நதிகளுள்ளே
எது சைவம்
எது அசைவம்
பட்டியலிட்டால்
பயனளிக்கும்
பிணங்களைத் தின்னும் நதியில்
கோழியின் இறைச்சிக்கு அனுமதியில்லை
உள்ளூர் நதியில்
நோன்பு முறிக்கமுடியாதெனில்
ஜோர்டான் நதிக்கோ
டைக்ரிஸ் நதிக்கோ
சென்று வரச் சொல்வார்கள்.
எனினும்,
இந்தியாவிலும்
எங்கேனும் இருக்கக் கூடும்
அசைவ நதி,
ஒரு முறை
தேடிப் பார்த்துவிடுவோம்
Leave a comment