Tag: விமானம்
-
ஏ ஐ 171 விமான விபத்தில் ஒருவரைத் தவிர அனைத்து பிரயாணிகளும் விமானிகளும் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களும் செத்துப் போயினர். ஆனால் பகவத் கீதையின் பிரதியொன்று சற்றும் கருகாமல் தப்பித்தது. இது சமூகஊடகங்களிலும் வாட்ஸப் உரையாடல்களிலும் பகிரப்பட்டது. துளி கூட பச்சாதாபமோ, சக-உணர்வோ இல்லாத மனிதர்கள்! இவர்களின் பக்திவுணர்வு போலியானது! “எனக்கு மட்டும் அருள்! வேறு யாருக்கும் அருளாதே!” என்று இறைவனிடம் வேண்டுவது ஆன்மீகமன்று. “உனக்கு தேங்காய் உடைக்கிறேன், எனக்கு செல்வத்தைக் கொடு, அதைக்கொடு, இதைக்கொடு”…
-
வானொலி அலைகளினூடேபதின்பருவத்தில்என் பிரக்ஞையில் நுழைந்ததுமத்திய கிழக்கு ஏற்றுமதி வாடிக்கையாளனின்அலுவலகத்தில் சிறையுண்ட அனுபவம்ஏமனில் நிகழ்ந்தது வேலையிலிருந்து துரத்திஎன் வலிமையை சோதித்ததுஷார்ஜா ஒரு முறை பையில் நிறைந்திருந்ததிர்ஹம்களைமேஜையில் கொட்டிசரக்கு எப்போது வரும்என்று வினவிய ஜோர்டான் காரன்பலமுறை எனை அழைத்துஎன் வேலை குறித்து கேட்ட கரிசனம் கதார்க்காரனின்தாராள மனதை உணரக் கிடைத்ததுதம்மாம் செல்லும்பஹரைனின் கடற்பாலத்தில் கூடப்பயணஞ் செய்தகோழிக்கோட்டு பெண்ணொருத்திஅபுதாபிக்காரனை கைபிடித்தகதையைக் கேட்டதுஒமானிய விமானத்தில் என் முறை வந்தபோதும்என்னை கவனிக்காமல்ரஸ் அல் கெய்மாக்காரனைகவனித்துவிட்டுப் பின்னர்எந்த ஐஸ்க்ரீம் வேணும்என்று எதியோப்பிய விற்பனைப் பெண் கேட்டதுதுபாய்…
-
சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு……… ஆரம்பம் எது முடிவெது என்ற குழப்பத்தில் ரங்கராட்டினம் போல் ஒரு வட்டத்தில்…