நகரத்துப் பசுக்கள்

cows-animale_400

தீனீ போட்டு கட்டுப்படியாகாமல்
விரட்டப்பட்ட நோஞ்சான் பசுக்கள்
தெருக்களில் திரிந்தன
வெள்ளைப் பசு
முள்மரங்களை
சுவாசம் பிடித்த படி நின்றது
மஞ்சள் பசு
சாலையோரங்களில் போடப்பட்ட
கற்குவியற்களை நாவினால் தொடுகிறது.
வெள்ளைப்பசுவின்
இளங்கன்று
பிளாஸ்டிக் குப்பைகளை
ஆர்வத்துடன் நோக்குகிறது
மாலை வீடு திரும்பாத
பசுக்களைத்
தேடி வந்த உரிமையாளன்
மயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை
லாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.

இப்போதெலாம்
பசுக்கள் வீதிகளில் அலைவதில்லை
நவநாகரீக கோசாலையில்
சுகமாய்க் காலங் கழிக்கின்றன
காசு கொடுத்து
பசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்
இன்னுமொரு கிளை திறப்பதற்காக
உரிமையாளன்
கிராமத்திலிருந்து
மேலும் பசுக்களை
நகருக்கு அழைத்து வருகிறான்.

Comments

One response to “நகரத்துப் பசுக்கள்”

  1. ஷாஜஹான் Avatar

    பகுதியளவு உண்மைதான். முனிர்கா எங்கும் சுற்றிக்கொண்டிருந்த பசுக்கள் எலலாம் ஜாட்களின் ஹரியாணா தோட்டங்களுக்குப் போய்விட்டன. பசுக்கொட்டில்கள் எல்லாம் நான்குமாடி கட்டிடங்களாகி தமிழர்களின் வாடகை விடுகளாகி விட்டன.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.