Tag: சாட்சி

  • கவிஞர் ஆனந்த் அவர்களின் முழுக் கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பாக சமீபத்தில் வெளி வந்தது. தலைப்பு சுவாரஸ்யமோ அல்லத்ய் முகப்பின் அழகான புகைப்படமோ – எதுவெனத் தெரியவில்லை – புத்தகம் என்னை ஈர்த்தது. ஆன்மீகத் தத்துவ தொனி தூவிய அவரது “சுற்றுவழிப்பாதை” நாவலை இதற்கு முன்னர் வாசித்துள்ளேன். அனேகமாக அவரது கவிதைத் தொகுப்பில் நிறைய ஆன்மீக கருப்பொருளில் எழுதப்பட்ட கவிதைகள் இருக்கும் என்பது ஊகம் (எதிர்பார்ப்பும் கூட, இப்போது வரும் கவிதைத் தொகுதிகளில் ஆன்மீக கருப்பொருள் அதிகம் வாசிக்கக் கிடைப்பதில்லை என்பது…

  • வளைந்தோடும் நதியின் கரையில் நீராடும் பார்த்தனின் இரு கால்களைச் சுற்றி வந்ததொரு நீள்நாகம். வெட்கத்துடன் முத்தமிடும் இளங்காதலியாய் அது பாதத்தை தீண்டிடவும் நதியின் ஆழத்திற்கு இழுக்கப்பட்டான். ஒளி ஊடுருவும் மாளிகையின் அறையில் விழித்தான் வெளியே நாற்புறமும் மீன்களும் நீர்ப்பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்தன பார்த்தனின் முன் எரிகுண்டம் ; நெய்யிட்டு தீ வளர்த்தான். அதன் உக்கிரத்துடன் போட்டியிட்டது அருகிருந்த பாம்பின் கண்களில் படர்ந்திருந்த இச்சைத்தீ. கணத்துக்கொரு தரம் வடிவமாற்றம் பாம்பு பெண் பாம்புப்பெண் தீச்சடங்கு முடியவும் “இது சாட்சி”…

  • ஒவ்வொரு கனவுகளுக்குள்ளும் நுழைவதும் வெளிவருவதுமாகவும் இருந்தேன். ஒவ்வொரு கனவிலும் எண்ணற்ற நிகழ்வுகள் எல்லா நிகழ்வுகளிலும் நான்! கனவுகளுக்குள் நான் நுழையவில்லையென்று பின்னர் தான் தெரிந்தது என்னைச் சுற்றிலும் கனவுகள் ஓடியும் பாய்ந்தும் சென்று கொண்டிருக்கின்றன நான் பாய்ந்து செல்லும் கனவுகளை நோக்கும் சாட்சியாக மட்டும் நின்று கொண்டிருக்கிறேன்.