Tag: நாய்

  • நெடுங்காலமாக சாதனாவில் ஈடுபட்ட சாதகனின் மேல் கருணை கூர்ந்து கடவுள் அவன் முன் பிரசன்னமாகிறார். “உனக்கு வேண்டும் வரத்தை கேள்” என்கிறார். சாதகன் அதற்கு பதிலளிக்கிறான் : “எப்போதெல்லாம் நான் உம்மை காண விரும்புகிறேனோ அப்போதெல்லாம் நீங்கள் எனக்கு தரிசனம் தர வேண்டும்” “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி கடவுள் அவன் பார்வையிலிருந்து மறைகிறார். பக்தன் மிக்க ஆனந்தத்தில் லயிக்கிறான். எப்போதெல்லாம் அவன் விரும்புகிறானோ கடவுள் தோன்றிய வண்ணம் இருக்கிறார். ஒரு நாள் சாதகன் சொல்கிறான் :…

  • தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். இக்கதை பிறகு திரைப்படமாகவும் வந்தது. இன்னொருவிதமான அயல் நாட்டுக் கதைகள் வருவதுண்டு. வறுமையில் வாடும் தமிழ்க்குடும்பத்தில் ஒருவர் கஷ்டப்பட்டு கடுமையாக…

  • சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு……… ஆரம்பம் எது முடிவெது என்ற குழப்பத்தில் ரங்கராட்டினம் போல் ஒரு வட்டத்தில்…