இன்று காலை Manthiramoorthi Alagu அவர்கள் அனுப்பி வைத்த காணோலியில் அவரும் தினேஷ் ஜெயபாலன் அவர்களும் சொல்வனத்தில் வெளிவந்த என் சிறுகதை “விசித்திர நாடகம்” குறித்து அலசியிருக்கிறார்கள். 2011இலிருந்து எழுதுகிறேன். படிப்படியாக craftஇல் முன்னேற்றம் ஏற்பட்டாலும், இன்று வரை நான் எழுதிய சிறுகதைகளில் விசித்திர நாடகம் சற்று ஸ்பெஷல். இந்தக் கதை அதன் வடிவத்தை எட்ட கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டது. எவ்வளவு உழைப்பு போடுகிறோம் என்பதுதான் கதையின் வெற்றியை நிர்ணயிக்கிறது. நல்ல கருவாக அமைந்தாலும் திருத்தங்களும் வாக்கிய மாற்றங்களும் வெவ்வேறு பாணியில் அதை எழுதிப்பார்த்தலும் சேர்ந்தாலோழிய அந்தக் கதை சிறப்படைவதில்லை.
அவர் அனுப்பிய யூட்யூப் காணொலியில் என் கதை குறித்துப் பேசும் இடங்களை மட்டும் வெட்டி எடுத்து இந்தப் பதிவுடன் தரவெற்றியிருக்கிறேன். மந்திரமூர்த்தி மற்றும் தினேஷ் ஜெயபாலன் அவர்களுக்கு எனது நன்றி.
கதையை வாசிக்க -> விசித்திர நாடகம்