Tag: யானை

  • நேற்று எழுதிய ரம்ஜான் போஸ்டைப் படித்த பிறகு நண்பர் நிஷா மன்சூர் தொலைபேசியில் அழைத்தார். நேற்று எழுதிய “காபா காக்கப்பட்டது” இடுகையில் ஒரு முக்கியமான விடுபடல் இருக்கிறது என்றார். இந்த விடுபடலின் காரணத்தால் போஸ்ட் சற்று எதிர்மறையாக தொனிப்பதாகச் சொன்னார். ஒரு முக்கியமான தகவலும் விட்டுப் போயிருந்தது. அப்ரஹா அழைத்துப் பேசும் மக்காவின் தலைவர் “முத்தலிப்” என்று இடுகையில் சொல்லியிருந்தேன். அப்துல்-முத்தலிப் இப்னு ஹாஷிம் மக்காவின் தலைவர்களில் ஒருவராகவும், நமது அன்புக்குரிய நபிகள் நாயகத்தின் தாத்தாவாகவும் இருந்தார்.…

  • இது நடந்தது நபிகளார் பிறந்த ஆண்டு. பல கடவுள் வழிபாட்டாளர்களின் கட்டுப்பாட்டில் காபா இருந்த காலம். இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயில்-லும் நிர்மாணித்த அமைப்பு – ஆதி காலத்தில் ஆதம் நபி முதன் முதலாக வழிபட்ட பிரார்த்தனைத் தலம் – பல கடவுள் வழிபாட்டில் திளைத்த குரைஷிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயத்திலும் அது அரேபிய நிலத்தின் முதன்மை வழிபாட்டுத் தலமாக விளங்கியது. ஏமன் மட்டுமல்லாது அபிசீனியா போன்ற ஆப்பிரிக்க பிரதேசங்களிலிருந்து யாத்திரிகர்கள் காபாவுக்கு வருவார்கள். காபா…

  • ஓர் அச்சில் சுழலுமிப்பிரபஞ்சம்மேசையைச் சுற்றிச்சுழலட்டும் என் ஆன்மாஒரு பிச்சைக்காரனைப்போல்நீள்வட்டத்தில் சுழலும் கோளைப்போல்அநாதியாய்சுதந்திரமாய் ராணியும் யானையும் கூர்மையாய் நகரும்சதுரங்கப்பலகையில்எனினும் உண்மையில் ராஜாவை மையங்கொண்டுவட்டமிடுகின்றன அவை காதல் உனது மையமெனில்உன் விரல்களில் மோதிரமிடப்படும் அந்திப் பூச்சியினுள்ஏதோவொன்று தீயினால் பண்ணப்பட்டுள்ளது ஞானியொருவன்தூய இன்மையின்அழிக்கும் முனையைத் தொடுகிறான் குடிகாரனொருவன்சிறுநீர் கழிப்பதைபாவமன்னிப்பாகக் கருதுகிறான்பிரபுவே, என்னிடமிருந்துஅசுத்தங்களை எடுத்துவிடுங்கள் பிரபு பதிலளித்தார்முதலில் அசுத்தத்தின் இயல்பினைப்புரிந்துகொள்உனது சாவி வளைந்திருந்தால்பூட்டு திறக்காது நான் அமைதியானேன்அரசன் ஷம்ஸ் வந்து விட்டான்எப்போதும் நான் மூடும்போது அவன் திறக்கிறான்

  • வான் வெளியைப் போர்த்தி பூமியில் இரவாக்கி சிறு சிறு துளைகளில் வெண்தாரகைகள் வைத்து உயிர்களுக்கு நித்ரை தருகிறாள் பறவைகளைப் பள்ளியெழுச்சி பாடவைத்து இருள் போக்குகிறாள் மகாமாயையை ஏவி யோகமாயை நடத்தும் அளவிலா விளையாட்டு இரவும் பகலும் அனவரதமும் +++++ ஒருமுறை நித்ரையில் உலகத்தோரை ஆழ்த்தி கருவொன்றை மாற்றி தன்னைப் புகுத்திக் கொண்டு சிசுவாய் வெளிப்பட்டு காற்றாய் மறைந்து அசரீரியாகி…… +++++ இன்னொரு முறை சுபத்திரையாகத் தோன்றி ஒற்றைப் பார்வையில் அர்ஜுனனை வசீகரித்து பித்தாக்கி சன்னியாச வேடமிடத் தூண்டி…