Category: Translations

  • ராமாயணத்தில் வரும் ராவணன் சிவ பெருமானை வணங்கினான். லங்காவதார சூத்திரத்தின் முதல் அத்தியாயத்தில் வரும் ராவணன் பிரபஞ்ச புத்தரை வணங்குகிறான்; நீண்டதோர் உரையாடலும் நிகழ்த்துகிறான். ராமாயணத்தின் ராவணன் லங்காவதார சூத்திரத்தில் நுழைந்தது எப்படி? அதற்கு முன்னால் லங்காவதார சூத்திரம் பற்றிய ஒரு சிறு அறிமுகம்! சீனாவிலும் ஜப்பானிலும் பல நூற்றாண்டுகளாக முதன்மைப் படுத்தப்பட்ட மகாயான பௌத்த நூல் – லங்காவதார சூத்திரம். மகாயான பௌத்தத்தின் முக்கிய கோட்பாடுகளான மனம்-மட்டும், ததாகத கர்ப்பம் மற்றும் ஆலயவிஞ்ஞானம் போன்றவைகளை விரிவாக…

  • சூஃபி மரபில் மிக முக்கியமானவராகக் கொண்டாடப்படும் புல்லே ஷா பதினேழு-பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். பஞ்சாபி சூஃபிக்களில் அவரைப் போன்று பரந்த பிரபலம் பெற்றவர்களும் அதிகமாகக் கொண்டாடப்படுவர்களும் யாருமில்லை ; காஃபி என்னும் பஞ்சாபி கவிதை வடிவத்தில் அவர் எழுதிய கவிதைகளும் பாடல்களும் மிகப் பிரசித்தமானவை. உலகின் மிகச்சிறந்த சூஃபிக்களூள் ஒருவரான புல்லே ஷாவின் சிந்தனைகள் ஜலாலூத்தின் ரூமி மற்றும் டப்ரேஸ் போன்ற சூஃபிக்களின் சிந்தனைகளுக்கு ஒப்பானவை. ஒரு கவிஞராக, புல்லே ஷா பிற பஞ்சாபி சூஃபிக்களிடமிருந்து வேறு…

  • சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ…

  • சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம். இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை…

  • ”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?”…

  • வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும். உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை…

  • அக்கரையின்றி திரிபவனின் வேட்கை படரும் கொடி போல வளரும் ; வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல் அவன் அங்கும் இங்குமாக அலைந்து திரிவான். பிசுபிசுப்பு மிக்க அருவெறுப்பான தீவிர நாட்டம் உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய் உன் துயரங்கள் வளரத் தொடங்கும் மாறாக, இவ்வுலகத்திலேயே, அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து நீ விடுபடுவாயானால் தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல உன் துயரங்கள் நீங்கும் இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும்…

  • மரம் போலவொரு அழகான கவிதை என் வாழ்நாளில் என்னால் எழுத முடியாது. பசி மிகுந்த மரத்தின் வாய் பூமித் தாயின் வழியும் முலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கடவுளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் தன் இலைக் கரங்களை எழுப்பி தொழுகை புரியும். கோடை காலங்களில் வண்ணாத்திக் குருவியின் கூடுகளை தொப்பிகளாக அணிந்து கொள்ளும். மார்பில் பனி பூசிக் கொண்ட மரங்கள் மழையுடன் கூடும் என் போன்ற முட்டாள்களால் கவிதை மட்டுமே கிறுக்க இயலும் கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல்…

  • ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான். உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன்.…

  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளும் கட்டாயமில்லாமல், தன் நேரத்தை தன் விருப்பப்படி பயனபடுத்திக்கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆரம்ப நாட்களை அனுபவித்தான் மாதவன். ஆனால் மிக விரைவில் மனத்தளர்ச்சிக்கு ஆளானான். தன்னை எதற்கும் பயனற்றவனாக எண்ணத் துவங்கினான் ; சமூகத்திலிருந்து தள்ளி வைக்கப்பட்டவன் போல் வளைய வந்தான் ; வளர்ந்து விட்ட தம் குழந்தைகளால் கைவிடப்பட்டவனானான் ; “நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்?” என்னும் மிகப் பழைய வினாவுக்கு பதில் தேடும் சிரமத்தை அவன் என்றுமே…

  • மாதவன் முப்பது வருடங்கள் கடினமாக உழைக்கிறான். குழந்தைகளை வளர்க்கிறான் ; சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறான் ; தன் எல்லா நேரத்தையும் தன் வேலைக்காகவே ஒதுக்குகிறான். ஒரு முறை கூட “தான் செய்யும் இவ்வேலைக்கு ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கிறதா?” என்று கேட்டுக் கொள்வதில்லை. அவனுடைய ஒரே எண்ணம் “ நான் எந்த அளவுக்கு பிசியாக இருக்கிறேனோ, அந்த அளவுக்கு முக்கியமான ஆளாக பிறரால் கருதப்படுவேன்” என்பது தான். அவனுடைய குழந்தைகள் வளர்கிறார்கள். தம் படிப்பை முடிக்கிறார்கள். வீட்டை…

  • மாதவனுக்கு எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும். அப்படியிராவிடில், தன்னுடைய வாழ்க்கைக்கு அர்த்தமில்லையென்று அவன் நினைக்கத் தொடங்கிவிடுவான் ; சமூகத்திற்கு தாம் தேவையில்லாமல் போய் விடுவோம் என்றும் யாரும் தன்னை விரும்பவில்லையென்றும் கூட எண்ணத் தொடங்கிவிடுவான். எனவே, காலையில் விழித்தெழுந்தவுடனேயே, செய்வதற்கென தொடர்ச்சியான பணிகள் இருக்கும் ; தொலைக்காட்சி காணுதல் (முந்தைய நாள் இரவில் ஏதாவது நிகழ்ந்திருக்கலாம்), செய்தித்தாள் வாசித்தல் (முந்தைய நாள் பகல் பொழுதில் நிகழ்ந்தவற்றை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமே!), குழந்தைகளை பள்ளிக்கு கால தாமதமாகாமல்…

  • நேரமில்லை..நேரமேயில்லை… நான் செய்யவிரும்பும் அனைத்தையும் செய்தற்கு… ஏறுவதற்கு சிகரங்களின் உச்சிகள்,,, உலாவுவதற்கு உகந்த காடுகள்… படகில் பயணிக்க அலை திரள் கடல்கள்.. செல்வதற்கு எல்லா இடங்களும்… அறிவதற்கு பூமிவாழ் எல்லா மனிதரும்… இருக்கும் நேரமோ… சிலரை அறிதற்கும் சிலவற்றை செய்தற்கும் செய்ய மீதமிருப்பவை பற்றி செய்யுள் புனைதற்கும் – எலீனோர் பார்ஜான்

  • ஓடும் ஆறு போல இரு இரவுகளில் அமைதியாக. இருண்டிருக்கும் போது அச்சப்படாதே வானில் நட்சத்திரங்கள் தெரிந்தால் அவற்றை உன்னுள் பிரதிபலி வானில் மேகங்கள் சூழ்ந்திருந்தால் மேகமும் நீரின் வடிவம் என்பதை நினைவுபடுத்திக் கொள் கவலையை விட்டு அவற்றையும் பிரதிபலி உன் அமைதி நிறைந்த ஆழங்களில்     (பிரேசில் நாட்டுக் கவிஞர் மானுவல் பண்டெய்ரா (Manual Bandeira) எழுதியது)

  • பிரேசிலின் ரியோ-டீ-ஜெனீரோ நகரில் உள்ள புனித ஜோசப் மருத்துவமனையில் நான் பிறந்தேன். அது ஒரு சிரமமான பிரசவமாக இருந்தது. எனவே, என் அன்னை நான் உயிர் பிழைக்க அருள் புரியுமாறு புனித ஜோசப்பை வேண்டிக்கொண்டார். நான் பிறந்த நாள் முதலே புனித ஜோசப் என் வாழ்வை தாங்கிப்பிடிக்கும் தூணாக விளங்குகிறார். நான் 1987இல் முதல்முறையாக சாண்டியாகோ (ஸ்பெய்ன்) புனித யாத்திரை மேற்கொண்டு திரும்பிய ஒவ்வொரு வருடமும் 19ந் தேதி மார்ச் அன்று – புனித ஜோசப்பின் பெயரில்…