-
ரூமி பல காலமாக என்னை திக்குமுக்காட வைத்துக் கொண்டிருக்கிறார். அவர் கவிதைகள் என்னை புதிர்சுவைக்குள் மூழ்கி தத்தளிக்க வைக்கின்றன. அவர் எழுதிய பர்ஸிய மொழியில் இயங்கிய மேலும் சிலரும் ரூமியுடன் சேர்ந்து என்னை மேலும் பித்து நிலைக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹபீஸ், சொராப் செபெஹ்ரி, ஓமர் கய்யாம் – இம்மூவரும் ரூமியுடன் சில காலம் முன்னர் சேர்ந்து கொண்டவர்கள். இவர்களை வாசிப்பது ஆங்கில மொழியாக்கம் வாயிலாக என்பது ஒரு குறை. முக்கால் வாசி மொழிபெயர்ப்புகள் மூலத்தை சரியான… Read more
-
ஆற்றின் குறுக்கே ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு சென்று கொண்டிருந்தது ஓர் ஆமை. அதன் முதுகின் மேல் படர்ந்திருந்தது ஒரு தேள். தன் மேல் அமர்ந்திருக்கும் தேளின் மேல் ஆமைக்கு பரிதாபம். அடுத்த கரையை அடைந்தவுடன் தேளை இறக்கிவிட்டு விடலாம் எனும் எண்ணத்துடன் கற்கள் மேவிய நதியின் படுகையை மெல்ல கடந்து கொண்டிருந்தது ஆமை. அதிக ஆழமில்லாவிடினும் நீரின் விசை அதிகமாயிருந்தது. கவனத்துடன் பாதி ஆற்றை கடந்து வந்தாயிற்று. மீதிப் பாதியில் நதி சீரான வேகத்தில் ஓடிக்… Read more
-
சின்ன வயதில் அறிவியல் எனில் வேப்பங்காய். பத்தாம் வகுப்புக்குப் பின்னர் அறிவியல் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்தது கிடையாது. வணிகவியல் படிப்பு. விற்பனைத் துறையில் வயிற்றுப் பிழைப்பு. ஆளைக்குறை சம்பளத்தைக் குறை என கொஞ்சங்கொஞ்சமாக கடந்த இரண்டு வருடங்களாக டெக்னிகல் அஸிஸ்டென்ஸ் ஆட்கள் இல்லாமல் போய்விட ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்றிருப்பவரும் குவாரன்டைனில் இருக்க தலையில் வந்து விழுந்தது ஒரு டெக்னிகல் வேலை. வாடிக்கையாளருக்கு அவசரமாக ஒரு ஊட்டச்சத்து ஃபார்முலேஷன் தேவைப்பட்டது. சரி நாமே… Read more
-
சில சமயங்களில், குறிப்பாக, பதற்றமாகக் கழிந்த நாளின் இரவுப்போதில் கவிதை வாசிக்கத் தோன்றும். இப்போதெல்லாம் அதிகமும் இரண்டு கவிஞர்களின் கவிதைகள் தாம் மனதை ஆற்றுப்படுத்துபவையாக இருக்கின்றன. ரூமி மற்றும் ரியோகன். மெல்ல மெல்ல மனதின் பரபரப்பை குறைத்து உறக்கத்துக்கு முன்னதான ஆல்பா ஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்பவையாய் உள்ளன இவ்விருவரின் கவிதைகளும். இது என் சொந்த அனுபவந்தான். எல்லோருக்குமே இக்கவிதைகள் இதே குளிர்ச்சியை அளிக்குமா எனத் தெரியாது. சொந்த வாழ்வில் கிடைத்த ஓர் அனுபவம் அளவற்ற மன அவஸ்தையை… Read more
-
தன்னுடைய ஞான முயற்சியின் சகாவாக போதி மரத்தை ஒரு வாரத்துக்கு நன்றியுணர்ச்சியுடன் புத்தர் நோக்கிக் கொண்டிருந்தார் என்று பௌத்த மரபு சொல்கிறது. பிற்காலத்தில் அந்த போதி மரத்தைச் சுற்றி ஒரு கோயிலை எழுப்பினார் அசோக மாமன்னர். போதி மரத்தின் மேல் அசோகர் கொண்டிருந்த அளவற்ற பக்தியை சகிக்க இயலாமல் அவருடைய அரசி – திஸ்ஸாரக்கா – போதி மரத்தின் கீழ் முள் செடிகளை வளர்த்ததாகவும் அதன் காரணமாக மிக விரைவில் போதி மரம் பட்டு வீழ்ந்ததாகவும் தொன்மக்… Read more
-
அனைவருக்கும் புத்த பூர்ணிமா வாழ்த்துகள். ஒரு தமிழ் தொலைக்காட்சி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி லாக் டௌனின் போது புத்த பூர்ணிமா தினத்தன்று ஒலிபரப்புவதற்கென ஒரு தம்ம உரையை மொபைலில் பதிவு செய்தேன். சில தொழில்நுட்ப காரணங்களால் அந்த உரையை ஒலிபரப்ப இயலாது என தொலைக்காட்சி சொல்லிவிட்டது. அந்த உரையை யூட்யூபில் ஏற்றினேன். சுட்டியை கீழே காணலாம். Read more
-
கடலுள் நுழையுமுன்நதிக்கு நடுக்கமேற்படுமெனகூறப்படுகிறது மலைகளின் உச்சிகளிலிருந்துகாடுகளினூடேகிராமங்களினூடேவளைந்து செல்லும் பாதையில்தான் வந்தவழியைபின்திரும்பி நோக்குகிறாள்தன் முன்னம்பரந்து விரியும் கடலை நோக்குகிறாள்இதற்குள் நுழைவது என்பதுநிரந்தரமாக மறைந்துபோவதைத் தவிரவேறேதுமில்லைஆனால் வேறு வழியில்லை! நதி பின்திரும்பிச் செல்ல முடியாதுயாரும் பின்திரும்பிச் செல்ல முடியாதுஇந்த இருப்பில் பின்திரும்பிச் செல்லுதல் சாத்தியமில்லைகடலுள் நுழையும்இடர்பாட்டை அது சந்தித்துத்தானாக வேண்டும்!ஏனெனில் அப்போதுதான் அதன் பயம் விலகும்ஏனெனில் அங்குதான் நதி ஒன்றைப் புரிந்து கொள்ளும் – இது கடலுக்குள் மறைந்து போவதைப் பற்றியதன்று,கடலாக மாறுவதைப் பற்றியது Read more
-
வரலாற்றை எப்படி அணுகுவது? காலத்தின் பாய்ச்சல், கருத்துகளின் வெள்ளோட்டம், நிகழ் கலாச்சாரத்தின் உற்பத்தி ஸ்தானம், மனித இனம் முன்னர் செய்த தவறுகளின் பகுப்பாய்வு, இன்னும் எத்தனையோ விதமாக படிக்கலாம்! ஆனால் பெருமிதவுணர்வுடன்? கழிவிரக்கத்துடன்? முன்னர் நடந்த அநியாயங்களுக்கான பழி வாங்கும் உணர்வை தூண்டும் கதையாடலாக? ஓர் உதாரணமாக – ஜொராஸ்டிரர்களின் குறைந்த மக்கள் தொகையைப் பற்றி கேள்விப்படும் போது, விரைவாக மறைந்து போகத்தக்கதொரு கலாச்சாரக் குழுவாக அவர்களை எண்ணும் போது உடனடியாகத் தோன்றும் வருத்தம் / பரிதாப… Read more
-
இதுவரை தமிழ் கதைப்பரப்பில் அதிகம் பேசப்படாத களம் மற்றும் நிலப்பரப்பு ; வரலாற்றின் முக்கிய காலகட்டம் ; வெறும் தகவல்களை அடுக்கினாலே ஒருநாவலுக்கிணையான விறுவிறுப்பை தரக்கூடிய வரலாற்றுக் காலம் ; ஆனால், தகவல்களின் குவியல் கட்டுரையாகும். நாவலாக முடியுமா? தகவலையும் கற்பனையையும் கலந்து கொத்திப்பூசி ஒரு கதையை எழுப்பும் பிரயத்தனத்தில் இரவுபகலாக எண்ணங்களை பதனப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சிறுதுளையிலிருந்து பீறிடும் நதிக்கான காத்திருப்பில் அலைவுறுகிறேன். தலைப்பை கூட முடிவுசெய்தாயிற்று – ஒருமுறை தொட்ட நதி. Read more
-
பொறியியல் இரண்டாமாண்டு பயிலும் என் மகள் – பூஜா – வலைப்பதிவு எழுதத் துவங்கியுள்ளார். அவர் எழுதிய முதல் பதிவு – சிங்கங்களும் மான்களும் Read more
-
இந்த வலைப்பக்கத்தில் பதிவான பௌத்தக் கட்டுரைகள் – சக்கரவாளம் – எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவரவிருக்கிறது. காலச்சுவடு நிறுவனம் பதிப்பிக்கிறது. பௌத்த நெறிமுறை மூல நூல்களில் – பாலி ஆகமங்களாக இருந்தாலும் சரி சம்ஸ்கிருத சூத்திர வகைமை நூல்களாக இருந்தாலும் சரி – அவற்றுக்கு நடுவே ததாகதரின் அகக்குரலின் மொழி அவ்வப்போது வரும். அந்த அகக்குரலின் மொழியை வாசிக்கும் போதெல்லாம் அவருடைய சிந்தனைக்குள் நுழைந்துவிட்டது போன்ற பிரமை வருவது எனக்கு மட்டுமா எனத் தெரியவில்லை. — மாகண்டிகர்… Read more
-
பௌத்த சிந்தனையின் படி ‘துக்க’ என்னும் பாலி சொல் எதைக் குறிக்கிறது? பொதுவாக பௌத்த இலக்கியங்களில் அதிகம் கோடிட்டுக் காட்டப்படும் பிறப்பு, நோய், மூப்பு, சாவு முதலான நான்கு அடிப்படை துக்கங்களை மட்டும் அந்தச் சொல் குறிப்பதில்லை. பொதுவான அன்றாட வாழ்க்கையில் நம் சுயத்துடன் நம்மை நாம் பிணைத்துக் கொள்ளும் போது தோன்றும் அதிருப்தி நிலையையும் ‘துக்க’ எனும் சொல் குறிக்கிறது. ‘துக்க’ எனும் பாலி மற்றும் சமஸ்கிருதச் சொல்லை ஆங்கில மொழிபெயர்ப்புகளில் “suffering’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டமை… Read more
-
Been avoiding the mini series Chernobyl despite very good reviews. Didn’t have the heart to watch it for no specific reasons. My daughters persuaded me to watch it and I succumbed. I have a faint memory of hearing about Chernobyl accident through radio news when I was waiting for my results of 12th standard board… Read more
-
1 வரைபடத்தில் காண்கிறேன் வாழப்போகும் வீட்டை இடம், வீடு, எங்கு, எப்படி அனைத்தும் பிரக்ஞையில் கால ஓட்டம் பிரக்ஞையின் நகர்வு பிரக்ஞையை நகர்த்தி வீட்டுக்குள் வந்தடைந்தேன் அடுத்த இலக்கை அடைவதற்கு வரைபடத்தை காணவில்லை பிரக்ஞையை பின்னுக்கு நகர்த்தி தொடக்கத்துக்கு வந்தபோது பழுப்பேறி உளுத்துப்போன காகிதத்துண்டுகளே இரைந்து கிடந்தன. 2 கால இயந்திரத்தில் பயணித்தேன் வரைபடத்தை எடுக்க மறக்கவில்லை எதிர்காலத்தில் இருந்த வீட்டை அடைந்து உள்நுழையாமல் வரைபடத்தை மட்டும் சரிபார்த்தவாறு நின்றிருந்தேன். 3 வரைபடத்தை பறக்கவிட்டேன் வளைந்து வளைந்து… Read more
-
Clinical Depression-ஐ வெறும் துக்கம் என்று கற்பிதம் செய்து கொண்டு நாட்களை கடத்திக் கொண்டிருக்கையில் ஒரு நாள் சற்றே முயன்று என்னை நானே கவனித்துக்கொண்டு எழுத முயன்ற போது… என்னுள்ளில் நிகழும் உரையாடல்கள் இரைச்சலாக ஒலிக்கின்றன காதுகளை அடைத்துக் கொண்டாலும் இரைச்சல் அடங்குவதில்லை என்னைத் துரத்தும் நிழல்களிலிருந்து தப்பியோட முடிவதில்லை விடியலை தவிர்க்க தூங்காமல் இருத்தலும் விடிந்த பின் போர்வைக்குள் ஒளிந்து கிடப்பதுமாய் என் தினங்கள் நகர்கின்றன உண்மையில் தினங்கள் நகர்கின்றனவா துக்கம் என்றால் அழுது அதனைத்… Read more
-
சர்வாதிகாரத்துக்கும் ஜன நாயகத்துக்கும் இடையிலான ஊசலாட்டம் மெக்ஸிகோவின் வரலாற்றில் பன்னெடுங்காலம், கிட்டத்தட்ட எண்பது வருட காலம் நீடித்தது. சுதந்திரம் வெறும் சாளர அலங்காரங்களாக நகரங்களில் ஒரு பாவனையாக பேணப்பட்டு கிராமப்புறங்களில் அரசு வன்முறை உயிர்களை குடித்துக் கொண்டிருந்தது. அரசாங்கத்துக்கெதிரான கருத்துகள் சகித்துக் கொள்ளப்படவில்லை. பத்திரிக்கை சுதந்திரம் ஒரு வெற்று பாவ்லாவாக நடைமுறையில் இருந்தது. நிலங்களை பங்கிட்டுத் தருகிறோம் என்ற வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டு கிராமப்புற மக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டிருந்த சர்வாதிகார அரசுகள் நகரங்களில் மட்டும் ஒரு… Read more
