Author: Ganesh Venkatraman
-
குதூகலம். மகிழ்ச்சி. சந்தோஷம். உவகை. சொற்கள் உணர்வின் அடையாளமாக பரிமாறப்பட்டன. திகட்டிவிட்டதென்று எழுந்து கொள்ள முடியாமல் முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது. அலுப்பு சலிப்பு வெறுப்பு இயலாமை சொற்களில்லாமல் சொன்னது உடல் மொழி. சொற்கள் முற்றுப்புள்ளியை அழைத்து வந்து பொருத்திக்கொண்டு அமைதியாயின. புன்னகை புன்முறுவல் குறும்புப்பார்வை வெடுக்கென எழுதல் உடல்மொழி கட்டைவிரலை உயர்த்திக்காட்டி வெளியேறியது… சொற்கள் அமைதியாய் காகிதத்தில் வந்தமர்ந்தன கவிதையாக. இறுமாப்புடன் திரும்பிய உடல்மொழி கவிதையாக உருக்கொண்ட சொற்களைக்கண்டு மோனமாகி நெற்றி அகன்று சிந்தனை வயப்பட்டது.…
-
சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில்…
-
சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் வரும் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி
-
என் கவிதைக்கான கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்தேன். பீய்ச்சியடித்த ஊற்று, மணலில் சீறிப்பாய்ந்து பாறைகளைத்தள்ளி விரையும் காட்டாறு. அதி உச்சியின் மேலிருந்து கொட்டும் அருவி. சமவெளிகளில் நகரும் நதி. கிளைக்கும் கால்வாய்கள். புனித நகரங்களின் இரு மருங்கிலும் படரும் ஜீவ நதி. அணைகளால் தடுக்கப்பட்ட ஒட்டத்தை தன் மட்டத்தை உயர்த்தி மீட்டெடுத்து கடும் வேகத்தில் பயணமாகி, பரந்து விரிந்த கடலுடன் சங்கமமாகி தன் அடையாளமிழக்கும் ஆறு. குழாயிலிருந்து விடுபட்டு கழுவியில் நிறைந்து, குழிந்து, வெளிச்செல்லும்குழாயின் உள் புகும் நகராட்சி…
-
யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன். இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல்…
-
சுவரேறி குதித்து தனியார் நிலமொன்றில் தெருவோரக்கிரிக்கெட் விளையாடினார்கள் சிறுவர்கள். மட்டைக்குரிமையாளனே முதலில் மட்டை பிடிப்பான். அவ்வளவு எளிதில் ஆட்டமிழப்பதுமில்லை. ஒங்கி அடித்தான் பந்தை. சுவரைத்தாண்டி ரோட்டில் விழுந்தது. பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட். ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு. தானே அம்பயராக வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அவன் கருத்துப்படி அவன் “நாட் அவுட்” அவனைப்பெவிலியனுக்கு அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது. ரோட்டில் விழுந்து லாரியொன்றின் டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை எடுத்துவந்தான் ஒரு பீல்டர். ஆட்டம் தொடர வேறொரு…
-
முழுதும் மொட்டையடிக்கப்பட்ட ஒற்றைக்குன்று அதன் உச்சியில் ஒரே ஒரு மரம். குன்றின் பின்னிலிருந்து உதித்துக்கொண்டிருந்த சூரியனின் கதிர்களை மறைத்தது உச்சியில் இருந்த ஒற்றை மரம். +++++ மருந்துக்கு ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை. குன்றின் சொறசொறப்பான உடம்பை இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில் கைகள் சிவந்துபோயின. சில இடங்களில் கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய வழுவழுப்பில் கால்கள் வழுக்கினாலும் கரங்கள் சுகம் பெற்றன. சற்றுநேரத்தில் சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து உயர எழுந்து கண்ணைக்கூசவைத்தது. கூசிய கண்களை சுருக்கியபடி ஏறி உச்சியை அடைந்தேன். +++++ சூரியனை…
-
வெண்மணல். உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள். காயாத செந்நிற திரவம். ஒர் இறுக்கமான ஒவியத்தின் சாத்தியக்கூறுகள். திருட்டுத்தனமாக புகைக்க வந்த சிறுவன் மணல்மேட்டில் சிதறிக்கிடந்த கூறான கண்ணாடித்துண்டுகளை கவனிக்காமல் தடுக்கிவிழுந்திருக்கலாமோ? ஆற்றோரமாயொரு சமயவிழாவில் நடந்த குரூரமான வன்முறையின் குறியீடோ? காதலனொருவன் காதலியின் மேல் சிவப்புநீரடித்து ரகசியமாக “ஹோலி” கொண்டாடுகையில் உடைந்துபோன வெண்ணிற வளையல்துண்டுகளோ? உரிமம் பெறாத மருத்துவர் செய்த கருக்கலைப்புக்கான ஆதாரங்களின் குவியலோ? +++++ மணற்புயலுருவாகி மணல் மூடி கண்ணாடித்துண்டுகள் மற்றும் செந்நிற திரவம் மறைந்து போயின. +++++…
-
பழத்தில் உள்ள விதைகளை எண்ணுதல் எளிது. விதைக்குள் இருக்கும் பழங்களை எண்ணுவது எப்படி? +++++ அறுத்துவைத்த ஆப்பிளுக்குள் இருந்த விதை ஆறு ! பத்திரப்படுத்தி வைத்திருந்த விதைகளைக் கவர்ந்ததாரு? என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள். விதைகளை கொண்டு தாரும் ! கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம். விதையிருந்தால் போதும். +++++ காணாமல்போன விதைகளைத்தேடி கானகம் வரை வந்துவிட்டேன். நிறைய மரங்கள் ! என் வீட்டிலிருந்து களவு போன விதையிலிருந்து எந்த மரம் முளைத்தது? யாராவது சொல்லுங்கள் !…
-
மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும். இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான்…
-
உண்மை ஒர் பிரசினை. இரக்கமற்றது. நிம்மதியை குலைப்பது. எல்லா பக்கங்களிலும் நம்மை வளைத்து என்ன இருக்கிறது என்று வலுக்கட்டாயமாக காட்டுகிறது ; பார்க்கவைக்கிறது. மொத்தமாக, உண்மை எரிச்சலூட்டுவது. (translation of a paragraph from "Conversation with the God" written by Neale Donald Walsch)
-
வெளியேறும் எண்ணம் வந்தது. இருக்கையிலிருந்து எழ முயலும்போது கை கட்டப்பட்டது பொன் விலங்கோ? மஞ்சள் நூலோ? பொருட்படுத்தாமல் கையை உதறி எழுகையில் அழுகை சத்தம். போகாதே ! என்னை விட்டு போகாதே ! மேலதிகாரியின் குரலென அறிவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. எங்களை விட்டு போகாதே இது அதிகாரியின் அதிகாரி. சபாஷ்! எல்லாருக்கும் நான் எழும் சத்தம் கூட தெளிவாக கேட்கிறது. என் குரல் பழையபடி கேட்க முடியாதவாறு இவர்கள் செவிகள் மீண்டும் பழுதுபடுமுன் இங்கிருந்து விலகுதல்…
-
ஒளித்துவைக்கப்பட்டிருந்த உண்மையொன்று வெளிவர முயன்றது. வாசலை சார்த்தி வைத்திருந்தார்கள் உண்மையை சித்திரவதை செய்து அறையில் அடைத்துவைத்தவர்கள். உடைத்து திறக்க ஆயுதமேதும் அகப்படவில்லை. தலையை முட்டி மோதி திண்டாடி தடுமாறி வந்தது வெளியே. யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி நிராகரித்தன பொய்கள். உண்மைக்கு பசித்தது. உயிர் போகும்படி பசி. நீதி மன்றத்தில் நீதிபதிகள் சோறிட்டு உண்மையின் உயிரை காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு விரைந்தது. உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி வக்கீலும் துணைக்கு வந்து சோறு…
-
முடிதிருத்தும் நிலையத்தில் நன்கு தூக்கம் வருகிறது. திரையரங்குகளிலும். தேர்வு எழுதும் அறைகளில் திறம்பட. கோவில்களில் மணியோசை தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது. ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி சேருமிடம் வரும்வரை சயனம்தான். வேலை செய்யுமிடத்தில் மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி பிறருக்கு தெரியாமலிருத்தல் பிரம்மப்ரயத்தனந்தான். மகளின் பள்ளியில் ஆசிரியர்களை சந்திக்க காத்திருக்கும் பொழுதுகளில் குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து திருப்பள்ளிஎழுச்சியாகும். இரவு எத்தனிக்கும்போது மட்டும் தூக்கம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் படித்தாலும் காதுக்குள் வைத்து கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்…
-
ஒரு கோட்டை வீழ்ந்த வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது கைப்பற்றாத கோட்டைகளை எண்ணத்தொடங்கினான் எண்ணிக்கை முடியும் முன்னரே வீழ்ந்த கோட்டையை வேறு யாரோ எடுத்துக்கொண்டனர் மன்னன் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறான் கம்பிகளையும் நாட்களையும் +++++ வரப்போகும் மனைவியின் புகைப்பட உருவிற்கு முடிவிலா முத்தங்கள் நிச்சயதார்த்தம் முறிந்தது மனைவியாகப்போகிறவள் வேறுயாருக்கோ நிஜத்தில் முத்தம் கொடுத்தாளாம். இவனுக்கு வேறு புகைப்படம் கிடைத்தது இவனின் முத்தங்கள் தொடர்கின்றன +++++ இலக்கை முதலில் அடைந்துவிடும் வெறியில் பாதை தாண்டி ஓடிவிட்டான் பந்தயத்திலிருந்து விலக்கிவிட்டார்கள் அடுத்த பந்தயம் நடக்க…
-
கழுத்துசுருக்கை தளர்த்திக்கொண்டே விண்ணப்பத்தை நிராகரித்தார். விதிமுறையை தளர்த்த முடியாதாம். கைப்பையின் உள்ளில் கட்டப்பட்டிருந்த பணக்கட்டை தளர்த்தியதில் விதிமுறைகள் தளர்ந்து நீர்த்துப்போயின. +++++ எண்கள் சதி செய்து போதுமான அளவில் வராமல் போகவே சேரப்போன கல்லூரியில் எண்களை எடுத்துவாருங்கள் என்றார்கள். உருவிலா எண்ணை சலவை நோட்டாய் உரு தந்து எடுத்துவந்தபோது கல்லூரிப்பூட்டுகள் களிப்படைந்து தானாகவே திறந்துகொண்டன. +++++ கதவு என்பது அவளின் காரணப்பெயர் எந்த சட்டையிலும் முதலிரு பட்டன்களை தைத்துக்கொண்டதேயில்லை. முழுக்கதவு திறப்பது மட்டும் உண்டியலில் இவன் இடும்…
-
நன்னம்பிக்கை நெடுநாள் காத்திருப்பு முடிவடையும். ஓவியப்பெண் முகம் திரும்பாமலேயே வேறு அருங்காட்சியகத்துக்கு போய்விடுவாள். வீட்டுக்கு இன்று திரும்பிப்போய் "தண்ணி"யடிக்கவேண்டும் கஞ்சத்தனம் ஓவியப்பெண் உடையணியாமாலேயே நிதர்சனமாய் பிரசன்னமானாள். சட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை காபி பருக அழைத்தாள். "காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே" சுயநலம் சட்டகத்துள் நிர்வாணமான முதுகைக்காட்டி சொரிந்து விடுமாறு கேட்டுக்கொண்ட ஓவியப்பெண்ணை யாரும் செவிமடுக்கவில்லை ! "பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை ஏலத்தில் போட்டுவிட்டார்கள்" ஜீவகாருண்யம் ஓவியன் என்னை சேர்த்து ஓர்…
-
எதிர்பார்க்கின்ற நிகழ்வுக்கும் நிகழ்காலத்திற்கும் உள்ள இடைவெளி, காலவோட்டத்துடன் எதிர்பார்ப்பு சேரும்போது உருவாகும் உள்ளுணர்ச்சி காத்திருத்தல் ! காத்திருத்தல் அவஸ்தை காத்திருத்தல் சுகம் +++++ எதிர்பார்ப்பு மறைந்தால் காத்திருப்பும் இறந்துபோகும். காத்திருத்தல் இல்லாவிடில் காலவோட்டத்தின் வெறுமை பூதாகரமாய் காட்சியளிக்கும். காலவோட்டத்தின் உணர்வு கலந்த அர்த்தப்படுத்தலே எதிர்பார்ப்பு +++++ எதிர்பார்ப்பு சுயநல வண்ணம் கொண்டு நாடகம் போல முன்னரே எழுதப்பட்ட ஒவ்வொரு காட்சியும் நிகழ்வாகவேண்டுமென்று அடம்பிடிக்கும். எதிர்பார்ப்பு லட்சிய வண்ணம் பூண்டு காட்சிகள் எப்படி நகர்ந்தாலும் கவலையுறாமல் உச்சக்காட்சியின் சுபத்தையே…