Author: Ganesh Venkatraman
-
முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார். பழைய வருடத்தை எரித்தல் வினாடிகளில் கடிதங்கள் தம்மைத்தாமே விழுங்கிக் கொண்டன ஒளிபுகும் காகிதங்களில் எழுதி தாழ்ப்பாளில் நண்பர்கள் தொங்கவிட்ட குறிப்புகள் விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தத்துடன் வதங்கி காற்றுடன் மணம் புரிந்து கொண்டன – வருடத்தின் பெரும் பகுதிகள் எளிதில் எரியக் கூடியவை – காய்கறிகளின் பட்டியல், பாதிக் கவிதைகள், ஆரஞ்சு நிறத்தில் சுழலும்…
-
பெருமிதமா? நெகிழ்வா? எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது? ராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார். “நான்…
-
சிறு தளிர்கள் உதிர்ந்து விழுந்தன மொட்டுகள் மூச்சுத் திணறி வாடிப்போயின வேர் வழி உருவிலா நஞ்சு பரவி மரம் தள்ளாடிற்று ஒரு மரம் அழித்து தரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி அதி விரைவில் எதிர்காலத்தின் வனமொன்றை அழித்தது கருத்தின் வடிவிலும் கொள்கையின் வடிவிலும் தீவிரம் என்னும் உடையணிந்து வாதம் எனும் மகுடியூதி மூளைகளை தூக்கநடனத்தில் ஆழ்த்தி விழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து நஞ்சு இன்னும் பரவிக்கொண்டிருக்கிறது.
-
சில வாரங்களுக்கு முன்னர் நான் வலைப்பதிவிட்ட “தர்மகீர்த்தியின் பரிசோதனை” கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டது ; அதில் வரும் pure sensation எனும் கலைச்சொல்லை தூய உணர்ச்சி என்ற உரிச்சொல்லாக மொழி பெயர்த்திருந்தேன். தூய உணர்ச்சி என்னும் சொல் முழுமையான திருப்தியை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். பிறகு கட்டுரையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி சிந்திக்க சரியான நேரம் அமையவில்லை. நேற்று ஒரு முகநூல் உரையாடலின் போது…
-
சாவத்தியில் புத்தர் தங்கியிருந்த போது ஆற்றிய பேருரைகளைக் கேட்ட பிக்ஷுக்களின் குழுவொன்று பிக்ஷுக்களின் மரபுப்படி மழைக்காலத்தில் வனத்துக்கு சென்று தங்க முடிவு செய்தனர். காட்டு மரங்களின் தேவதைகளுக்கு காட்டில் பிக்ஷுக்கள் வந்து தங்குதல் பிடிக்கவில்லை. ஆதலால் பிக்ஷுக்களைத் துரத்த இரவு நேரத்தில் பலவகையிலும் பயமுறுத்தும் காட்சிகளை உண்டு பண்ணி துன்புறுத்தினர். பிக்ஷுக்கள் இதைப்பற்றி புத்தரிடம் சென்று முறையிட்ட போது, “கரணிய மெத்த சுத்தம்” (KARANIYA METTA SUTTA — THE DISCOURSE ON LOVING-KINDNESS) என்னும் பாலி…
-
மரம் வெட்டும் திருவிழா காலனியில் இன்று இனிப்பு விநியோகம் முன்வாசலில் நின்ற வயதான மரங்கள் வெட்டப்பட்டு கட்டிட பால்கனிகளில் வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ; கலைந்த கூடோன்றுள் கிடந்த பறவை முட்டைகளை வீசியெறிந்து விளையாடி குழந்தைகள் குதூகலிப்பதை மரங்களின் இடத்தடையின்றி நகர்ந்த வாகனங்களின் உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில் பால்கனிக்காரர்கள் கண்டு களித்தார்கள் மரண தினத்தை கொண்டாடும் மரபு மரம் மரணித்த அன்றும் மாறாமல் தொடர்ந்தது @ studiothirdeye.com செயல்முறை சிந்தனைப்பாத்திரத்தில்…
-
Buddhist Logic என்ற இரண்டு புத்தக நூலை இரு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். படிக்காவிட்டாலும் சில புத்தகங்களை நம்முடன் வைத்திருப்பதே ஒரு பெருமிதத்தை கொடுக்கும். ஒவ்வொரு முறையும் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்பது, சில பத்திகளைப் படிப்பது என்று இந்நூலுடனான தொடர்பை துவக்க (பிரம்ம!) பிரயத்தனம் செய்து வந்தேன். அடர்த்தியான தருக்கவியல் தத்துவங்களை விரிவாகப் பேசும் இந்நூலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. பௌத்த தத்துவவியல் வரலாற்றைப் பேசும் முதல் அத்தியாயம் படிப்பதற்கு எளிதாக இருந்தது. யோகசார பௌத்தத்தின் தத்துவ…
-
ஏரி ஏங்கிக் கருமையுற்ற முகத்தோடு ஏரி சலனமற்றிருக்கிறது சில நாட்களுக்கு முன் தயக்கமின்றி உன்னிடமிருந்து காலியான மதுக்கோப்பைகளை விட்டெறிந்திருந்தாய் அதில் மறுக்காமல் பெற்றுக்கொண்டது ஏரி பிறகொரு நாள் நீ புகைத்த சாம்பல் கிண்ணத்தைக் கழுவிச் சாம்பலையும் கரைத்தாய் நேற்றுகூடக் கசந்துபோன நம் உறவினை இகழ்ந்து எச்சில் துப்பினாய் தண்ணீரில் எந்தக் காலமொன்றில்லாமல் எல்லாக் காலங்களிலும் உன் கழிவுகளைக் கொட்டி உன்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாய் இன்று இதில் எதையும் நினைவுறுத்தாது உன் தாகம் தணிக்கத் தயாராகிறாய் உன் அசுத்தங்களை அடித்துக்…
-
சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன் காஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும் உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம். தடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா? இல்லாமற் போவதா? நான் இருக்கிறேனா…
-
(இன்று சரஸ்வதி பூஜை. இவ்வலைப்பதிவின் இருநூறாவது இடுகை இது. பௌத்த சமயத்தின் சரஸ்வதியான தாராவைப் பற்றிய இக்கட்டுரை இருநூறாவது பதிவாக வருகிறது பிப்ரவரி 2010இல் வலையில் எழுதத் தொடங்கிய போது இருநூறாவது பதிவு வரை போகும் என்று சற்றும் நினைக்கவில்லை. தொடர்ச்சியாக யாரேனும் இடுகைகளை வாசித்து வருகிறார்களா என்று தெரியவில்லை. எனினும் விளையாட்டுத்தனம் கலக்காத சீரிய பதிவுகளையே இடுவது என்ற உறுதியிலிருந்து விலகாமல் இன்று வரை முயன்று வருகிறேன்.) தாரை வழிபாடு முதலில் எந்த மரபில் தோன்றியது…
-
சிறப்புப்பதிவு – நட்பாஸ் சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்). அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/…
-
புண்ணியராசன் தன் பெருந்தேவியோடு சோலைக்கு வந்தான். அங்கிருந்த தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி அறமும் பாவமும் அநித்தியப் பொருட்களின் வகைகளும் நித்தியப் பொருட்களின் வகைகளும், பிறப்பு முதலான துக்கமும், செல்கின்ற உயிர் புகுகின்ற இடமும், பேதைமை முதலிய பன்னிரெண்டின் தோற்றமும், அவற்றிலிருந்து நீங்கும் வழிவகையும், ஆசிரியன் புத்தனின் இயல்பும் தருமசாவகனிடமிருந்து அமைதி பெறக் கேட்டுக் கொண்டான். “மகளிருள் தனக்கிணையில்லாத பேரழ்குடையாளாய் கண்களில் இயங்கியும் காமத்துடன் இயங்காமலும் அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அறவுரை கேட்கின்ற இம்மங்கை…
-
உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ; அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ; பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள். “உடற்கழு தனையோ வுயிர்க்கழு…
-
ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது;…
-
வாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின்…
-
வான் வெளியைப் போர்த்தி பூமியில் இரவாக்கி சிறு சிறு துளைகளில் வெண்தாரகைகள் வைத்து உயிர்களுக்கு நித்ரை தருகிறாள் பறவைகளைப் பள்ளியெழுச்சி பாடவைத்து இருள் போக்குகிறாள் மகாமாயையை ஏவி யோகமாயை நடத்தும் அளவிலா விளையாட்டு இரவும் பகலும் அனவரதமும் +++++ ஒருமுறை நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி கருவொன்றை மாற்றி தன்னைப் புகுத்திக் கொண்டு சிசுவாய் வெளிப்பட்டு காற்றாய் மறைந்து அசரீரியாகி…… +++++ இன்னொரு முறை சுபத்திரையாகத் தோன்றி ஒற்றைப் பார்வையில் அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி சன்னியாச வேடமிடத் தூண்டி…
-
வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…
-
அப்பா இருந்தார் அம்மா இருந்தாள் அண்ணன்மார் இருந்தனர் நானும் இருந்தேன்… இருந்தேனா? கண்ணாடியின் பிம்பத்திடமும் நிழற்பிரதிமையிடமும் பேசிக் காலங்கழித்திருந்தேன். தென்றலாய் நுழைந்த பிருகன்னளை என்னுள் ஆனந்தத்தை வீசினா….. விகுதிக் குழப்பங்கள் நெருடவில்லை! +++++ மிருதுவான கரங்கள் கடிவாளத்தை எவ்வாறு ஏந்தும்? அங்கம் அசைத்து அபிநயம் புரிபவனா குதிரையோட்டி? பிருகன்னளை ஆடவனாயிருக்கக்கூடுமா? பயந்தோடிய உத்தரகுமாரனுக்கு பதிலாக போரிட்டு கௌரவர்களை துரத்தினவன் அவனே தானா? சைராந்தரி சொல் கேட்டது பிழையோ? +++++ உத்திரையின் நித்திரையில் தோன்றிட்ட கனவுக்குள் அர்ஜூனனின் கைப்பற்றி…
-
அலையிலாக் கடலின் ஆழத்தில் ஜனனம்; நித்ய யுவதி வடிவம்; தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர் எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும் ஊர்வசிக்கு இது ஒரு புது அனுபவம். மானிடன் ஒருவனின் மறுதலிப்பு. அர்ஜுனன் அறைக்கு சென்று திரும்பியவள் கண்களில் ஏமாற்றம். கரை மீறும் நதியலை போல் வெகுண்டு வேகவேகமாய் அலங்காரத்தை கலைத்தாள். உடைகளைக் கழட்டத் தொடங்கியதும் கொஞ்சம் அமைதி. மார்புக்கச்சைகளை விலக்கியதும் மின்னலொளியில் ஒரு முறை பார்த்த மானிடன், புருரவஸ்-சின் நிர்வாண நினைவு. கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும். குரு…