Category: Personal Truths
-
அந்தப் பத்திரிகை மேஜையின் மீது திறந்த நிலையில் கிடக்கிறது. நான் அதன் பக்கத்தைத் திருப்புகிறேன் — பிறகு நிறுத்துகிறேன். ஒரு முழுப் பக்க விளம்பரம் என்னை உற்றுப் பார்க்கிறது. ஒளிரும் முகத்துடனும் அமைதியுடனும் இருக்கும் அனா டி அர்மாஸ், ஒரு வைர நெக்லஸை அணிந்திருக்கிறார். அந்த ஆபரணம் அவரது கழுத்தெலும்பில் வளைந்து, மேம்படுத்தவே தேவையில்லாத அவரது அழகை மேலும் மெருகூட்டுகிறது. ஒரு கணம், நான் எதைப் பார்க்கிறேன் என்று எனக்கே உண்மையாகத் தெரியவில்லை — அந்த நடிகையையா,…
-
ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”…
-
லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா…
-
தகவல் – ஆதாரம் என்னும் ரயில்பாதையில் பயணிக்கிறது தர்க்கம். தர்க்கம் வாழ்க்கையின் இன்றியமையா அங்கம். நாம் வாழ்கிறோம் என்பதற்கு நமக்கு தர்க்கம் தேவைப்படுகிறது. நிரூபித்தல் வாழ்க்கையின் தவிர்க்க முடியா செயல்முறை.
-
“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி” சும்மா இருக்க முடியாததால்…
-
(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்) இடம் காலம் என்ற இரட்டை தொடர்ச்சிகள் பிரக்ஞை என்றொரு மறைபொருளின் நூல் பொம்மைகள் நரைத்த மீசை இரைந்த முடி கொண்ட இயற்பியல் மேதை உணர்ந்து சொன்னான். +++++ சுவரில் சாய்ந்து அமர்ந்த படி உறங்கியபோது அண்ட வெளியில்…
-
பலன் வினையைச் சார்ந்தது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மிக சட்டங்களுக்கு உட்பட்டது. இவ்விரண்டு கூற்றுக்களும் உண்மையெனில், தனி மனிதன் நிஜமாகவே சுதந்திரமானவனா? சுதந்திரமும் இவ்விரண்டு கூற்றுக்களும் வெவேறானவை அல்ல. வினையை தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அதே சமயம், நமது தெரிவுக்கு நாமே பொறுபேற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. மலையிலிருந்து குதிக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது. அப்படி குதித்தால் எலும்பு நொறுங்கி இறக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அறிவியல் உண்மை நமக்கு தெரிந்திருக்க வேண்டும். “அது எனக்கு…
-
குளத்திலே கல்லை விட்டெறியும்போது கல் திரும்ப பறந்து வந்து நம் தலையில் விழுமெனில், கல்லெறியும் விளையாட்டு நின்று போகும். பலன் என்னவாக இருக்கும் என்ற யூகம் இல்லாமல் நாம் வினையொன்றும் புரிவதில்லை. பலன் காலம் என்ற காரணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் கால இடைவெளியை நிர்ணயிக்கின்றன. சூழ்நிலை நிர்ப்பந்தத்தாலொ, தெளிவு பெறாத மனோநிலையிலோ,வினையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பத்தாலோ எதிர்பாராத பலனை அடைகிறோம். பின்னர் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் என்ற வாதங்களுக்கும்…