Author: Ganesh Venkatraman

  • (தில்லிகை இலக்கிய வட்டத்தில் 11.8.2012 அன்று ஆற்றிய உரை) எல்லோருக்கும் வணக்கம். நான் மேடையேறிப் பேசுவது இதுதான் முதல் முறை. நெஞ்சுக்குள் நடுக்கம். கொஞ்சம் பதற்றம். நாக்கு குழறலாம். உச்சரிப்பு குளறுபடியாகலாம். வானிலை அறிக்கை வாசிப்பது மாதிரி உன் மனதின் கால நிலை பற்றி எங்களுக்கு ஏன் சொல்லுகிறாய் என்று யாரும் எழுந்து என்னைக் கேட்பதற்கு முன்னால், நான்கு வரி பாரதி கவிதையை சொல்லி விட்டு என் உரையை ஆரம்பித்து விடுகிறேன். ”பயமெனும் பேய் தனை அடித்தோம் –…

  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வரும் சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்த கவிதையை தினமணி (5.8.2012) அன்று தமிழ் மணி பகுதியில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த கவிதை. கவிஞர் சுவாதி முகில் அவர்களின் சம்மதத்துடன் என் வலைப்பூவில் இடுகிறேன். திணைப்பெயர்ச்சி டோல்கேட்..ஃப்ளை ஓவர்… ஃபோர் லான்..சர்வீஸ் ரோட்… மோட்டல்… பெட்ரோல் பங்க்… என்று விரல் விட்டு எண்ணிக்கொண்டே வருகிறாள் ஹேமா நெல்லு வயல்… வாழத்தோப்பு… கம்மாயி…வெத்தலை கொடிக்கால்… செவ்வந்தித் தோட்டம், கமலைக்கிணறு… என்று சிறு வயதில் என் விரல்…

  • நண்பர் பெரியசாமி சமீபத்தில் எழுதிய ஒரு கவிதையை முகநூலில் பங்கிட்டிருந்தார். மிக அழகான ஒரு கவிதை. படித்துப் பாருங்களேன். எஞ்சியவை பிளந்த மாதுளையிலிருந்து உதிர்ந்தன சிவந்த கண்ணீர் துளிகள் எறும்பு ஒன்று ஒரு துளியை இழுத்துச்செல்ல மீந்ததை பங்கிட்டனர் மகன்கள் எதிர் இல்ல யுவதி பிணி நீக்க எடுத்துச் சென்றாள் தொலிகளை கழுவத் துவங்கினேன் கையிலிருந்த பிசுபிசுப்பை…  

  • அவளின் உதடுகள் மூடியிருந்தும் அவள் சிரிப்பு காணக் கிடைக்கிறது. விழிகள் திறந்திருக்கின்றனவே ! உறங்குகையிலும் அவளின் சிரிப்பு தொடருமோ என்றறிய ஆவல் எனது ஆவலை அவள் அறிந்தாளில்லை. தோள் தருகிறேன் தோழி தன் கவலைகளை சொல்லி அழ மனப்பாரம் தீர்ந்தவுடன் நன்றி சொல்லி நகர்ந்து விடும் தோழி. மனதை பாரமாக்கி சென்று விடுகிறாள் பாரத்தை இறக்கி வைத்தால் தோழி தொலைந்து போய் விடுவாளோ? அலை புரளும் குழல்கள் – அவற்றை ஒதுக்கி விடும் விரல்கள் நெருங்கி வரும்…

  • இளைப்பாறும் மனது களித்திருந்தது. உல்லாசமான கற்பனைகளில் திளைத்திருந்தது. புறவுலகில் வரப்போகும் காட்சிகளாக சிலவற்றை முன்னரே தன் கற்பனையில் விரித்துரைத்து தனக்கே சொல்லிக்கொள்ளும் விளையாட்டு அதற்கு விருப்பமான விளையாட்டு. முன்னறிவிப்பின்றி மனதின் தட்பவெப்பம் மாறியது சிறு காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூள் கொண்டது. அது பெரிதாகும் அபாயமிருந்தது. கற்பனைக் காட்சிகள் மோசமான நிகழ்வுகளுக்கு மாறும் வகையில் திரைக்கதை மாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்தன. பயவுணர்ச்சி பரவி நரம்புக் குழாய்களிலிருந்து சில ரசாயன திரவங்கள் சுரக்கத் துவங்கின. காட்சிகளை உறையச் செய்யுமாறும்…

  • ஓடும் ஆறு போல இரு இரவுகளில் அமைதியாக. இருண்டிருக்கும் போது அச்சப்படாதே வானில் நட்சத்திரங்கள் தெரிந்தால் அவற்றை உன்னுள் பிரதிபலி வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தால் மேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள் கவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி உன் அமைதி நிறைந்த ஆழங்களில்     (பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது)

  • பிரேசிலின் ரியோ-டீ-ஜெனீரோ நகரில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் நான் பிறந்தேன். அது ஒரு சிரமமான பிரசவமாக இருந்தது. எனவே, என் அன்னை நான் உயிர் பிழைக்க அருள் புரியுமாறு புனித ஜோசப்பை வேண்டிக்கொண்டார். நான் பிறந்த நாள் முதலே புனித ஜோசப் என் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்குகிறார். நான் 1987இல் முதல்முறையாக சாண்டியாகோ (ஸ்பெய்ன்) புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஒவ்வொரு வருடமும் 19ந் தேதி மார்ச் அன்று – புனித ஜோசப்பின் பெயரில்…

  • சிந்தனை படைப்பின் முதற்மட்டம். சொற்கள் அடுத்து வருவன. சொல்பவை எல்லாம் சிந்தனையின் வெளிப்பாடே! சொற்களின் இயக்க நிலை சிந்தனையை விட வலிமை வாய்ந்தன. சொற்கள் படைப்பின் இரண்டாம் மட்டம். அடுத்து வருவது செய்கை. செய்கைகள் என்பன நகரும் சொற்கள். சொற்கள் என்பன சிந்தனையின் வெளிப்பாடு. சிந்தனை என்பது வடிவப்படுத்தப்பட்ட யோசனை. யோசனை என்பது ஆற்றல்களின் கூடல். ஆற்றல் என்பது சக்திகளின் எழுச்சி சக்தி என்பது மூலகங்களின் உள்ளிருப்பு மூலகங்கள் என்பன கடவுளின் துகற்கள் – எல்லாவற்றின் பகுதிகள்…

  • காகிதத்தில் வரையப்பட்டிருந்தவை. நேர்கோடுகள் தாம்! ஐயமில்லை. தரையால் ஈர்க்கப்பட்டு விழுந்தன அக்கோடுகள் ! இப்போது அவைகள் தம் நேர்த்தன்மையை இழந்து வளை கோடுகளாகியிருந்தன. +++++ நம் மனதில் உறையும் முழுமையான உட்பொருட்களின் நிழல்களே நாம் புறவுலகில் உணரும் பொருட்கள் என்றுரைத்தான் பிளேட்டோ. +++++ புறவுலகத்தின் ஏதொவோர் இயக்கத்தை வரைபடத்தில் குறித்தால் அருவமாக (abstract) மாறும். பருண்மை துறந்து கணிதவுலகத்தில் நுழைந்து விடுதலை பெறும் +++++ மூன்று பரிமாண உருவங்களும் நிகழ்வுகளும் காலவெளி என்றொரு நான்காவது பரிமாணத்துடன் சேர்ந்து…

  • (RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்) இடம் காலம் என்ற இரட்டை தொடர்ச்சிகள் பிரக்ஞை என்றொரு மறைபொருளின் நூல் பொம்மைகள் நரைத்த மீசை இரைந்த முடி கொண்ட இயற்பியல் மேதை உணர்ந்து சொன்னான். +++++ சுவரில் சாய்ந்து அமர்ந்த படி உறங்கியபோது அண்ட வெளியில்…

  • பெருநகரமொன்றின் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த அழகான சிறு ஊர். ஒரு புகைவண்டி நிலையம். ஒரு பேருந்து நிலையம். இரண்டு சினிமா தியேட்டர்கள்!. அவற்றில் ஒன்று ஊருக்கு வெளியே தென்னந்தோப்புக்கு முகப்பில் இருந்த ஒரு டூரிங் டாக்கிஸ். பெரும்பாலும் கறுப்பு-வெள்ளை படங்களே திரையிடப்படும். தீபாவளி – பொங்கலுக்கு மட்டும் வண்ணத்திரைப்படங்கள். சரியாக பராமரிக்கப்படாத நகராட்சி பூங்கா. பூங்காவிற்கு நடுவில் ஒர் அறை. அதற்குள்ளிருக்கும் வானொலிப்பெட்டியில் வரும் ஆறு மணி தமிழ் செய்திகள் பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள்…

  • கிளை நட்டு நீரூற்றி களை பிடுங்கி மருந்தடித்து பாட்டு பாடி பொறுமை காத்து…… வெகு நாளுக்குப் பிறகு பூத்த மலரை கையில் ஏந்தி பார்க்கையில் இரு இதழ்கள் அளவு குறைந்தும் ஒரிதழ் அளவு பெரிதுமாய் நீண்டு விகாரமாக இருந்தது. எனினும் என் மலரை பெருமையுடன் சட்டையில் குத்திக்கொண்டேன்.

  • வில் வித்தையில் தன் மானசீக குருவாக நினைத்திருந்த துரோணர் தன்னை சீடனாக ஏற்க மறுத்ததால் விரக்தியில் கொஞ்ச காலம் அலைந்து கொண்டிருந்த பிறகு, ஏகலைவனுக்கு ஒர் எண்ணம் பிறந்தது. துரோணர் என்ன துரோணர் ? அவர் மட்டும் தான் குருவா? கல்வித்துறையில் அரசு செய்த மாறுதல்களுக்கு பிறகு வீதிக்கு வீதி வில் வித்தை கற்றுத்தரும் தனியார் பள்ளிகள் முளைத்து விட்டனவே? அவற்றில் ஏதாவது ஒன்றில் போய் சேர்ந்து விட வேண்டியது தான் என்ற முடிவுக்கு வந்தான் ஏகலைவன்.…

  • முதலில் நம்பிக்கை என்ற சிந்தனை பின்னர். நம்புங்கள் என்ற சொல் நம்பினார்கள் பலர் ஏன் நம்பவேண்டும் என்று ஆய்ந்தனர் சிலர் ஆய்ந்தவர்களில் சில பேர் நம்பத்தொடங்கினர் சில பேர் நம்பத்தேவையில்லை என்றனர் மற்றவர்கள் இன்னும் ஆய்வைத் தொடர்கின்றனர் நம்புதலும் நம்பாதிருத்தலும் நம்புதல் பற்றிய ஆய்வும் என்று செய்கைகளே மிஞ்சின. உலகளாவிய பெருமனத்தின் ஒன்றிணைந்த சிந்தனை, சொல் மற்றும் செய்கைகள் சிருஷ்டியின் மூலக்கூறுகள் எனில் நம்பிக்கையின் சிருஷ்டியும் இவ்வாறே நிகழ்ந்திருக்கக்கூடும்.

  • ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com தவளைக்கு சிக்கிய மீன் குளக்கரையிலிருந்து தவளை நீர் அதிர சிரித்தது சிக்கிய மீன்…

  • நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன்.  காலைத் தேனீர் றியாஸ் குரானா காலாவதியாகிப்போன நாளொன்றின் காலைப் பொழுதிற்காக காத்திருக்கிறேன். கடந்தது மீள வராது ஆயினும் நான் சந்தித்தேயாக வேண்டும் அந்திப் பொழுதிலிருந்து பின்நோக்கி நடக்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் கொஞ்ச நேரம் எதுவும் தெரியவேயில்லை அது எனது பகல் தூக்கம் பின்னோக்கி வருவதுபோல்…

  • மற்றவர்கள் குழுமியிருந்தபோது அக்கறையுடன் நலம் விசாரித்தான். தனித்துவிடப்பட்டபோது மௌனமாயிருந்து அன்னியமானான். இவனை பேசவைக்க சற்றுமுன் கூட்டமாய் நின்றிருந்த நண்பர்களை மீளச்சொல்ல வேண்டும் திரைப்படம் சென்றோம் நண்பர் குழாமுடன். அவனுக்கு படம் பிடிக்கவில்லையாம். எனக்கும் பிடிக்கவில்லை அவன் என் பக்கத்து இருக்கையில் அமராதது! எல்லோரும் விடுதியில் அளவின்றி உண்டு மகிழ இவன் குளிர் பானம் மட்டும் போதுமென்றான். நான் தந்த சிக்கன் துண்டுகளை கூட நண்பனுக்கீந்தான். நண்பர் குழுவுடன் என் வீடு வரை வந்தெனை இறக்கிவிட்டபோது அவன் இருந்த…

  • வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள். பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு…

  • வீட்டில் செய்த பண்டங்களை விற்க கடைகடையாய் ஏறி இறங்கினேன். ஒரு கடைகாரனும் என் பண்டத்தை கடையில் வைத்து விற்க சம்மதிக்கவில்லை… பண்டங்களை நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது. அடுத்த நாளும் பண்டங்களை செய்தேன்.. விற்பனை செய்ய தெருவெங்கும் கூவிச்சென்றேன். யார் வீட்டு கதவுகளும் திறக்கவில்லை காசு கொடுத்து வானொலியில் என் பண்டத்தின் பெயரை ஒலிக்கச்செய்தேன். ஒன்று கூட விற்கவில்லை. சுவரொட்டிகளும் விளம்பரங்களும் பத்திரிக்கைகளும் எதனாலும் கைகூடவில்லை விற்பனை. நடுத்தெருவில் வீசியெறிந்தேன் என் பண்டத்தை. வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை என்னவென்று பார்த்து…

  • கூட்டம் பெருகிவிட்ட சிற்றுண்டி நிலையத்தில் வருபவர்களை வாயிலில் காக்கவைத்து உள்ளிருக்கும் கூட்டம் தணிந்த பின் காத்திருப்போரை உள்ளே விடும் வாயிற்காவலனொருவனை பார்த்தேன். நிகழ்கால இருப்பை பொறுக்காமல் நிற்காமல் நகரும் நினைவுகள். இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ; எதிர் காலத்தை எண்ணி அல்லலுறும். உள் புகும் நினைவுகளை வாயிலில் நிறுத்தி பரிசோதித்து வடிகட்டி உள்ளனுப்பும் காவலனொருவன் எனக்கு கிடைப்பானா?