ஓடும் ஆறு போல….

ஓடும் ஆறு போல இரு

இரவுகளில் அமைதியாக.

இருண்டிருக்கும் போது அச்சப்படாதே

வானில் நட்சத்திரங்கள் தெரிந்தால்

அவற்றை உன்னுள் பிரதிபலி

வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தால்

மேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள்

கவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி

உன் அமைதி நிறைந்த ஆழங்களில்

 

 

(பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது)

Comments

One response to “ஓடும் ஆறு போல….”

  1. natbas Avatar
    natbas

    கவலைப்படும் நேரங்களில் ஆறுதலாக இருக்கக்கூடிய கவிதை.

    மிக்க நன்றி.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.