Uncategorized

  • மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள் பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே!… Read more

  • “சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி” சும்மா இருக்க முடியாததால்… Read more

  • சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”… Read more

  • அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும். பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம்.  கிணற்றோரக்… Read more

  • 27.12.2013 அன்று வலையேற்றிய ”குளம் கோவில் புத்தகம்” என்கிற பதிவு 2.1.2014 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் அச்சேறியிருக்கிறது. Read more

  • கருணையுள்ளம் பருத்தியாகி திருப்திகுணம் நூலாகி தன்னடக்கம் முடிச்சாகி வாய்மை முறுக்காகி அமைந்த பூணுலொன்று உங்களிடம் இருந்தால் அதை எனக்கு அணிவியுங்கள் அது அறுந்து போகாது ; அது அழுக்காகாது ; எரிந்து போகாது ; தொலைந்தும் போகாது ; நானக் சொல்கிறான் அத்தகைய பூணூலை அணிந்தோரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் -குரு நானக் ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம்… Read more

  • சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு… Read more

  • கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப்… Read more

  • (wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html) குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று… Read more

  • கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள்.… Read more

  • மனித உணர்வுகளின் நம்பிக்கைகளின் முன்னர் ஓடி ஒளியும் காலமும் எல்லைகளும் Read more

  • ஜான் லீகார்ரே (John Le Carre) யின் “The Constant Gardener” நாவல் திரைப்படமாக 2005இல் வெளியானது. நாவலின் தலைப்பே திரைப்படத்துக்கும். எட்டாண்டுகள் முன் வெளியான இத்திரைப்படத்தை நேற்று தொலைக்காட்சியில் பார்த்தேன். தூங்கப் போகலாமா என்று யோசித்துக் கொண்டே சேனல்களை மாற்றிக் கொண்டிருந்த போது ஜீ தொலைக்காட்சியில் இப்படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். நடிகை ரேச்சல் வெய்ஸ் (Rachel Weisz) –க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்ற படம் என்று என்று எனக்கு தெரியும். கொஞ்ச நேரம்… Read more

  • தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக… Read more

  • இளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது. குரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும்! 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories  சிறுகதைத் தொகுதியில்  ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக்… Read more

  • தத்துவங்களின் குறியீடாக விக்கிரகங்கள் உருவாக்கப்படுகின்றன. தத்துவங்களை ஆழமாக தியானிக்கும் பொருட்டு உருவான மதங்கள் சிந்திக்கும் பயிற்சியில்லாத சாமானியர்களுக்காக விக்கிரகங்களை படைத்துக்கொண்டன. “புத்தரைத் தேடாதே ; புத்த நிலையைத் தேடு” என்று முழங்கினார் புத்தர். ஆனால் தேரவாத பௌத்தத்திலிருந்து கிளைத்த பல்வேறு பௌத்த பிரிவுகள் புத்தரை ஆசானாக குருவாக மனிதராக மட்டும் எண்ணாமல் பரமனாகவும் ஆக்கின. பிரம்மாண்ட புத்தர் சிலைகள் காந்தாரத்தில் உருவாகத் தொடங்கின. பின்னர் பௌத்த உலகெங்கும் புத்தர் சிலைகள், விக்கிரகங்கள் பல்கிப் பெருகின. தியான நிலைப்… Read more

  • ”மனதின் சாராம்சம் நிரந்தரமான தூய்மையை கொண்டதாக இருந்தாலும், அறியாமையின் தாக்கம் சூழல்-சார் மனதை சாத்தியமாக்குகிறது. சூழல் சார்ந்ததாக இருந்தாலும், மனம் நிரந்தரமானது ; மாசுமறுவற்றது ; சுத்தமானது ; மாற்றங்களுக்கு உட்படாதது. அதனுடைய மூல இயல்பு பிரத்யேகத்தன்மையில்லாமல் இருப்பதால், பல்வேறு முறையிலான இருப்பை எங்கும் சிருஷ்டி செய்தவாறு இருந்தாலும், அது தனக்குள் ஒரு மாற்றமுமிலாமல் தன்னை உணர்கிறது. விஷயங்களின் ஒட்டுமொத்தத்தின் ஒற்றைத் தன்மை ஏற்கப்படாத போது, பிரத்யேகத்தன்மையுடன் கூடிய அறியாமை எழுகிறது ; சூழல்-சார் மனதின் எல்லா… Read more

  • ஆகாசஜன்

    மகாப்பிரளயத்தில் எல்லாரும் அழிந்துவிட்டனர் கொல்லாமல் விடப்பட்ட ஜீவர்களைத்தேடி ஒருவர் விடாமல் அழித்து வந்தான் மிருத்யூ. அவன் பாசக்கயிறிட்டு எல்லாரையும் அழித்துவிட்டான். ஒரே ஒருவனைத் தவிர, “பிரம்ம”ப்பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. எஜமானன் எமன் முன்னர் சென்று முறையிட்டான். “எல்லோரையும் நீ அழித்துவிட இயலாது. ஜீவர்களின் கருமங்களை நீ அறிந்தால் மட்டுமே அவர்களின் ஆயுட்காலத்தை நீ அறியமுடியும்” என்றான் எமன். சாகாமல் எஞ்சியிருந்தவனின் கருமங்களைத் தேடி பிரபஞ்சமெங்கும் தேடி அலைந்தான் மிருத்யூ எஞ்சிய கருமங்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. வெறும்… Read more

  • இசைக்கருவியொன்றை மீட்டும் ஒருவர் சரியான கம்பிகளை அழுத்துகிறோமா என்றோ கருவியை சரியாக ஏந்திக்கொண்டிருக்கிறோமா என்றோ யோசித்துக் கொண்டே வாசிப்பாரானால் அவரால் கேட்பவர்களை மகிழ்விக்க இயலுமா? இலக்கணப்பிழை அல்லது சொற்பிழை பற்றிய ஐயங்களுடன் தன்னுடைய வாழ்நாளின் அதிமுக்கியமான படைப்பை ஒரு எழுத்தாளரால் எழுதி விட முடியுமா? நாட்டியக் கலைஞர் கால்களை சரியான திசையில் உயர்த்தியிருக்கிறோமா என்ற குழப்பத்துடன் ஆடுகையில் அழகான நாட்டிய அனுபவத்தை பார்வையாளர்கள் பெறுவார்களா? கட்டுக்கோப்பான பயிற்சி கலைக்கு அத்தியாவசியமாகிறது. அயராத ஆனால் ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சியின் மூலமாக… Read more

  • நண்பர் ராம் எழுதிய கவிதையொன்றை வல்லினம் இதழில் வாசித்தேன். கவிதைகள், நகைச்சுவை கட்டுரைகள் மற்றும் இசை விமர்சனங்கள் என்று எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார். தகவல் தொழில் நுட்பத்துறைப் பணியில் இருக்கும் இந்த இளைஞர் பல உயரங்களை தொடப் போகிறார். ராமின் அனுமதியுடன் கவிதையை இங்கு இடுகிறேன். மாயை எந்த மனநிலையிலிருப்பினும் ஒரு பாடல் என்னைத் திசை திருப்பிவிடுகிறது, இன்று எவ்வளவு விட்டேற்றியாயிருப்பினும் ஒரு கவிதை எனக்கு புன்முறுவலைத் தந்துவிடுகிறது, எதுவுமே வேண்டாம் என்று சூன்யமாயிருப்பினும் வெகு உயரே… Read more

  • சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ… Read more