வருடம்

  • லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா… Read more

  • மே 14, 2018 எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தன.சென்ற வருடம் ஒரு நாள் தொடங்கியது. மார்ச் மாதம். தேதி நினைவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மோசமடையும் என்பார்களே அதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டியது. மோசமடைந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று எத்தனை யோசித்தும் தெளிவை எட்ட முடியவில்லை. வேலைகள் ஒழுங்காகவே போய்க் கொண்டிருந்தன. எனினும் என்னை மீறி ஏதோ நடக்கிறது. என்ன அது? சில மாதங்களுக்குள்ளேயே அனைத்தும் மாறி விட்டன. என்… Read more

  • முகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார்.  பழைய வருடத்தை எரித்தல் வினாடிகளில் கடிதங்கள் தம்மைத்தாமே விழுங்கிக் கொண்டன ஒளிபுகும் காகிதங்களில் எழுதி தாழ்ப்பாளில் நண்பர்கள் தொங்கவிட்ட குறிப்புகள் விட்டிற்பூச்சிகளின் இறக்கைகள் படபடக்கும் சத்தத்துடன் வதங்கி காற்றுடன் மணம் புரிந்து கொண்டன – வருடத்தின் பெரும் பகுதிகள் எளிதில் எரியக் கூடியவை – காய்கறிகளின் பட்டியல், பாதிக் கவிதைகள், ஆரஞ்சு நிறத்தில் சுழலும்… Read more