குறள் வருகிறது. தூரத்தீவுகளில் வசிக்கும் பழங்குடிகள்… Read more

  • அலுவலக நண்பர்களுடன் மாலைப் பொழுதுகளைக் கழிப்பது இப்போதெல்லாம் சிறு பதற்றத்தை தருகிறது. இரு நாட்கள் முன்னம் நண்பர் ஒருவருடன் உணவு விடுதிக்குச் சென்றிருந்தேன். பல வருடம் வெளிநாடுகளில் வேலை செய்தவர். அலுவலக வதந்தி, வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எனப் பாதுகாப்பாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் எப்போது சமூகநீதி நோக்கித் திரும்பியது என்று தெரியவில்லை. இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல உயர் சாதிக்காரங்க பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விட்டுத் தராங்க இல்லாட்டி பகிர்ந்துக்கறாங்க எல்லோர்க்கும் சம நீதி வந்துட்டா எல்லாம் சரியாயிடும் என்னோட… Read more

  • —- சுய மகிழ்வுத் தனிமைக்கு நெடுங்காலமாய்ப் பழக்கப்பட்டுவிட்ட அவன் மற்றவர்களுக்குத் தன்னைத் தரும் அழகியலுக்காக ஏங்கத் தொடங்கினான். “தியாகம்” என்னும் சொல்லின் பெரும்பொருள் அவனுக்குத் தெளிவாயிற்று. மானுடம் என்னும் உயிரியின் வாழ்க்கையை கடந்த காலத்திலிருந்து எதிர் காலத்துக்கு எடுத்துச் செல்லும் ஒரே நோக்கம் கொண்ட ஒற்றை விதையாக தன்னுடைய சிறிய தன்மையை உணர்வதில் அவன் திருப்தியடையத் துவங்கினான். தாவரங்கள் தனிமங்கள் போன்ற பல்வேறு வகையினங்களுடன் சேர்த்து மனித இனம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் மிதந்துலவும் ஒற்றைப் பரந்த… Read more

  • ஒரு நகரத்திற்குப் பயணமானபோது அங்கு பார்த்த ஒரு வீதி பலமுறை என் கனவில் வந்த ஒரு வீதிக் காட்சியைப் போலவே இருந்தது. ஒரு பக்கம்வரிசையாக வீடுகள். இன்னொரு பக்கம் அடர்த்தியாக வளர்ந்த மரங்களுக்கிடையே ஓடும் சிறு நதி. நகருக்கு நடுவே இருக்கும் புகழ்பெற்ற பிரம்மாண்டமான ஏரிக்கு நடுவே அழகான வண்ணவண்ணப் படகு வீடுகள் தெரிந்தன. ஏரியைச் சுற்றி இன்னும் கொஞ்ச தூரம் சென்று புற நகரை அடைந்த போது நான் பார்த்த தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய… Read more

  • பெருநிலப்பரப்பில் வழிபாட்டுரிமை என்று பேசப்படுவது காஷ்மீரிகளுக்கு மீண்டும் மீண்டும் தொடர்ந்து மறுக்கப்படும் ஒன்று. 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, காஷ்மீரின் முக்கியச் சின்னமான ஜாமியா மஸ்ஜித் 136 நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது. இது முதல் முறை அல்ல. இது போன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பலமுறை வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதி மூடப்பட்டிருக்கிறது. ஹஸ்ரத் பாலுக்குச் சென்ற போது அங்கு வைக்கப்பட்டிருந்த ஓர் அறிவிப்பு பலகை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது – “இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமே ;… Read more

  • பேக்கேஜ் டூரில் திட்டமிட்டிருந்த அனைத்து இடங்களையும் பார்த்தாயிற்று. சஷ்மேஷாய் தோட்டமும் பரிமஹலும் பார்க்க முடியவில்லை. கவர்னர் வந்ததனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இவ்விரு ஸ்தலங்களிலும் அன்று அனுமதி இல்லை. எங்களுடன் ஒட்டுனராக வந்திருந்த குல்ஸார் அன்று களைத்திருந்தார். ஷாலிமார் பாக்-குக்கு வெளியே நினைவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு டாக்ஸி நின்றிருந்த இடத்துக்குத் திரும்பியபோது குல்சாருடன் நின்று கொண்டிருந்த பிட்டு aka ஹஷீமைச் சந்தித்தேன். தன்னை தில்லிக்காரன் என்று சொல்லிக் கொண்டார். கிழக்கு தில்லியிலுள்ள ஷாட்ரா பகுதியில் அவர் வீடு… Read more

  • 23/4/2021

    வெட்டி உரையாடல்கள், எப்போதாவது சில நண்பர்களுடைய அறிமுகம் என நடைமுறை வாழ்க்கையில் காணும் அனுபவங்களை ஒத்தவாறு சுவையற்றதாகவே சமூக வளைதளங்களில் நேரம் கழிந்து வந்தது. இடும் கருத்துகள் ஏதோ இந்தவுலகை மாற்றியமைக்கப்போவது போலக் கூவுதற்கும் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றங்களை பறைசாற்றிக் கொள்வதற்குமான அரங்காக மட்டுமே சமூக வளைதளங்களைப் பயன்படுத்தி வந்த எனக்கு அவற்றுக்கு உயிர் காக்கும் வல்லமை உண்டு என்ற நேரடி அனுபவத்தைத் தந்த நாள் 23/4/2021. கொவிட் பாசிடிவாகி ஏழு நாட்களாகியிருந்தன. ஜூரம் குறையவில்லை. 22ந்தேதி… Read more

  • சில வருடங்களுக்கு முன்னர் பௌத்த இலக்கியத்தை மூல நூல்களிலிருந்து மட்டுந்தான் வாசிப்பது என்று ஆரம்பித்தேன். சக்கரவாளம் நூல் வடிவில் கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லாத நாட்கள் அவை. லங்காவதாரம், லோட்டஸ் சூத்திரம், பிரஜ்ன பாரமித சூத்திரம் என்று நேரடி மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து அர்த்தம் புரிந்து கொள்ள யத்தனித்தேன். இதன் அடிப்படையில் என்னால் ஒரு கட்டுரையோ பத்தியோ எழுதிவிட முடியாது என்று எனக்குத் தெளிவாயிற்று. விரைவிலேயே அம்முயற்சியைக் கைவிட வேண்டியதாயிற்று. சத்சங்கம், கதாகாலட்சேபம் என ஆத்திகர்களின்… Read more

  • எனக்கு மிகவும் பிடித்த திக் நியட் ஹான் கவிதை. இக்கவிதையை வாசிக்கும் போது லோட்டஸ் சூத்ரா நம் நினைவில் வராமல் போகாது. அதில் வரும் ததாகதர் உரை போன்று ஒலிக்கிறது இந்தக் கவிதை. இந்தக் கவிதை வரிகளை கருணை பற்றிய தியானத்திற்கான காட்சி ஊக்கியாக மறைந்த ஜென் மாஸ்டரின் சீடர்கள் பயன்படுத்துவார்களாம். இன்றிரவு முழு நிலவு என்பதனால்நட்சத்திரங்களை நம் பிரார்த்தனையில் அழைப்போம்பளீரென்ற ஒற்றைக் குவிய மனத்தினூடேதியானத்தின் ஆற்றல்இப்பிரபஞ்சத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து வாழும் உயிர்களும்இன்றிரவு இங்கு குழுமியுள்ளனஅச்சத்தின்… Read more

  • இந்தியா எனக்கு என்ன? – நொடிக்கு நொடி மாறும் அழகிய ஓவியம் – சிறு குறை கொண்ட என் மகன்– தொடர் வெற்றி காணும் என் மகள் – பல சத்தங்களை எதிரொலிக்கும் பள்ளத்தாக்கு – தாகங்கொண்ட நெஞ்சில் வந்து வீழும் ஒரு துளி – சாலையோர வாக்குவாதம் – ஒவ்வொரு வரியும் வெவ்வேறு மொழியில் எழுதப்பட்ட கவிதை – முன்னூறாயிரம் கடவுளர் உறையும் பிரதேசம் – சில சமயம் விமர்சனத்துக்குள்ளாகும் பிரதி – மேடு பள்ளங்களாலான… Read more

  • பிரிந்தபோது இருவருக்கும் மிக வருத்தம் இருவருமே அதை நாடவில்லை நிலவிய சூழல்தான் காரணம் பிழைத்தலுக்கான அவசியம் ஒருவரை வெகுதூரம் துரத்தியிருந்தது – அமெரிக்காவுக்கோ கனடாவுக்கோ அவர்களின் காதல் முன்பு போலிருக்கவில்லை ஈர்ப்பு மெதுவாக குறைந்து கொண்டு வந்தது ஈர்ப்பு வெகுவாக குறைந்தும் விட்டது எனினும், பிரிவிற்கு அது காரணமில்லை சூழல்தான் காரணம்- ஒரு வேளை அவர்களின் உணர்வு முழுக்க மறையுமுன்காலம் அவர்களை முழுதாக மாற்றிவிடுமுன் ஊழானது கலைஞனாகத் தோன்றிஇருவரையும் பிரித்திருக்கலாம் ஒருவருக்கு மற்றவர் என்றுமே இருபத்தி நான்கு… Read more

  • ஸீரோ டிகிரி பப்ளிஷிங்/ எழுத்து பிரசுரம் நூலை வாங்க Read more

  • மே 14, 2018 எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என்… Read more

  • சிறப்புப் பதிவு : நட்பாஸ்  திரு கணேஷ் வெங்கட்ராமன் அவர்களுக்கு, சொல்வனம் இணைய இதழில் வந்த உங்கள் ‘ஒரு முடிவிலாக்  குறிப்பு’ (https://solvanam.com/2021/11/28/ஒரு-முடிவிலாக்-குறிப்பு/) படித்தேன். புனைவா வாழ்க்கைக் குறிப்பா தெரியவில்லை, ஆனால் அதன் வலிமை என்னையும் கொஞ்சம் வாழ்க்கையை பற்றிச் சிந்திக்கத் தூண்டியது. இதோ அளிக்கிறேன், ஒரு தத்துவக் குறிப்பு. நட்பாஸ்  நம் சிக்கல்களுக்கு நம்மைத் தவிர வேறு யாரும் தீர்வு காண முடியாது. நம் பிரச்சினைகள்தான் நாம், இவற்றால்தான் நாம் நாமாய் இருக்கிறோம். எந்த ஒரு… Read more

  • முன்னர் அனிமேக்கள் என்றாலே ஓர் ஒவ்வாமை எனக்கிருந்தது. என் புதல்விகள் இருவரும் இருபத்தி நான்கு மணி நேரமும் ரத்தமாய்ச் சொட்டும் அனிமேக்களை அலுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இத்தனை கொடூரமான அனிமேக்களைப் பார்ப்பதனால்தான் ஜப்பானில் அதிகம் பேர் தற்கோலை செய்து கொள்கிறார்கள் என்ற என் உலர் நகைச்சுவை அனுமானத்தை அவர்கள் முன் வைத்த போது சின்னவள் சொன்னாள் – அருமையான ஐடியா அப்பா! கிப்லி ஸ்டூடியோக்காரர்கள் இதே கருப்பொருளில் கூட ஓர் அனிமே தயாரித்துவிடுவார்கள்-என்றாள். இதெல்லாம்  நான் “பர்ஃபெக்ட்… Read more

  • நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் :… Read more

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான் Read more

  • நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க… Read more

  • சமீபத்தில் தமிழமுது அமைப்பு நடத்திய இணைய வழி சந்திப்பில் என் புத்தகம் – சக்கரவாளம் – குறித்த மதிப்புரையை திருமதி சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கினார். மதிப்புரையைத் தொடர்ந்து நடந்த கேள்வி – பதில் பரிமாற்றத்தில் நான் பங்கு கொண்டேன். கேள்வி – பதில் காணொளியின் யூ-ட்யூப் லிங்கை இத்துடன் பகிர்கிறேன்.       Read more

  • கி மு 15-3-44

    பிரம்மாண்டம் ஜாக்கிரதை ஓ மனமே உன் இலட்சியங்களை விஞ்ச முடியாவிடில் தயக்கங்கலந்த முன்னெச்சரிக்கையுடன் அவற்றைப் பின்தொடர் முன்னகர்ந்து செல்லச்செல்ல மேலதிக விசாரணையும் கவனமும் உள்ளவனாய் நீ இருக்கவேண்டும் இறுதியில் ஜூலியஸ் சீஸரைப் போன்று உச்சியை அடையும்போதோ அத்தகைய புகழ்மிக்க மனிதனொருவனின் இடத்தை நீ பெறும்போதோ தமது பரிவாரங்கள் புடை சூழும் தலைவனைப் போன்று – தெருவில் செல்லும் சமயங்களில் அதிவிழிப்புடனிருத்தல் மிக அவசியம் சந்தர்ப்பவசமாக கும்பலிலிருந்து வெளிப்பட்டு கையில் கடிதத்துடன் அர்டெமிடோரஸ் உன்னை அணுகி "இக்கடிதத்தை உடனே… Read more