Tag: செருப்பு

  • நேற்று நடந்தது புனே வந்த தினத்திலிருந்தே தினமும் மழை. நிற்காமல் தூரிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது கனமழையும். அபார்ட்மென்டுக்குப் பின்னால் சிறிய மலைத்தொடர். அதன் சரிவில் கட்டப்பட்ட கட்டிடம். திகில் பட பின்னணி இசை போல இரவு முழுதும் பலமான காற்றின் சத்தம். நேற்று நடு இரவில் போர்வையினால் காதை மறைத்துக் கொண்டு தூங்க முயல்கிறேன். திடீரென நெருப்பு அலார்ம். அடித்துப் போட்டுக் கொண்டு செருப்பு கூட அணியாமல் அபார்ட்மென்டுக்கு வெளியே வருகிறேன். கதவடைத்துக் கொண்டுவிடுகிறது. சாவியை எடுக்க…

  • செருப்படி சத்தம் காதைக் கிழித்தது பொறுக்கவியலாமல் சத்தம் நின்றதும் வாசல் வெளியே ஒரு ஜோடி செருப்பு பாதங்கள் எங்கேயென திசையெல்லாம் அலைகையில் செருப்படி சத்தத்தின் மாறாத ஞாபகம் திரும்பவும் அறையில் அடைந்தேன் செருப்படி சத்தம் மீண்டுமொருமுறை கேட்குமெனும் நம்பிக்கையில்

  • இன்னும் இருக்கிறது வாசலில் சில செருப்புகள் மோகத்தைக் கொன்று விடு விலை போகாத எனது 3 கதைகளின் தலைப்புகளை மாற்றி எழுதிப் பார்த்தேன் சில செருப்புகள் இன்னும் வாசலில் இருக்கிறது கொன்றுவிடு மோகத்தை! வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன் வாசலில் கொன்றுவிடு மோகத்தை இன்னும் சில செருப்புகள் இருக்கிறது வேற்றுமை உருபை மாற்றி இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா? என்னுடைய கதையின் தலைப்புகள் தானே! யாரைக் கேட்க வேண்டும்? வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர் மோகத்தை…

  • நடந்து கொண்டேயிருக்கையில் திடீரென்று நான் அணிந்திருந்த என் செருப்புகள் காணாமல் போயின அவற்றை தேடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தேன் வெகு நேரத் தேடலுக்குப் பின் கிடைத்தன என் செருப்புகள் அவற்றை என் கையில் பத்திரமாய் பிடித்துக் கொண்டு இல்லம் வந்தடைந்தேன்.

  • சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் வரும் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி