• சிறப்புப் பதிவு – பாலசுப்ரமணியம் முத்துசாமி மேலாண்மை, கிராமப் பொருளாதாரம், இலக்கியம் என்று பல துறைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் நண்பர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் வசித்தாலும் இந்தியாவின், குறிப்பாக தமிழ் நாட்டின் பொது நலம் சார்ந்த விஷயங்களில் தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வருபவர். சில மாதங்கள் முன் தமிழினி இணைய இதழில் அவர் எழுதிய உழவர்கள் சத்தியாக்கிரகம் எனும் கட்டுரை அவருடைய அனுமதியுடன் இங்கு சிறப்புப் பதிவாக வலையேற்றம் பெறுகிறது. நண்பர் முத்துசாமிக்கு… Read more

  • காடு வழியே செல்லும் அந்த மண் பாதை லாகூரையும் முல்தானையும் இணைக்கிறது. இரு பெரு வணிக நகரங்களுக்கிடையே சம தூரத்தில் இருந்தது துலம்பா எனும் பழம் பெரும் ஊர். அங்கு அதிக மக்கள் தொகை இல்லை. துலம்பாவைத் தாண்டியதுமே அடர்த்தியான காடு இரு மருங்கிலும். மிருகங்கள் மட்டுமல்லாது இரவுக் கொள்ளையர்களின் அபாயமும் நிலவியது. பயணம் செல்லும் பல வணிகர்கள் கத்தி குத்துப்பட்டு சாலையோரங்களில் இறந்து கிடப்பதை மறுநாள் பகலில் பயணம் செல்வோர் காண்பதுண்டு. இரவு நெருங்கும் முன்னரே… Read more

  • நேற்றிரவு கின்டில் புத்தகம் வாங்கினேன். கான்ஸ்டன்டீன் கவாஃபியின் கவிதைகள். கவாஃபியின் கவிதைத் தொகுதியில் முதலில் வாசித்த கவிதை – சுவர்கள் முன்யோசனையின்றி, பரிவின்றி, வெட்கமின்றிஅவர்கள் உயரமான இந்த திண்சுவர்களை என்னைச் சுற்றி கட்டியிருக்கின்றனர் இப்போது நானிங்கே விரக்தியில்.வேறெதைப்பற்றியும் சிந்தனையெழவில்லை; இந்த விதி என் மனதை நுகர்கிறது; வெளிப்புறத்தில் எனக்கு செய்ய நிறைய வேலைகள்.இந்த சுவர்கள் கட்டப்படும்போது நான் ஏன் கவனிக்கவில்லை? ஆனால் கட்டிடக்காரர்களின் அல்லது பிற சத்தங்களை நான் கேட்கவேயில்லை.புலப்படாமல், அவர்கள் என்னை இவ்வுலகத்திலிருந்து மூடிவிட்டார்கள். மொழியாக்கம்… Read more

  • நினைவிலிருந்து தொலைந்து போன ஒரு பாடல். அப்படி ஒரு பாடலை சில நாட்களாக ஞாபக மீட்பு செய்ய முயன்று வந்தேன். அதன் ட்யூன் சுத்தமாக மறந்து விட்டது. முதல் வரி ஞாபகமில்லை. பாடகர்கள் யாரெனவும் மறந்துவிட்டது. சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் அடிக்கடி முணுமுணுத்த பாடல். இப்படி நினைவிலிருந்து அகன்றுவிட்ட பாடலோடு அப்படி என்ன உறவு? நான் தங்கி பயின்று வந்த கல்லூரியில் மாணவர்களை ஐந்து மணி வாக்கில் எழுப்பிவிட தெய்வப்… Read more

  • பௌத்தம் ஒரு புராதன, சிக்கலான நம்பிக்கை முறை. மனித துக்கங்கள் பற்றியும் அவற்றைக் களையும் வழிகள் பற்றியும் தியானிக்கும் சிந்தனை முறையை அஸ்திவாரமாகக் கொண்டது. பௌத்த தர்மம் உலகின் சூழலியல் பிரச்னைகளுக்கு ஏதானும் தீர்வுகளை அளிக்க முனைகிறதா?. சூழல் பாதுகாப்பு முறைகள் மற்றும் சூழலியல் சீர்கேடு காரணமாக எழுந்துள்ள அச்சுறுத்தல்கள் – இவை ஒப்பீட்டளவில் புதிய பிரச்னைகள். சுற்றுப்புறம் மாசுபடுதல் பௌத்த சிந்தனை துவங்கிய காலத்தில் அறியப்படாத ஒரு பிரச்னை. எனவே சூழலியல் பிரச்னை குறித்த நேரடிக்… Read more

  • ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில்  இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான… Read more

  • ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக்… Read more

  • ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற… Read more

  •   ரொம்ப நாளாக ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த வெண் காகிதம் அன்று காலை ஒரு மேசையின் மேல் வைக்கப்பட்டது. காகிதத்தை இத்தனை நாள் ஒளித்து வைத்தவன் அந்த காகிதத்தில் சில குறிப்புகளையும் பெயர்களையும் ஒரு நீண்ட கணக்கையும் எழுதி வைத்திருந்தான். ஐந்தாறு தொலைபேசி எண்களும் அந்த காகிதத்தில் கிறுக்கப்பட்டிருந்தன. காகிதத்தின் சொந்தக்காரன் அன்று பல முறை அந்த காகிதத்தை திரும்ப திரும்ப நோக்கிக் கொண்டிருந்தான். அதன் மேல் அன்று ஏற்படுத்தப்பட்ட சுருக்கங்கள் அந்த காகிதத்துக்கு அத்தனை சுகமாயிருக்கவில்லை.… Read more

  • அணு எடை

    சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு. ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே… Read more

  • சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை… Read more

  • தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக்… Read more

  • அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள். ஒரு தமிழ் தொலைக்காட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி லாக் டௌனின் போது புத்த பூர்ணிமா தினத்தன்று ஒலிபரப்புவதற்கென ஒரு தம்ம உரையை மொபைலில் பதிவு செய்தேன். சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த உரையை ஒலிபரப்ப இயலாது என தொலைக்காட்சி சொல்லிவிட்டது. அந்த உரையை யூட்யூபில் ஏற்றினேன். சுட்டியை கீழே காணலாம். Read more

  •   கடலுள் நுழையுமுன்நதிக்கு நடுக்கமேற்படுமெனகூறப்படுகிறது மலைகளின் உச்சிகளிலிருந்துகாடுகளினூடேகிராமங்களினூடேவளைந்து செல்லும் பாதையில்தான் வந்தவழியைபின்திரும்பி நோக்குகிறாள்தன் முன்னம்பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்இதற்குள் நுழைவது என்பதுநிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிரவேறேதுமில்லைஆனால் வேறு வழியில்லை! நதி பின்திரும்பிச் செல்ல முடியாதுயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாதுஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லைகடலுள் நுழையும்இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,கடலாக மாறுவதைப் பற்றியது Read more

  • வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப… Read more

  • இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும் நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால், தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையும் கற்பனையையும் கலந்து கொத்திப்பூசி ஒரு கதையை எழுப்பும் பிரயத்தனத்தில் இரவுபகலாக எண்ணங்களை பதனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறுதுளையிலிருந்து பீறிடும் நதிக்கான காத்திருப்பில் அலைவுறுகிறேன். தலைப்பை கூட முடிவுசெய்தாயிற்று – ஒருமுறை தொட்ட நதி. Read more

  • பொறியியல் இரண்டாமாண்டு பயிலும் என் மகள் – பூஜா – வலைப்பதிவு எழுதத் துவங்கியுள்ளார். அவர் எழுதிய முதல் பதிவு – சிங்கங்களும் மான்களும் Read more

  • இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது. பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை. — மாகண்டிகர்… Read more