-
வந்த நட்பு வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது முதற்கண் எனது தவறு. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க ராணுவத்தில் வேலை பார்க்கும் பெண் அவர். உடன் உள்பெட்டிக்குள் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார். தான் விதவை. தன் குழந்தை அமெரிக்காவில் தன் பெற்றோருடன் இருக்கிறான் என்ற தகவல்களுடன் தொடங்கியது பரிமாற்றம். ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க பெண் ராணுவ வீரரின் வாழ்க்கை, அனுபவம் பற்றி அறியக் கிடைக்கும் என்ற எழுத்தாளனுக்கிருக்கும் க்யூரியாஸிட்டி என்னை உரையாடலில் ஈடுபட வைத்தது. இரு மாதங்களுக்கு முன்னர் அவர் நெருங்கிய… Read more
-
“A person may be burst out laughing while being caned and dissolve into tears when hit by a merest flower! It is the feeling that causes these waves of emotion. Who does not have this experience?” Read more
-
பாவங்கள் பல செய்துவிட்டு அவற்றை கரைக்க கங்கை நதி நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை அணுகினார் நாரத முனி. விதவிதமாக அவன் பண்ணிய பாவங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு பதறிப்போனார். யாத்திரீகனோ அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ‘கங்கை நதி சென்று நீராடி என் பாவங்களைக் கழுவிக் கொள்வேன்: கவலைப் பட ஏதும் இல்லை’ என்று கூறினான் அவன். நாரதர் ஆகாய மார்க்கமாக விரைந்து கங்கா தேவி முன் சென்று நின்றார். ‘என்ன பதற்றம் முனிவரே? ஏன்… Read more
-
தனிமனித வழிபாட்டை எதிர்க்கும் நவீனவாதி நான். ஆனாலும் இன்று ஒரு விஷயம் நடந்தது. சிரி போர்ட் ஆடிட்டோரியத்தில் ஒருவர் உரையாற்றப்போகிறார் என்ற அந்த விளம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளில் பார்த்தோம். மனைவியும் இளையமகளும் செல்வதாக உடன் முடிவெடுத்தனர். எனக்கு இரண்டு மனமாக இருந்தது. இன்று விடுமுறை நாள் இல்லை. கடமையா ஆர்வமா எது முக்கியம் என்ற ஊசலாடலில் என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. நேற்றிரவு ஒரு யோசனை தோன்றிற்று. வீட்டில் இருந்து வேலை செய்யும் அனுமதி பெற்றேன்.… Read more
-
நன்றி : காலச்சுவடு Read more
-
தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை. Read more
-
எல்லியின் காணாமல் போதல் ஒரு விபத்து எனில் அவள் யார் என்ற கேள்விக்கான பதில் நம்முடைய கற்பனையில் என்னவாக இருக்கும்? அது விபத்தில்லை ; பிரக்ஞை பூர்வ நிகழ்வு எனில் நம்முடைய கற்பனையில் எல்லி யார்? Read more
-
குளிக்காத சுத்தமில்லா தோற்றம், முரட்டுத்தனமான பேச்சு, சில சமயம் பித்து நிலை மிகுத்து ஏறுமாறான நடத்தைகள் என்று சித்தர்கள் வலம் வந்தனர். தர்க்க ஒழுங்கு மாறாத அணுகுமுறையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட பௌத்தத்தில் சித்தர்கள இயக்கம் ஒரு முரண் போலத் தோன்றலாம். Read more
-
டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் – சிறுகதை தொகுப்பிற்கு சொல்வனம் (2/12/2016) இதழில் ஒரு விரிவான விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார் நண்பர் கிரிதரன். இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்பப் பணியில் இருக்கும் கிரிதரன் சொல்வனம் இணைய இதழ் தயாரிப்பில் தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கிவருகிறார். பிரதிகளை எடிட் செய்வதில் அவரிடம் இருக்கும் தனித்திறமையை நானறிவேன். சில வருடம் முன்னர் சொல்வனத்தில் வெளிவந்த என்னுடைய ஓரிரு கதைகளின் வடிவம் குறித்து அவருடன் நிகழ்த்திய கருத்துப்பரிமாற்றம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.… Read more
-
பழக்கம் எனும் மகாசக்தி பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து படுக்கைக்கருகே வைத்து கண்ணை மூடிப் படுத்துக் கொண்டேன். +++++ நட்பு நண்பர்களின் தொடர்பில் இருப்பதில்லை என்ற குற்றவுணர்வு வாட்டுவதாக நினைத்து… Read more
-
Taxi Driver மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில்,… Read more
-
எங்கிருந்தாய் இதுவரை? விடையற்ற வினாவின் சுவாரஸ்யம் விரியும் இது சரியா? விடை தேடும் பிரயத்தனம் விடுதலே மிகச்சரி எங்கு செல்கிறோம்? இலக்குகள் தொலைத்து நிகழ்வுகள் லயித்து வினாக்களில் திளைக்கிறோம் என்ன முடிவு? வினாக்குறி விலகி வியப்புக்குறி விழுந்து விடை நிகழும் Read more
-
அரட்டை கச்சேரி முடிய நள்ளிரவானது முன்னறிவிப்பின்றி கொட்டியது மழை ஐந்து நிமிட நடைத் தொலைவில் வீடு ஸ்லிப்பர் தூக்கியிறைத்து தோற்றுவித்த நீரூற்று பின் வர வேகமாய் நடந்தேன் தலையை நனைத்த நீர் உதட்டில் பட்டு உப்புக்கரித்தது வீட்டை அடைந்து தலை துவட்டி வழிந்த துளிகளும் உப்புகரித்தன களைந்த சட்டையை பிழிகையில் உருவாகியதோர் அறைக் குட்டை அரட்டையில் வயது என்னவென்று கேட்ட நண்பரிடம் சொன்ன பொய்யின் எண்ணுரு வடிவில் உப்புக்கறையுடன் வற்றிப் போனதந்த குட்டை என் மூச்சிரைச்சல் நிற்கும்… Read more
-
இபா தன்னுடைய வலைதளத்தில் என் சிறுகதை தொகுப்பு – “டைசுங் நகரில் புத்தர் கோயிலுக்கு” மதிப்புரை எழுதியிருக்கிறார். முதுபெரும் எழுத்தாளருக்கு என் நன்றிகள். என் கால்கள் தரையில் மேவாமல் சற்று அந்தரத்திலேயே நிற்கின்றன. டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் Read more
-
பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee) Read more
-
கோயிலில் இருந்த மரம் தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது பாம்பென வேர்கள் படர்ந்து இறுகின சன்னிதிகள் காலியான சந்நிதானத்துள் பிரதிஷ்டை கொள்ள வேண்டி ஓடின வேரின் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து கடவுளாகி மறைந்த பின்னர் சட்டகத்துள் வைத்து தொங்க விட Read more
-
“எதற்காக எழுதுகிறேன்?” நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார்… Read more
-
மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார். Read more
-
சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. பக்கங்கள் : 208 விலை : ரூ 190 Read more
-
ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “… Read more
