-
அலையிலாக் கடலின் ஆழத்தில் ஜனனம்; நித்ய யுவதி வடிவம்; தேவர், மனிதர், அசுரர், கந்தர்வர் எண்ணற்றோரைக் கிறங்கடிக்கும் ஊர்வசிக்கு இது ஒரு புது அனுபவம். மானிடன் ஒருவனின் மறுதலிப்பு. அர்ஜுனன் அறைக்கு சென்று திரும்பியவள் கண்களில் ஏமாற்றம். கரை மீறும் நதியலை போல் வெகுண்டு வேகவேகமாய் அலங்காரத்தை கலைத்தாள். உடைகளைக் கழட்டத் தொடங்கியதும் கொஞ்சம் அமைதி. மார்புக்கச்சைகளை விலக்கியதும் மின்னலொளியில் ஒரு முறை பார்த்த மானிடன், புருரவஸ்-சின் நிர்வாண நினைவு. கூடவே ஜோடி ஆடுகளின் பிம்பமும். குரு… Read more
-
மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள் பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே!… Read more
-
றியாஸ் குரானா தெரு இங்கிருந்து தொடங்குகிறது தெரு. இல்லை, இது தெருவின் நடுவிலோர் இடம். அந்த தெருவின் முடிவடைகிற இடம். ஒன்று போல் தென்பட்டாலும், ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களாலும், அடையாளங்களாலும் நீண்டு கொண்டே இருக்கிறது. எனது தெருவாகத் தொடங்கி உனது தெருவாக முடிவடைவதுகூட ஒரு வசதிக்காகத்தான். யாருடைய தெருவில் நாம் நிற்கிறோம்? அதைக் கண்டு பிடிக்கும் போது அடையாளமொன்றை பெற்றுக் கொள்கிறோம். எங்கிருந்து தொடங்குகிறது இந்தத் தெரு என ஒரு குழந்தை கேட்கும் போது,… Read more
-
ஞாபகார்த்த இலை காணாமல் போனது மரத்திலிருந்து விடுபட்ட இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை புத்தகப்பக்கங்களுக்கு நடுவில் சிறைப்படுத்தி வைத்திருந்தாய் புத்தகயாவின் புனித மரத்தின் இலையது என்பதை மறந்து போனாயா? Read more
-
“சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி” சும்மா இருக்க முடியாததால்… Read more
-
ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி? அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக… Read more
-
சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”… Read more
-
செருப்படி சத்தம் காதைக் கிழித்தது பொறுக்கவியலாமல் சத்தம் நின்றதும் வாசல் வெளியே ஒரு ஜோடி செருப்பு பாதங்கள் எங்கேயென திசையெல்லாம் அலைகையில் செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம் திரும்பவும் அறையில் அடைந்தேன் செருப்படி சத்தம் மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில் Read more
-
தலைகளில்லா முண்டங்கள் ஒரு படை அமைத்தன தலைவன் ஒருவனை நியமிக்க தலை தேடும் பணியில் இறங்கின கிடைக்காமல் போன தலைக்கு பதிலாய் தலையின் சித்திரம் வரைந்த பலகையொன்றை எடுத்து ஒரு முண்டத்தின் மேல் ஒட்டி வைத்தவுடன் அதன் உயரம் பன்மடங்காகி எடை பல்கிப் பெருகி அதன் காலடி நிழலின் சிறு பகுதிக்குள் மற்ற முண்டங்களெல்லாம் அடங்கின. Read more
-
மண்டியிட்டு திட்டில் தலை வைத்து பார்க்கையில் ஆழத்தில் போய்விட்ட நீர் மட்டம் ஈரமிலா தொண்டையில் சொற்களின் உற்பத்தி முடக்கம். வறண்ட கோடைக்கு நடுவே பெய்த சிறு தூறலின் ஒற்றைத் துளி நாக்கை நனைத்தவுடன் பெருகிய வெள்ளத்தில் கிணறு பொங்கி வழிந்தது. Read more
-
அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும். பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம். கிணற்றோரக்… Read more
-
லங்காவதார சூத்திரம் நூலில் விவரிக்கப்படும் மன அமைப்பு பற்றி ஒரு குறிப்பு முன்னர் எழுதியிருந்தேன் (http://wp.me/pP1C7-hU) அதன் தொடர்ச்சியாக மனம்-மட்டும் கோட்பாடு பற்றி எழுத எண்ணம். பேராசிரியர் சுஸுகி எழுதிய லங்காவதார சூத்திரக் கட்டுரைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வந்தாலும் அதில் வரும் கலைச்சொற்களின் தெளிவான புரிதல் இன்னும் கிட்டவில்லை. நன்கு புரியாமல் கட்டுரை எழுத வேண்டாமே என்று கொஞ்சம் இடைவெளி விட்டிருக்கிறேன். நேற்றிரவு உறக்கம் வராமல் புத்தக அலமாரியில் இருக்கும் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த… Read more
-
27.12.2013 அன்று வலையேற்றிய ”குளம் கோவில் புத்தகம்” என்கிற பதிவு 2.1.2014 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் அச்சேறியிருக்கிறது. Read more
-
கருணையுள்ளம் பருத்தியாகி திருப்திகுணம் நூலாகி தன்னடக்கம் முடிச்சாகி வாய்மை முறுக்காகி அமைந்த பூணுலொன்று உங்களிடம் இருந்தால் அதை எனக்கு அணிவியுங்கள் அது அறுந்து போகாது ; அது அழுக்காகாது ; எரிந்து போகாது ; தொலைந்தும் போகாது ; நானக் சொல்கிறான் அத்தகைய பூணூலை அணிந்தோரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் -குரு நானக் ஒரு குளம். புனிதக் குளம். ராமதாஸ்பூரில் இருந்த குளம் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. இன்று அக்குளத்தின் பெயரே அவ்வூருக்கும் பெயராக இருக்கிறது.ஆம்.அமிர்தம் நிரம்பிய குளம்… Read more
-
சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு… Read more
-
கல்கத்தாவில் “ஸாஹித்ய பரிஷத்” (இலக்கியச் சங்கம்) என்றொரு சங்கமிருக்கிறது. அதை தென்னாட்டிலிருந்து ஒருவர் சிறிது காலத்திற்கு முன்பு போய் பார்த்து விட்டு வந்து அச் சங்கத்தார் செய்யும் காரியங்களைப்பற்றி “ஹிந்து” பத்திரிகையில் ஒரு விஸ்தீர்ணமான லிகிதம் எழுதியிருக்கிறார்.மேற்படி பரிஷத்தின் நிலைமையையும் காரியங்களையும் அவர் நமது மதுரைத் தமிழ்ச் சங்கம் முதலிய தமிழ் நாட்டு “முயற்சிகளுடன் ஒப்பிட்டுக் காட்டி, நம்மவரின் ஊக்கக் குறைவைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறார். தெலுங்கர்,மலையாளத்தார், கன்னடர் எல்லாரும் தத்தம் பாஷைகளின் வளர்ச்சியின் பொருட்டு வருஷாந்தரப்… Read more
-
(wwww.gandhitoday.in -இல் இன்று வெளியான என் கட்டுரை – http://www.gandhitoday.in/2013/12/blog-post_7.html) குடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்?” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று… Read more
-
கிழக்கு ஜாவாவில் தொல்பொருளறிஞர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையொன்று ஜாகர்த்தாவில் உள்ள இந்தோனேசிய தேசிய மியுசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. புராதன இந்து-பௌத்தக் கலையின் தலை சிறந்த படைப்பாக இந்த ‘பிரஜ்னபாரமிதா” சிலை கருதப்படுகிறது. சாந்த சொரூபமும் தியான தோற்றநிலையும் அமைதியையும் ஞானத்தையும் குறிக்கின்றன ; இதற்கு மாறாக வளமும் நுட்பமும் மிக்க அணிகலன்களும் அலங்காரங்களும் இச்சிலையில் சித்தரிக்கப்படுகின்றன. தேவியின் தன் கூந்தலை ஒரு கிரிடத்துக்குள் அழகாக செருகி வைத்திருக்கிறாள். பத்மாசனத்தில் ஒரு சதுர பீடத்தில் தேவி அமர்ந்திருக்கிறாள்.… Read more
-
மனித உணர்வுகளின் நம்பிக்கைகளின் முன்னர் ஓடி ஒளியும் காலமும் எல்லைகளும் Read more
