-
சத்தம் அழியக்கூடிய பொருள் எனும் விவாதம் நிறைய பவுத்த நூல்களில் இடம் பெறுகின்றன …. சத்தம் அநித்தம் என்றல்பக்கம், பண்ணப் படுத லாலெனல்பக்கத் தன்ம வசனமாகும்… (மணிமேகலை, 29 : 68-71) திக்நாகர் சொல்கிறார் : “அநித்ய: ஸப்தைதி பக்ஷ வசனம் க்ருதகத்வாத்இதி பக்ஷதர்ம வசனம்” (ப்ரமாண சமுச்சய) கிட்டத்தட்ட மொழியாக்கம் செய்தவை போல தோன்றுகிறதல்லவா? சத்தம் நிரந்தர பொருளல்ல ; அழியக்கூடியது, ஏனெனில் அது யாராலோ எதனாலோ எழுப்பப் படுபவை. இந்த வாதத்துக்கு ஏன் இத்தனை… Read more
-
ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”… Read more
-
There was a time when I didn’t know the difference between popular taste and literary merit—nor did I need to. All I knew was that I was hooked. Every week, like clockwork, I would pick up the latest issue of Ananda Vikatan to read the next chapter of a serialised novel that had captured our… Read more
-
கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் முதலாம் சுலோகம் அர்ஜுனனின் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. எல்லோருக்கும் இருக்கும் சந்தேகந்தான் அர்ஜுனன் வழியாக வெளிப்படுகிறது. இருவகையான வழிபாடுகள் உள்ளன. முதல் வழி – உருவத்துடன் விளங்கும் ஈஸ்வரனின் வழிபாடு. அடுத்த வழி – சுத்தப்பிரம்மத்தின் வழிபாடு. எதை வணங்குவது சிறந்தது? விஷ்ணு என்ற பெயருடன் பாற்கடலில் துயின்று கையில் சங்கு, சக்கரம் ஏந்தியவரும் நீலமேனி உடைத்தவருமானவரைக் கும்பிடுவது சிறந்ததா? அழிக்க முடியாததும் கண்ணில் தென்படாததுமாய் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதா? எது சரியான… Read more
-
நாவல் மீதான சட்டத் தடையை நீதி மன்றம் விலக்கிய பிறகு, The Satanic Verses என்ற சல்மான் ருஷ்டியின் மிகப் பெரும் சர்ச்சைக்குரிய நாவலை வாசிக்க நான் முடிவு செய்தேன். வாசிப்பு என்பது இங்கு இலக்கியரசனைக்காக மட்டுமல்ல. மாறாக, எழுத்துரிமைக்காக தனது வாழ்க்கையை பணயம் வைத்த ஒரு பெரிய எழுத்தாளருக்கு செலுத்தும் மரியாதையாகவும் இந்த வாசிப்பைச் செய்ய விரும்பினேன். ஆனால் வாசித்தபின் ஏற்பட்ட உணர்வு — மிகமிகச் சுமாரான ஒரு நாவல். பல இடங்களில், “இதை ஏன்… Read more
-
அந்தக் குவியலில் இருந்ததைநீ அறிந்திருக்கவில்லைஅது பிச்சைக்காரர்களைக் கொண்டிருப்பதாய்ஒரு பார்வையாளன் கண்டான்அவர்கள் தமது உள்ளங்கைகளின்வெற்றிடத்தை விற்கிறார்கள் பார்வையாளனுக்கு அவர்கள்அழுக்கு படிந்த தமது வாயை காண்பிக்கிறார்கள்;அவர்களைத் தின்று கொண்டிருக்கும் சொறிவகையை(அவனால் முடியக்கூடிய) பார்வைக்களிக்கிறார்கள் அவர்களின் திரிந்த பார்வையில்அவனின் அந்நிய முகம் கோணுகிறது;தங்களின் சேர்க்கையில் அவர்கள் மகிழ்கிறார்கள்,அவன் பேசுகையில் அவர்கள் உமிழ்கின்றனர். – Rainer Maria Rilke தமிழாக்கம் : அடியேன் Read more
-
சாலையில் தனித்து அலைந்து திரியும்இந்தச் சிறு கல்லுக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!தொழிற்கள் குறித்து கவலையின்றி,அவசரங்களைக் கண்டு பயப்படாமல் !அதன் தனிமப்பழுப்பு நிற உடையைத்தான்கடந்து செல்லும் இப்பிரபஞ்சமும் அணிந்துள்ளது.சூரியனைப் போல சுதந்திரமாக,இணைந்தோ அல்லது தனியே ஒளிர்ந்தோ,சாதாரண எளிமையில்முழுமையான ஆணையை நிறைவேற்றுகிறது எமிலி டிக்கின்ஸன் Read more
-
வானொலி அலைகளினூடேபதின்பருவத்தில்என் பிரக்ஞையில் நுழைந்ததுமத்திய கிழக்கு ஏற்றுமதி வாடிக்கையாளனின்அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்ஏமனில் நிகழ்ந்தது வேலையிலிருந்து துரத்திஎன் வலிமையை சோதித்ததுஷார்ஜா ஒரு முறை பையில் நிறைந்திருந்ததிர்ஹம்களைமேஜையில் கொட்டிசரக்கு எப்போது வரும்என்று வினவிய ஜோர்டான் காரன்பலமுறை எனை அழைத்துஎன் வேலை குறித்து கேட்ட கரிசனம் கதார்க்காரனின்தாராள மனதை உணரக் கிடைத்ததுதம்மாம் செல்லும்பஹரைனின் கடற்பாலத்தில் கூடப்பயணஞ் செய்தகோழிக்கோட்டு பெண்ணொருத்திஅபுதாபிக்காரனை கைபிடித்தகதையைக் கேட்டதுஒமானிய விமானத்தில் என் முறை வந்தபோதும்என்னை கவனிக்காமல்ரஸ் அல் கெய்மாக்காரனைகவனித்துவிட்டுப் பின்னர்எந்த ஐஸ்க்ரீம் வேணும்என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டதுதுபாய்… Read more
-
Naomi Shihab Nye – எனக்கு மிகப்பிடித்தமான கவிஞராகி வருகிறார். அவர் எழுதிய Blood கவிதையை மொழிபெயர்க்க விரும்பினேன். பாலஸ்தீனிய வம்சாவளியில் வந்த அமெரிக்கர் அவர். அமெரிக்கரா அரபியா என்ற அடையாளக் குழப்பம் அவருடைய கவிதைகளில் அடிக்கடி நிகழும் கருப்பொருள். Blood கவிதையிலும் இதே குழப்பம் தொடர்ந்தாலும், என்ன அடையாளம் கொண்டிருந்தாலும் “உண்மையான அரபி இதற்கு என்ன செய்வான்” என்ற கடைசி வரியில் அடையாளத்தை தாண்டிய மனிதத்தை நோக்கி கவிதை பயணிக்கிறது. – குருதி “ஓர் அசல்… Read more
-
நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார்.… Read more
-
இப்னு கல்துன் (1332–1406) – னுடைய magnum opus என்று கருதப்படும் “முகாதிமா” நூலில் நாகரிகங்களின் (அதாவது வம்சங்களின், அரசுகளின், ஆட்சி அமைப்புகளின்) எழுச்சி மற்றும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு சுழற்சி வரலாற்றுக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். அவரது கருத்துக்கள் இஸ்லாமிய இறையியலில், குறிப்பாக தெய்வீக விருப்பம், நீதி (‘adl’) மற்றும் உலக அதிகாரத்தின் நிலையற்ற தன்மை (dunya) ஆகியவற்றின் அடிப்படையில் வேரூன்றியிருந்தன. இப்னு கல்துனின் சுழற்சி வரலாற்றுக் கோட்பாடு நாகரீகங்கள் அவற்றின் தவிர்க்க முடியாத வீழ்ச்சிக்கு முன்… Read more
-
இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா… Read more
-
இப்னு சினா-வின் அராபிய மொழிக் கவிதை(ஆங்கிலம் வழியே தமிழ் adaptation : அடியேன்). — மேலிருந்து இங்கு வந்து இறங்கியது,அந்த விவரிக்கவியலா பரலோகப் புறா இந்த பாழடைந்த உலகின் அடையாளக் கம்பங்களுக்கும் வாசஸ்தலங்களுக்கும் நடுவில்தனது பழைய வீட்டை, அதன் அமைதியை நினைத்து அழுகிறது அடர்ந்த வலைகள் அதைத் தடுத்து நிறுத்துகின்றனகூண்டோ வலிமையானது! அதன் வீடு நோக்கிய பறத்தலின் நேரம் நெருங்கும் வரை,உயர்ந்த விசாலமான வானத்தைத் தேடுவதிலிருந்துஅது முடக்கப்பட்டுள்ளது. – அதன் பரந்த கோளத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம்… Read more
-
God is omniscient. A long debate about the nature of God’s knowledge continued for centuries. A long-standing attempt to explain Islamic theology using the reasoning of Greek philosophers such as Aristotle and Plato began during the Abbasid dynasty. The kings and caliphs, attracted by the concept of the philosopher-king, encouraged the movement to explain Islamic… Read more
-
ருஷ்டியின் கதைகளை வாசிக்கையில் வேக வேகமாக நகரும் காமெராவின் காட்சிகளைப் பின் தொடர்வது போல உணரலாம். அவசர அவசரமாக கதையைச் சொல்லிச் செல்வது போன்றதொரு தோற்றம். ஒரு வித பதற்றத்துடன் கதையை எழுதுகிறாரோ என்று தோன்றும். மெதுவாக சொற்களை வைத்து காட்சியை, நிகழ்வை செதுக்கியவாறு சொல்லிக் கொண்டு போகும் படைப்புகளை வாசித்துப் பழக்கப்பட்டவர்க்கு ருஷ்டியின் அவசரம் புதிதாகப் படும். அவரின் சில நாவல்களின் “வாசிக்கும் தன்மை குறைவு” என்று சொல்லும் சில வாசகர்களின் விமர்சனம் – அவர்களின்… Read more
-
இந்தச் சிறு கட்டுரையை கடந்த சனிக்கிழமை எழுதத் தொடங்கிய போது இயக்குனர் ஷியாம் பெனகல் மறைந்திருக்கவில்லை. ஷியாம் பெனகல் இயக்கிய அதிகம் பேசப்படாத படம் ஒன்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் கடந்த சனிக்கிழமை ஏன் என்னுள் உதித்தது? —- “த்ரிகால்” படம் எழுத்தாளர் ரஸ்கின் பாண்டின் கதைகளை நினைவு படுத்தியது. “த்ரிகால்” திரைக்கதையில் ரஸ்கின் பாண்ட்-தனம் இருந்ததாக எனக்குப் பட்டது. ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்களின் வாழ்க்கையை அதிகம் பதிவு செய்யும் ரஸ்கின் பாண்ட்-டின் கதைகளில் நினைவேக்கம்… Read more
-
அரவிந்தன் கன்னையன் யார் ‘இந்தியன்’, இந்தியனாக இருப்பதென்பது யாது என்ற கேள்விக்கு தன் வாழ்வையே பதிலாக அளித்து அதன் பொருட்டே தன் உயிரையும் அளித்தவர் காந்தி அவருக்கும் முன்பாக காந்தி நெடுங்காலம் பயணித்து அடைந்த புள்ளியைச் சுட்டிச் சென்றவன் நம் தமிழ் மகாகவி பாரதி. தாகூரால் கூட எட்ட முடியாத சிந்தனை உயரத்தை அடைந்தவன் பாரதி என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. அமெரிக்க அரசு முத்திரையில் “E Pluribus Unum” என்று லத்தீன் வாசகமுள்ளது, “பன்மையிலிருந்து ஒருங்கிணைந்த… Read more
