Author: Ganesh Venkatraman

  • நிறைவு என்ற பதத்துக்கு நிறைய என்று பொருள் கொண்டு கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது நிறைய வகைகளில் “நிறைய”.. “கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய” “சென்ற வருடத்தை விட நிறைய” “மைத்துனரின் வீட்டை விட நிறைய” என! கொஞ்சமிருப்பவரும் “நிறைய” காண்பிப்பதற்கு நிறைய கடன்களைப் பெற நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும். அந்தஸ்தை நிரூபிக்க நிறைய பரிசுகள் ! நிறைய உடைகள் ! நிறைய இனிப்புகள் ! நிறைய விருந்துகள் ! நிறைய வாழ்த்தட்டைகள் ! நிறைய மனநிறைவும்…

  • அக்கரையின்றி திரிபவனின் வேட்கை படரும் கொடி போல வளரும் ; வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல் அவன் அங்கும் இங்குமாக அலைந்து திரிவான். பிசுபிசுப்பு மிக்க அருவெறுப்பான தீவிர நாட்டம் உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய் உன் துயரங்கள் வளரத் தொடங்கும் மாறாக, இவ்வுலகத்திலேயே, அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து நீ விடுபடுவாயானால் தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல உன் துயரங்கள் நீங்கும் இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும்…

  • சிறு வயதில் ஒரு முறை என் பெற்றோருடன் ஒர் அருவியைக் காண சென்றிருந்தோம். அன்று மாலை அருவி இருக்கும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தோம். இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அருவி கொட்டும் சத்தம் தூங்கும் வரை என் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மதியம் நான் கண்ட அருவி ஐநூறு அடி உயரத்தில் இருந்து கொட்டிக் கொண்டிருந்தது. தூங்கிய பின்னரும் அக்காட்சி என் கனவுத்திரையில் தெரிந்தது. பின்னிசையாக கேட்ட…

  • போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு…

  • லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து…

  • சென்னை செல்லும் மனைவி குழந்தைகளை ரயிலேற்றி விடுவதற்காக நிஜாமுத்தின் ரயில் நிலையம் சென்றிருந்தேன். ஆன் – லைன் வழி முன் பதிவு செய்த ஈ-டிக்கெட் சகிதம் வண்டிக்காக காத்திருந்தோம். தண்டவாளத்தில் தடிதத பெருச்சாளிகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. தண்டவாளத்துக்கடியில் சிறு சிறு பொந்துகளுக்குள் நுழைந்தவாறும் வெளிவந்தவாறும் இயங்கிக் கொண்டிருந்தன. ரயில் நிலையங்களில் ஒரு சுண்டெலி கூட ஏன் தென்படுவதில்லை? வெறும் பெருச்சாளிகளைத் தான் காண முடிகிறது. இவ்விதமாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. என் மொபைல் போனில் கீழ்க்கண்ட…

  • நடந்து கொண்டேயிருக்கையில் திடீரென்று நான் அணிந்திருந்த என் செருப்புகள் காணாமல் போயின அவற்றை தேடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தேன் வெகு நேரத் தேடலுக்குப் பின் கிடைத்தன என் செருப்புகள் அவற்றை என் கையில் பத்திரமாய் பிடித்துக் கொண்டு இல்லம் வந்தடைந்தேன்.

  • அமைதியை குலைத்து அறைக்குள் நுழைந்த இசையை விரட்டியடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி காதை பொத்திக்கொண்டேன் இசை இப்போது தென்படவில்லை. இசை கண்ணுக்கு தெரியாமல் எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை கை வலிக்கத் துவங்கியபோது இரு கைகளை தொங்கப்போட்டு வலியை துரத்தினேன். இசை அவ்விடத்திலிருந்து ஏற்கெனவே விலகிச் சென்றிருக்கலாமென எண்ணிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன்

    நோயாளி
  • மிருகக் காட்சி சாலையின் முகப்பில் கம்பீரமாக தசைகள் புடைக்க மிடுக்குடன் வீரமாக உறுமுவது போல நிற்கும் சிங்கத்தின் சிலை. கூண்டுக்குள் பிடறி எலும்பு தெரிய ரோமம் உதிர்ந்து பாவப் பட்ட பார்வையுடன் தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை நக்கிக் கொண்டிருக்கும் நிஜச் சிங்கம்.

  • “Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம்…

  • வெகு காலமாக புரட்டப்படாத புத்தகத்தின் பக்கங்களுக்குள் கிடந்தது இலை பச்சை மங்கி வெண்மைப் பட்டுப் போன ஆனால் வடிவம் குன்றா அந்த இலையில் வாசம் தொலைந்திருந்தது பழைய புத்தகத்தின் வாசனையை விரும்பி முகர்கையில் இலையின் வாசமும் சேர்ந்து வந்தது. இலை கிடந்த பக்கத்தில் காணாமல் போயிருந்த எழுத்துகள் சில இலையில் பதிந்திருந்தன

  • சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு……… ஆரம்பம் எது முடிவெது என்ற குழப்பத்தில் ரங்கராட்டினம் போல் ஒரு வட்டத்தில்…

  • மரம் போலவொரு அழகான கவிதை என் வாழ்நாளில் என்னால் எழுத முடியாது. பசி மிகுந்த மரத்தின் வாய் பூமித் தாயின் வழியும் முலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கடவுளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் தன் இலைக் கரங்களை எழுப்பி தொழுகை புரியும். கோடை காலங்களில் வண்ணாத்திக் குருவியின் கூடுகளை தொப்பிகளாக அணிந்து கொள்ளும். மார்பில் பனி பூசிக் கொண்ட மரங்கள் மழையுடன் கூடும் என் போன்ற முட்டாள்களால் கவிதை மட்டுமே கிறுக்க இயலும் கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல்…

  • ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான். உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன்.…

  • சேறு சேறில் விழுந்த அனுபவம் ஒன்று அண்மையில் ஏற்பட்டது. அலுவலகம் முடிந்து மெட்ரோ ரயில் நிலையம் வரை ஆட்டோ ரிக்‌ஷாவில் செல்வது வழக்கம். என்றுமில்லாத அதிசயமாக ஒரு மாலையில் கேட்-டுக்கருகில் என் அதிகாரி என்னை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் விட்டு விடுவதாக திட்டம். வழக்கமாக அவருடைய காரில் பயணிக்கும் செகரட்டரி ஷிகா அன்று வேலைக்கு வராததால், இப்பாக்கியம் எனக்கு கிடைத்தது. செக்டர் 55-ஐ அடைய…

  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே…

  • யதார்த்தத்தின் நிறம். இருட்டு, வெளிச்சம் – இவற்றின் கலவை. களைத்துப் போன வானம் போர்த்திக்கொள்ளும் அமைதி. ஒளிரும் பகலை தன் கைகளால் தாழடைக்கும் இரவின் நிழல். இளம் கருநிறச்சாயலில் மெல்ல கட்டவிழும் பதாகை. கனிந்த, முதிர்ந்த இசைக்குள் ஐக்கியமாகப் போகும் இளம் சுருதி. அதிரப் போகும் இடி மற்றும் பெய்யப் போகும் மழைக்கான அறிகுறி. சொற்களின் செயல்களின் நிறம். கறுப்புமின்றி வெளுப்புமின்றி இரண்டுக்கும் நடுவிலான சாம்பல் நிறம் ; ஒப்புதலின் நிறம். (பேராசிரியர் மாலதி மாதுர் எழுதிய…

  • மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான். அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை…

  • மாதவனுக்கு எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். அப்படியிராவிடில், தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான் ; சமூகத்திற்கு தாம் தேவையில்லாமல் போய் விடுவோம் என்றும் யாரும் தன்னை விரும்பவில்லையென்றும் கூட எண்ணத் தொடங்கிவிடுவான். எனவே, காலையில் விழித்தெழுந்தவுடனேயே, செய்வதற்கென தொடர்ச்சியான பணிகள் இருக்கும் ; தொலைக்காட்சி காணுதல் (முந்தைய நாள் இரவில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்), செய்தித்தாள் வாசித்தல் (முந்தைய நாள் பகல் பொழுதில் நிகழ்ந்தவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே!), குழந்தைகளை பள்ளிக்கு கால தாமதமாகாமல்…

  • நேரமில்லை..நேரமேயில்லை… நான் செய்யவிரும்பும் அனைத்தையும் செய்தற்கு… ஏறுவதற்கு சிகரங்களின் உச்சிகள்,,, உலாவுவதற்கு உகந்த காடுகள்… படகில் பயணிக்க அலை திரள் கடல்கள்.. செல்வதற்கு எல்லா இடங்களும்… அறிவதற்கு பூமிவாழ் எல்லா மனிதரும்… இருக்கும் நேரமோ… சிலரை அறிதற்கும் சிலவற்றை செய்தற்கும் செய்ய மீதமிருப்பவை பற்றி செய்யுள் புனைதற்கும் – எலீனோர் பார்ஜான்