Author: Ganesh Venkatraman
-
Taxi Driver மிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில்,…
-
எங்கிருந்தாய் இதுவரை? விடையற்ற வினாவின் சுவாரஸ்யம் விரியும் இது சரியா? விடை தேடும் பிரயத்தனம் விடுதலே மிகச்சரி எங்கு செல்கிறோம்? இலக்குகள் தொலைத்து நிகழ்வுகள் லயித்து வினாக்களில் திளைக்கிறோம் என்ன முடிவு? வினாக்குறி விலகி வியப்புக்குறி விழுந்து விடை நிகழும்
-
அரட்டை கச்சேரி முடிய நள்ளிரவானது முன்னறிவிப்பின்றி கொட்டியது மழை ஐந்து நிமிட நடைத் தொலைவில் வீடு ஸ்லிப்பர் தூக்கியிறைத்து தோற்றுவித்த நீரூற்று பின் வர வேகமாய் நடந்தேன் தலையை நனைத்த நீர் உதட்டில் பட்டு உப்புக்கரித்தது வீட்டை அடைந்து தலை துவட்டி வழிந்த துளிகளும் உப்புகரித்தன களைந்த சட்டையை பிழிகையில் உருவாகியதோர் அறைக் குட்டை அரட்டையில் வயது என்னவென்று கேட்ட நண்பரிடம் சொன்ன பொய்யின் எண்ணுரு வடிவில் உப்புக்கறையுடன் வற்றிப் போனதந்த குட்டை என் மூச்சிரைச்சல் நிற்கும்…
-
இபா தன்னுடைய வலைதளத்தில் என் சிறுகதை தொகுப்பு – “டைசுங் நகரில் புத்தர் கோயிலுக்கு” மதிப்புரை எழுதியிருக்கிறார். முதுபெரும் எழுத்தாளருக்கு என் நன்றிகள். என் கால்கள் தரையில் மேவாமல் சற்று அந்தரத்திலேயே நிற்கின்றன. டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்
-
பஞ்சாபி இலக்கியத்தின் ஷேக்ஸ்பியர் என்று கருதப்படும் வாரிஸ் ஷா சொன்னார் :- “தெய்வக் காதலை சந்திக்கும் ஆத்மா என்ற இந்த ஒட்டுமொத்தக் குறிப்பு பெரும் ஞானத்தின் அடிப்படையில் சமைக்கப்பட்டிருக்கிறது” (Eh rooh qalboot da zikr sara nal aqal de mel bulaya ee)
-
கோயிலில் இருந்த மரம் தனக்குள் கோயிலை அடக்கி வளர்கிறது பாம்பென வேர்கள் படர்ந்து இறுகின சன்னிதிகள் காலியான சந்நிதானத்துள் பிரதிஷ்டை கொள்ள வேண்டி ஓடின வேரின் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் மரங்கள் கோயில்களுக்குள் புகுந்து கடவுளாகி மறைந்த பின்னர் சட்டகத்துள் வைத்து தொங்க விட
-
“எதற்காக எழுதுகிறேன்?” நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார்…
-
மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார்.
-
சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. பக்கங்கள் : 208 விலை : ரூ 190
-
ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “…
-
சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று! இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான்…
-
தெருப் பெயர்கள் மாற்றப்பட்டு வரலாற்றின் பக்கங்கள் அழிக்கப்பட்டு பொது மனதின் பிம்பங்கள் துடைக்கப்பட்டு கற்பனையான இறந்த காலத்தின் சித்திரங்கள் வரையப்பட்டு…. +++++ தேடிப் போகும் வீடு இன்னும் கிடைக்கவில்லை இணைய வரைபடத்தின் புதுப்பதிப்பை இன்னும் தரவிறக்கவில்லை குறைவான தகவல் வேகம் தாமதப்படுத்துகிறது தேடிப் போகும் மனிதர்களின் பெயர்களும் மாறியிருக்கக் கூடுமா? +++++ கல்லறையிலிருந்து எழுந்து வாளேந்தி வடக்கு நோக்கி சென்றதும் இன்னொரு கல்லறையிலிருந்து குதித்து குதூகலமாய் வடக்கு நோக்கி சென்றதும் நடுவழியில் சந்தித்துக் கொண்டன ஒன்றின் ஆவேசமும்…
-
அசோகர் என்ற ஒருவர் இருந்தாரா அல்லது வெறும் தொன்மக்கதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரமா என்ற ஐயம் துவக்க கால பிரிட்டிஷ்-இந்திய வரலாற்றறிஞர்களிடையே இருந்து வந்தது.
-
மூன்று மாதங்களுக்கு முன்னர் பலவீனமானதொரு தருணத்தில் அகிரா குரோசவாவின் ஐந்து படங்கள் அடங்கிய பேக் ஒன்றை ஒரு கடையில் வாங்கித் தொலைத்துவிட்டேன். தினம் ஒரு படம் என்று ஐந்து நாட்களில் ஐந்து படங்கள். இணையத்தில் எங்காவது குரொசவாவின் வேறு படங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து தோல்வியடைந்தேன். அமேசானில் வேறு மூன்று திரைப்படங்கள் அடங்கிய பேக் ஒன்று, தனித்தனியாக இரண்டு டிவிடிக்கள் என மேலும் ஐந்து படங்கள் வாங்கினேன்….ஹ்ம்ம் குரொசவாவின் மொத்தம் பத்து படங்கள்! ( Drunken…
-
“என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும். ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின்…
-
முதலில் எனக்கு அறிமுகமானவர் மண்ட்டோ. காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாயிலாகத்தான் மண்ட்டோவின் உலகு எனக்கு அறிமுகமானது. டோபா டெக் சிங் – சிறுகதைதான் நான் படித்த முதல் மண்ட்டோ படைப்பு. அந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன், இந்தி மொழி நாடகமாக டோபா டேக் சிங்-கை காணும் சந்தர்ப்பம் அமைந்திருந்தது. மனநல மருத்துவமனையை இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் வக்கிரங்களின் படிமமாக மாற்றிய கச்சிதமான சிறுகதை அது. நகைச்சுவை, யதார்த்தம், நகைமுரண், வரலாற்றுச் சோகம் மற்றும்…
-
பாண்டவர்கள் யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்தின் முடிவில் சிறப்பு மரியாதை அளிக்க கிருஷ்ணனை அழைத்தனர். இதனால் தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதாக நினைத்த சிசுபாலன், கிருஷ்ணனைத் திட்ட ஆரம்பித்தான். எல்லாரும் கோபப்பட்டார்கள், ஆனால் கிருஷ்ணன் கோபப்படவில்லை. அத்தனையையும் அவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். இருந்தாலும், நூறாவது வசைக்குப் பின், கிருஷ்ணன் கூர்மையான தன் சக்கரத்தை வீசியெறிந்து சிசுபாலன் தலையைத் துண்டித்தான். காரணம், மன்னிப்பின் எல்லையைக் கடந்து விட்டான் சிசுபாலன். சார்லி ஹெப்டோ, பகடிகளைத் தாங்கி வரும் பிரஞ்சு மொழி…
-
சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன் ‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்! நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு ! மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று…