-
பௌத்த சிந்தனையின் படி ‘துக்க’ என்னும் பாலி சொல் எதைக் குறிக்கிறது? பொதுவாக பௌத்த இலக்கியங்களில் அதிகம் கோடிட்டுக் காட்டப்படும் பிறப்பு, நோய், மூப்பு, சாவு முதலான நான்கு அடிப்படை துக்கங்களை மட்டும் அந்தச் சொல் குறிப்பதில்லை. பொதுவான அன்றாட வாழ்க்கையில் நம் சுயத்துடன் நம்மை நாம் பிணைத்துக் கொள்ளும் போது தோன்றும் அதிருப்தி நிலையையும் ‘துக்க’ எனும் சொல் குறிக்கிறது. ‘துக்க’ எனும் பாலி மற்றும் சமஸ்கிருதச் சொல்லை ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “suffering’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டமை… Read more
-
Been avoiding the mini series Chernobyl despite very good reviews. Didn’t have the heart to watch it for no specific reasons. My daughters persuaded me to watch it and I succumbed. I have a faint memory of hearing about Chernobyl accident through radio news when I was waiting for my results of 12th standard board… Read more
-
1 வரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை இடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில் கால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு பிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன் அடுத்த இலக்கை அடைவதற்கு வரைபடத்தை காணவில்லை பிரக்ஞையை பின்னுக்கு நகர்த்தி தொடக்கத்துக்கு வந்தபோது பழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன. 2 கால இயந்திரத்தில் பயணித்தேன் வரைபடத்தை எடுக்க மறக்கவில்லை எதிர்காலத்தில் இருந்த வீட்டை அடைந்து உள்நுழையாமல் வரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன். 3 வரைபடத்தை பறக்கவிட்டேன் வளைந்து வளைந்து… Read more
-
Clinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது… என்னுள்ளில் நிகழும் உரையாடல்கள் இரைச்சலாக ஒலிக்கின்றன காதுகளை அடைத்துக் கொண்டாலும் இரைச்சல் அடங்குவதில்லை என்னைத் துரத்தும் நிழல்களிலிருந்து தப்பியோட முடிவதில்லை விடியலை தவிர்க்க தூங்காமல் இருத்தலும் விடிந்த பின் போர்வைக்குள் ஒளிந்து கிடப்பதுமாய் என் தினங்கள் நகர்கின்றன உண்மையில் தினங்கள் நகர்கின்றனவா துக்கம் என்றால் அழுது அதனைத்… Read more
-
சர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு… Read more
-
The resting mind was happy. It was soaking merrily in imagination. To explain to itself in its imagination scenes to come in the outside world is its favourite game. Without prior notice, the mind’s climate changed. A small depression was formed. There was the danger of its enlargement. To turn towards disastrous consequences, changes came… Read more
-
I saw a doorkeeperwho madethe guests wait at the entrance of a crowded eateryand let them inas the rush became thin.Memories that cannot toleratethe present state and passwithout a pause.Mull over sufferingsof the past.Think about the futureand fret.Can I get a doorkeeperwho would stopthe intrusive memories at the doorstep,check and filter through inside? English Translation by Sri N Srivatsa To… Read more
-
சமகால நிகழ்வுகளைப் பற்றி அதிகம் என் வலையில் எழுதியதில்லை. ஒரே ஒரு முறை எழுதியிருக்கிறேன். நெல்சன் மாண்டேலா காலமான போது எழுதிய பதிவு அது. அதற்கு பலவருடம் முன்னர் என் நெருங்கிய நண்பன் ஒருவன் அகாலமாக இறந்த போது எழுதியது. மாண்டேலா ஓர் ஆதர்சம். அவர் இறப்பை மானிடத்தின் இழப்பாக நோக்கினேன். நண்பனின் மரணம் ஏற்படுத்திய துயர் எழுத்து வடிகாலைத் தேடியது. மாண்டேலா, நண்பன் – இருவரின் மறைவு ஏற்படுத்திய பாதிப்பின் மனத்துயர் போலில்லாமல் இந்த சமகால… Read more
-
இரண்டு புற பாறைகள் இடைவெளி குறைந்து கொண்டே நடுவில் இருக்கும் என்னை இறுக்கின. மூசசுத் திணறி இதயம் துடிதுடித்து நசுங்கி மரணிப்பது போல் இருந்த நொடிகளிலும் பாறைகள் சிந்திக்குமா என்ற கேள்வி எழுந்தது ஒரு பாறை நேரம் ; இன்னொரு பாறை சூழல் என்பதாக ஓர் உவமானத்தை யோசித்த போது ஒன்று தெளிவானது பாறைகளின் சிந்தனை என் சிந்தனையன்றோ! இல்லையில்லை…பாறைகளே என் சிந்தனையன்றி வேறில்லை பலங்கொண்ட புஜங்கொண்டு பாறைகளை தள்ளிப் பிளந்தெடுத்து கற்களாகப் பிய்த்தெடுத்து ஒவ்வொன்றாக எறியும்… Read more
-
நேரம் சரியில்லை என்று சிந்தித்துக் கொண்டிருந்த மனதை யாரோ படித்து விட்டார்கள். ‘களுக்’ என சிரிக்கும் ஓசை. மனம் துணுக்குற்றது. ‘யார் சிரித்தது’ ‘நான் தான் நேரம்’ ‘நான் நினைத்ததை எப்படி அறிவாய் நீ?’ ‘உனக்குள்ளேயே இருக்கிறேன் ; உன்னை அறிய மாட்டேனா நான்?’ ‘எனக்குள் இருக்கிறாயா? இது என்ன நகைச்சுவை?’ ‘உனக்குள் தான் நான் இருக்கிறேன்…’ ‘இது எப்படி சாத்தியம்?’ ‘நடந்தவைகளை எண்ணி குற்றவுணர்வு அடைந்த போதெல்லாம் என்னுடைய நேற்றைய வடிவமாக உன்னுள் நான் இருந்திருக்கிறேன்’… Read more
-
அலுவலகத்தில் நடக்கவிருந்த டவுன்ஹால் நிகழ்வில் இகீகை என்னும் ஜப்பானிய காட்செப்ட் பற்றி உரையாற்றலாம் என்று அதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருந்தேன். வாழ்நாள் முழுக்க சலித்துப்போகாமல் ஒரு வேலையை செய்வோமாயின் அது எந்த வேலையாய் இருக்கும்? இந்த வினாவிற்கு விடையளிக்கத் தேவையான எண்ணச்சட்டகத்தை விவரிக்கிறது இகீகை. பதற்றம் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருந்தேன். எதற்கெடுத்தாலும் பயம். நிதானமில்லாமல் அவஸ்தைபட்டுக் கொண்டிருந்தது மனம். அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் படபடப்பு. சில சமயம் அழைப்புகளை ஏற்காமல் கூட இருந்திருக்கிறேன்.… Read more
-
“இந்து கோயிலை உடைத்துவிட்டார்கள் ; அழித்துவிட்டார்கள்” என்று என்றோ நடந்த தாக்குதல்களை நினைத்து இன்றைய இந்துத்துவர்கள் வேற்று மதத்தவரின் மீது பகைமையுணர்வு கொள்வதும் வெறுப்பு காட்டுவதும் தினம் பார்க்கக்கூடியதாய் இருக்கிறது. உடைந்த கோயில்களை பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது இயற்கை. ஆனால் அந்த அழிப்பு நடந்த வரலாற்று காலத்தில் வன்முறை வாழ்வின் அம்சமாக இருந்தது. நில விஸ்தரிப்பை மட்டுமே இலக்காகக் கொண்ட பேரரசர்களின் அணுகுமுறைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டு வந்தது. கைப்பற்றிய வேறு நாட்டின் பண்பாட்டுச் சின்னங்களை அழித்து… Read more
-
அவர்களுக்கு ஒரு தெரிவு அளிக்கப்பட்டது – அரசர்கள் ஆகலாம் அல்லது அரசர்களுக்குச் செய்தி தெரிவிப்பவர்கள் ஆகலாம். குழந்தைகள் வழக்கமாகத் தேர்ந்தெடுப்பதைப் போல அவர்கள் அனைவரும் செய்திகள் சேகரித்து அவற்றைத் தெரிவிப்பவர்கள் ஆனார்கள். ஆகையால் இந்த உலகைச் சுற்றித் திரிந்தபடி – அரசர்கள் இல்லாது போனபின் – அர்த்தமிழந்து போன தகவல்களை மட்டும் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக் கொள்ளும் செய்தி தெரிவிப்பாளர்கள் அவர்கள். இந்தக் கேவலமான வாழ்க்கைக்கு ஒரு முடிவுகட்ட வேண்டுமென்று அவர்களுக்கு விருப்பந்தான் ; என்ன செய்ய? அவர்கள்… Read more
-
அது புதிதாய் என் கண்ணில் பட்டது. வெற்றிடமாகத் தெரிந்த இடத்தின் மேல் எதுவோ பூசப்பட்டிருக்கிறது. ஒரு சில கணங்கள் என் புலனுக்கு உணவானது அந்த தோற்றம். அருகில் நின்றவரிடம் அது பற்றி கேட்டேன். அது ஒரு நிறம் என்றார். அதன் பெயர் நீலம் என்றார். பின்னொரு சமயம் அந்த தோற்றம் மீண்டும் என் கண் புலனின் கவனத்துக்கு வந்த போது அது நீலம் என்று சொன்ன நபர் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தார். இந்த நீல நிறத்தை… Read more
-
வந்த நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது முதற்கண் எனது தவறு. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். உடன் உள்பெட்டிக்குள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் விதவை. தன் குழந்தை அமெரிக்காவில் தன் பெற்றோருடன் இருக்கிறான் என்ற தகவல்களுடன் தொடங்கியது பரிமாற்றம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க பெண் ராணுவ வீரரின் வாழ்க்கை, அனுபவம் பற்றி அறியக் கிடைக்கும் என்ற எழுத்தாளனுக்கிருக்கும் க்யூரியாஸிட்டி என்னை உரையாடலில் ஈடுபட வைத்தது. இரு மாதங்களுக்கு முன்னர் அவர் நெருங்கிய… Read more
-
“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?” Read more
-
பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன். நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன்… Read more
-
தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன்.… Read more
