-
கொட்டும் பனிப்பொழிவில் புள்ளியாக நடந்துவருகிறான் ஒருவன்அவனாகத்தான் இருக்க வேண்டும்அவன் எப்படி இங்கே?அவன் மாதிரிதான் தெரிகிறதுஅங்கே இரவுஅவன் கனவில் பனி பொழிகிறதுபுள்ளியாக நடந்துவருகிறாள் ஒருத்திஅவள் எப்படி அங்கே?அவள் மாதிரிதான் தெரிகிறதுவிதிர்த்து எழுந்திருக்கிறான்ஆடைவிலகிய தொடையிலிருந்துதனது காலை மெல்ல எடுக்கிறான்சத்தமின்றி திரும்பப் படுக்கிறான்அவனுடைய கனவு முடிந்துவிட்டதுஅவளது பகல் முடியபல மணி நேரம் இருக்கிறது அவன் அவளைத் தாண்டிச்செல்கிறான்அவன் மாதிரி இருந்த அவன்அவனாக இருந்திருந்தால்தாண்டிச் சென்றிருக்கமாட்டான்அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்கண்களுக்குள் பொழிகிறது பனிஎதுவும் நடக்காததைப் போல அவன் கனவிலிருந்து விழித்திருக்க மாட்டான்அவள் மாதிரி இருந்த… Read more
-
சீர்மை பதிப்பகம் விலை : ரூ 100 இணைய வழி ஆர்டர் செய்ய – https://www.commonfolks.in/books/d/iraithottam Read more
-
ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமிய சிந்தனைகளையும் ஆளுமைகளைப்பற்றியும் தினம் ஓரிரு குறிப்புகளாக ஃபேஸ் புக்கில் பதிந்தேன். அதைத் தொகுத்து நண்பர் Uvais Ahamed அவர்களுக்கு சில மாதங்கள் முன் அனுப்பியிருந்தேன். இரு வாரங்கள் முன் என்னைத் தொடர்பு கொண்டு தொகுப்பு நூல் வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது எனும் செய்தியைத் தெரிவித்து ஆச்சரியத்திலாழ்த்தினார். “இறைத்தோட்டம்” நூலை சென்னை புத்தக சந்தையில் வாங்கலாம். சீர்மை பதிப்பக வெளியீடு. — கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில்… Read more
-
12th Fail படத்தின் ஆரம்ப பகுதிகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை. Under Dog பற்றிய கதை என்று எண்ண வைக்கிறது. கதையின் முதன்மைப் பாத்திரம் மனோஜ் (விக்ராந்த் மாஸே) தில்லி நகருக்கு வந்த பின்புதான் “இங்கு ஏதோ நடக்கிறது” என்று திரையில் நிகழ்பனவற்றில் பார்வையை ஒட்ட வைக்கிறது. ஏழை ஒருவன் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதைச் சொல்லும் கதைகள் இதற்குமுன் பல முறை சொல்லப்பட்டுவிட்டது. 12th Fail திரைப்படத்தில் என்ன வித்தியாசம்? மனதைக் கசிய வைக்கும் செண்டிமெண்டாலிடி இத்தகைய படங்களின்… Read more
-
Maaz Bin Bilal எழுதிய ஆங்கிலக்கவிதை scroll இணைய தளத்தில் வெளியானது. அவரின் அனுமதியுடன் அடியேனின் தமிழாக்கம். — மஞ்சட்குறிப்புகளுடன் வெள்ளை இதழ்கள் உன் கூந்தலில். நீ குடைமரம் ஆகிவிட்டாய் வா, செண்பகமே மக்களின் வலிமழையிலிருந்து எனக்கு ஒதுங்கிடம் கொடு வா, கிளர்ச்சியற்ற உன் பரவசத்தை என்னுடன் பகிர் — மூலம் – https://amp.scroll.in/article/1061251/champa-a-poem-by-maaz-bin-bilal Read more
-
ஆண்டிறுதிப் பிரதிபலிப்புகள் வாய்மொழியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு இருக்கின்றன. உணர்வுகளின் கூட்டமாக அவை எனக்குள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு பெயரிட விழைந்தால், "கசப்பு" என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். "அவமானம்" அல்லது "அவமரியாதை" என்பது போன்ற வர்ணனைகளுக்குப் பொருந்தி வரும் இவ்வருடத்து சம்பவங்களை அனுபவங்களை என் மனதில் தொடர்ந்து அசைபோட்டு ‘ரீப்ளே’ செய்யும் குணம் சோம்பேறித்தனமான மனநிலையை உருவாக்கி, மலரப்போகும் புதிய ஆண்டு பற்றிய உற்சாகத்தை நீக்குகிறது. அசை போடும் அனுபவங்கள் இப்போது கடந்த காலத்தில் உள்ளன.… Read more
-
இனத்தின் தூய்மைக்குமாறாகமனத்தின் தூய்மையையேநான் விரும்புகிறேன் அஹுரா மஸ்டாவின்அருளை இழப்பதைவிடமனிதர்களின் கோபத்தைஎதிர்கொள்வது மேல்உலகம் முழுவதும்நாம் கண்டுபிடித்துவரும்பண்டைய நாகரிகங்கள்மனத்தின் தூய்மைக்குநேரடி சாட்சி மனம் ஒரு வலைப்பின்னல்திரும்பத்திரும்பஒவ்வொரு வினாடியும்குறுக்கும் நெடுக்குமாக எண்ணங்கள்நல்ல எண்ணங்களைஉலவ விடுங்கள்கெட்ட எண்ணங்களின்சுழற்சி இல்லாது போகட்டும் வெறுக்கத்தக்க எண்ணங்களில்எதிர்மறை உணர்ச்சிகளில்மனத் தூய்மை வீணாகியிருந்தால்ஒருபோதும்பண்டைய நாகரிகங்கள்கண்டுபிடிக்கப்பட்டிரா! Copyright ©2008 Farida Bamji Translation in Tamil : by the blogger Read more
-
I had dabbled in lay buddhist practice for a couple of years when I was introduced to Soka Gakkai International, way back in 1997. Like my other pursuits in my life, this practice too fizzled out. Certain friends kept persuading me for a few months. They asked what my reservations were. The obviously honest reasons… Read more
-
திரு. கார்த்திக் சுப்புராஜ் கண்ணை கசக்கிக் கொண்டிருந்தார். அடுத்த படத்துக்கான கதைக்கருவை யோசித்து யோசித்து எதுவும் தோன்றாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவர் ஓர் இயக்குனர் என்பதை அவரால் மறக்க முடியவில்லை. ஏதாவது படம் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரை துரத்திக் கொண்டிருந்தது. பாகுபலி போன்ற படங்களின் வெற்றியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று பொறி தட்டியது. தானியக்கிய ஒரு நல்ல படத்தின் ப்ரான்சைஸ் அல்லது சீக்வல்தான் எடுக்கப்போகும் அடுத்த படம் என்று முடிவெடுத்தார்.… Read more
-
லூதியானா ஸ்டேஷனில் ரயிலுக்காக காத்திருக்கையில் எனக்கு பக்கத்திருக்கையில் இருந்த சர்தார்ஜி மாலை ஆறே கால் மணிக்கு ஜலந்தருக்குக் கிளம்பும் ரயிலுக்காக முட்டியை கைகளால் அழுத்தியவாறே காத்திருந்தார். அவர் சுவாசம் விடும் சத்தம் என் காதை எட்டியது. அவரிடம் பேச ஆரம்பித்தபோது நாற்பது வருடங்களாக ஒரே குழுமத்தில் வேலை பார்க்கிறவர் என்று தெரிய வந்தது. தினமும் ஐலந்தரிலிருந்து வேலைக்காக லூதியானா வந்து போவது சிரமமாக இல்லையா என்று கேட்டேன். “பல முறை வேலையை விடுகிறேன் என்று சொன்னேன். சும்மா… Read more
-
The Night Face Up என்றோரு சிறுகதையை 1967இல் எழுதினார் ஹூலியோ கொர்த்தசார். ஒரு மோட்டார் சைக்கிள் விபத்துக்குப் பிறகு கதாநாயகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் யதார்த்தம் – கனவு இரண்டும் மாறிமாறி அடுத்தடுத்து தொகுக்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அவன், ஒரு சடங்குப் போரில் அஸ்டெக்குகளால் துரத்தப்படுகிறான். மோடேகா பழங்குடிகள் மட்டுமே அறிந்த ஒரு பாதையில் அவன் ஓடிக்கொண்டிருப்பதாக அவன் கனவு காண்கிறான். தாகம், மற்றும் தீவிர காய்ச்சலில் விழிக்கும் அவன் தன்… Read more
-
ஜே ஜே சில குறிப்புகள் – நாவலை வாசித்துப் பிரமித்துப் போனதுண்டு. இப்படியும் புனைவுகள் எழுத முடியுமா என்றெண்ணி வியந்து போனேன். இலக்கிய அங்கதம் எனும் வகைமை என்பதாக நாவல் படித்த நாட்களில் என் புரிதல்! ஜே ஜே சில குறிப்புகளில் ஒரு கற்பனையான இலக்கிய ஆளுமை உயிர் பெறுகிறார். ஜே ஜே சில குறிப்புகள் நாவல் வெளிவருவதற்கு கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு முன்னர் Sur பத்திரிக்கையில் வெளியானது – Pierre Menard, Author of the… Read more
-
இதற்கு முன் வாசித்த இரு கதைகளைப் போல The Lottery of Babylon சிக்கலான கதையில்லை. அது கூற வருவதை நேரடியாக கையாள்கிறது. அதன் வடிவம் ஒரு தொன்மக்கதை பாணியிலிருக்கிறது. இதனை ஒரு நவீனத் தொன்மம் என்று வகைப்படுத்தலாம். பாபிலோன் எனும் தொன்ம நாட்டிலிருந்து வெளியேறிய ஒருவன் சொல்லும் கண்ணோட்டத்தில் அமைந்திருக்கிறது கதை. பாத்திரங்கள், நிகழ்வுகள் என்று எதுவும் இல்லை. ஒரு பத்திபோல எழுதப்பட்டிருக்கிறது கதை. எதுவும் கிடைக்கும் என்ற ஒழுங்கு நிலவிய பூமியில் எப்போது “சந்தர்ப்பம்”… Read more
-
இந்தக் கதை ஒரு வினோதம். Tlon, Uqbar, Orbius Tertius – கதையைவிட எளிதில் அணுகத்தக்கது. பெரிய அளவில் தத்துவச் சித்திரிப்பு இதில் இல்லை. ஓர் உளவுக் கதை. மர்மக் கதையும் கூட. எட்கர் ஆலன் போ, ஜி கே செஸ்டர்டன் – இவர்களின் மகாரசிகனாக இருந்த போர்ஹேஸ் உளவுக் கதையின் வேகத்தை எளிதில் கதையின் துவக்கத்திலேயே நிறுவி விடுகிறார். முழுக்கதையும் தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தின் வடிவில் கூறப்படுகிறது. உளவாளி தூக்கிலிடப்படப் போகிறான் என்ற… Read more
-
போர்ஹேஸ் எழுதிய சிறுகதையொன்றின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி வைக்குமாறு நண்பர் Vasu Devan அவர்களிடம் கேட்டிருந்தேன். அதன் தலைப்பு – Tlon, Uqbar, Orbius Tertius. பொதுவாக போர்ஹேஸின் சிறுகதைகளில் வரிக்கு வரி நிறைய குறிப்புகள் அடங்கியிருக்கும். இந்தக் கதையிலும் இது போலத்தான். நொடிக்கு நொடி இணையத்தில் தேடி அந்தக் குறிப்புகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. சில குறிப்புகளைப் புரிந்து கொள்ள சில கட்டுரைகளை வாசிக்க வேண்டியிருந்தது. வாசிப்பாளரின் உழைப்பைக் கோரும் கதைகளையே போர்ஹேஸ் எழுதியுள்ளார்.… Read more
-
நண்பர் நிஷா மன்சூர் வாட்ஸப்பில் ஒரு மின்னூலைப் பகிர்ந்ந்திருந்தார். அவருடைய தந்தை வழி பூட்டனார் எழுதிய ஒரு கவிதை நூல். “நெல் குத்தும் ஞானப்பதம்” என்பது அதன் தலைப்பு. தமிழ் சிற்றிலக்கிய மரபு, தமிழர்களின் வாழ்வியல், இஸ்லாமிய மெய்ஞானம் – மூன்று அம்சங்களும் கலந்து எழுதப்பட்ட இந்தப் பாக்களை இசைக்கத்தக்க வகையில் இயற்றியுள்ளார் இதன் ஆசிரியர். கவிதைகளின் ஆரம்பத்தில் “இராகம் செஞ்சுருட்டி தாளம் ஆதி” என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் இதை சங்கீதமாகப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை என்கிறார்… Read more
-
ராஜதரங்கிணி நூலில் வரும் கஷ்மீர மன்னர்களின் வரிசையை வாசித்த போது என்னுள் தோன்றிய அதே பெருவியப்பு விஷ்ணு புராணத்தில் வரும் அரசவம்சங்களின் பெயர்களை அவ்வம்சங்களின் அரசர்களின் பெயர்களை வாசிக்கும்போதும் தோன்றியது. ராஜதரங்கிணி போன்று வரலாற்றுப் பிரக்ஞையுடன் புராணங்கள் எழுதப்படவில்லை என்றாலும் புராணமும் வரலாறும் இணைவதைப் பல இடங்களில் அவதானிக்க முடிகிறது. அசோகரின் பெயரை விஷ்ணு புராணத்தில் வாசித்தபோது அசோகரைத் தொன்ம பாத்திரமாக சித்திரிக்கும் பௌத்த இலக்கியங்கள் ஞாபகத்தில் வந்து சென்றன. புத்தர் வாழ்ந்த காலத்தை நிர்ணயிப்பதில் பௌத்த… Read more
-
Of Love and other demons –1510இல் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்ட The Four Books of Amadius of Gaul எனும் புதினம் பற்றிய ஒரு குறிப்பு நாவலில் வருகிறது. பிஷப்பின் தேவாலயத்தில் பாதிரி-நூலகராக இருக்கும் டீலோரா அந்நாவலை பல ஆண்டுகளுக்கு முன் பாதி வாசித்திருக்கிறார். அந்த நாவலுக்கு கத்தோலிக்க சர்ச்சுக்கள் உலகெங்கும் தடை விதித்திருக்கின்றன. தமது சர்ச் நூலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் வரிசையிலிருந்து அந்நாவலின் பிரதி தொலைந்து போய் விடுவதால் நாவலின் முடிவு… Read more
-
சோகம் நம்மைஆட்கொள்ளுகையில்நினைவுகளின், கவனத்தின்சின்ன சாகசங்களால்நாம் சில கணங்கட்குகாக்கப்படுகிறோம்:கனியின் சுவை, நீரின் சுவைகனவு நமக்குத் திரும்பித்தரும் முகம்,நவம்பர் மாதத்துவக்கத்தின் மல்லிகைகள்,திசைகாட்டியின் முடிவிலாத் தாபம்,தொலைந்துவிட்டதாய் நினைத்த புத்தகம்,லத்தின மொழிப் பாவகையின் சீர்,வீட்டைத் திறக்கும் சிறு சாவி,சந்தனம் அல்லது நூலகத்தின் வாசனை,ஒரு நிழற்சாலையின் பழமையான பெயர்,வரைபடத்தின் நிறங்கள்,சற்றும் எதிர்பாராத சொல்வரலாறு,மெருகேற்றிய நகம்,நாம் எதிர்பார்த்திருந்த சந்திப்பு,பனிரெண்டு முறை இருளில் கேட்கும் மணியோசை,நாம் எதிர்பார்க்காத உடல்வலி.எண்பது லட்சம் ஷிண்டோ தெய்வங்கள்நம் பூமியில் பயணித்தவண்ணம் இருக்கின்றனபணிவான அத்தெய்வங்கள் நம்மைத் தொட வருகின்றனதொடுகி்ன்றன, பின் சுற்றித் திரிகின்றன.… Read more
-
ஜோராஸ்ட்ரிய சமயத்தின் வேதம் ஜென்ட் அவெஸ்தா. அது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. காதா, யஸ்னா, வெந்திதாத், விஸ்ப்-ராத், யஷ்ட். குர்தா அவெஸ்தா அடுத்த படியில் உள்ள புனித நூல் தொகுப்பு. குர்தா அவெஸ்தாவின் பாராயணத்தின் முடிவில் ஜொராஸ்ட்ரியர்கள் சொல்லும் மந்திரம் அஷெம் வஹு. இது தியான வழிபாடு. மிகப் பழமையான இந்த வழிபாட்டிற்கு பலவித மறுவிளக்கங்கள். அவெஸ்தன் மொழியின் சிக்கலான தன்மை மற்றும் கூறப்படும் கருத்துகள் காரணமாக குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடும் பல மொழியாக்கங்கள் உள்ளன. ஆனால்… Read more
