• ஹோசூரில் வசிக்கும் கவிஞர் ந பெரியசாமி – என் நண்பரும் கூட – பரவலாக பல இணைய இதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார், நவீன விருட்சம், பண்புடன், வல்லினம், திண்ணை – முக்கியமான எல்லா இதழ்களிலும் இவரது படைப்புகள் வந்திருக்கின்றன. அவர் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்த இரு கவிதைகளை கீழே பதிவிடுகின்றேன். பெரியசாமியின் வலைதள சுட்டி : http :// naperiyasamy.blogspot.com தவளைக்கு சிக்கிய மீன் குளக்கரையிலிருந்து தவளை நீர் அதிர சிரித்தது சிக்கிய மீன்… Read more

  • நண்பர் றியாஸ் குரானாவின் கவிதைகள் ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்த தளத்திற்கு இட்டுச்செல்லும் வல்லமை பொருந்தியவை. சமீபத்தில் அவருடைய வலைதளத்தில் (http : maatrupirathi.blogspot.com) கீழ்க்கண்ட கவிதையை படித்து மிகவும் ரசித்தேன்.  காலைத் தேனீர் றியாஸ் குரானா காலாவதியாகிப்போன நாளொன்றின் காலைப் பொழுதிற்காக காத்திருக்கிறேன். கடந்தது மீள வராது ஆயினும் நான் சந்தித்தேயாக வேண்டும் அந்திப் பொழுதிலிருந்து பின்நோக்கி நடக்கிறேன் அல்லது சிந்திக்கிறேன் கொஞ்ச நேரம் எதுவும் தெரியவேயில்லை அது எனது பகல் தூக்கம் பின்னோக்கி வருவதுபோல்… Read more

  • மற்றவர்கள் குழுமியிருந்தபோது அக்கறையுடன் நலம் விசாரித்தான். தனித்துவிடப்பட்டபோது மௌனமாயிருந்து அன்னியமானான். இவனை பேசவைக்க சற்றுமுன் கூட்டமாய் நின்றிருந்த நண்பர்களை மீளச்சொல்ல வேண்டும் திரைப்படம் சென்றோம் நண்பர் குழாமுடன். அவனுக்கு படம் பிடிக்கவில்லையாம். எனக்கும் பிடிக்கவில்லை அவன் என் பக்கத்து இருக்கையில் அமராதது! எல்லோரும் விடுதியில் அளவின்றி உண்டு மகிழ இவன் குளிர் பானம் மட்டும் போதுமென்றான். நான் தந்த சிக்கன் துண்டுகளை கூட நண்பனுக்கீந்தான். நண்பர் குழுவுடன் என் வீடு வரை வந்தெனை இறக்கிவிட்டபோது அவன் இருந்த… Read more

  • வீட்டின் பின்புறம் இருந்த பூந்தொட்டிகளுக்கு நீருற்றிக்கொண்டிருந்தாள் ரிவோலி. சனிக்கிழமை மதியம். சாம்பல் நிறவானம். நவம்பர் மாதத்தில் மஞ்சள் நிறவானத்தை பார்ப்பது அபூர்வம். பொதுவாக சனிக்கிழமை ரிவோலியின் வீட்டில் அவளுடைய மாணவர்கள் வருவது வழக்கம். இன்று யாரும் வரவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்தாள். பக்கத்து பங்களாக்காரர்கள் உறங்கிக்கொண்டிருப்பார்கள். வெள்ளியிரவு லேட்நைட் பார்டிகளிலிருந்து அதிகாலை வந்து, அசதி நீங்காமல் தூக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். அங்கு இரு இளம் பெண்கள் தத்தம் காதலருடன் வசிக்கிறார்கள். அங்கு வசிக்கும் ஒரு… Read more

  • சந்தை

    வீட்டில் செய்த பண்டங்களை விற்க கடைகடையாய் ஏறி இறங்கினேன். ஒரு கடைகாரனும் என் பண்டத்தை கடையில் வைத்து விற்க சம்மதிக்கவில்லை… பண்டங்களை நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது. அடுத்த நாளும் பண்டங்களை செய்தேன்.. விற்பனை செய்ய தெருவெங்கும் கூவிச்சென்றேன். யார் வீட்டு கதவுகளும் திறக்கவில்லை காசு கொடுத்து வானொலியில் என் பண்டத்தின் பெயரை ஒலிக்கச்செய்தேன். ஒன்று கூட விற்கவில்லை. சுவரொட்டிகளும் விளம்பரங்களும் பத்திரிக்கைகளும் எதனாலும் கைகூடவில்லை விற்பனை. நடுத்தெருவில் வீசியெறிந்தேன் என் பண்டத்தை. வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை என்னவென்று பார்த்து… Read more

  • கூட்டம் பெருகிவிட்ட சிற்றுண்டி நிலையத்தில் வருபவர்களை வாயிலில் காக்கவைத்து உள்ளிருக்கும் கூட்டம் தணிந்த பின் காத்திருப்போரை உள்ளே விடும் வாயிற்காவலனொருவனை பார்த்தேன். நிகழ்கால இருப்பை பொறுக்காமல் நிற்காமல் நகரும் நினைவுகள். இறந்த கால அவஸ்தைகளை அசை போடும் ; எதிர் காலத்தை எண்ணி அல்லலுறும். உள் புகும் நினைவுகளை வாயிலில் நிறுத்தி பரிசோதித்து வடிகட்டி உள்ளனுப்பும் காவலனொருவன் எனக்கு கிடைப்பானா? Read more

  • சொல்

    குதூகலம். மகிழ்ச்சி. சந்தோஷம். உவகை. சொற்கள் உணர்வின் அடையாளமாக பரிமாறப்பட்டன. திகட்டிவிட்டதென்று எழுந்து கொள்ள முடியாமல் முற்றுப்புள்ளி எங்கோ போய் ஒளிந்திருந்தது. அலுப்பு சலிப்பு வெறுப்பு இயலாமை சொற்களில்லாமல் சொன்னது உடல் மொழி. சொற்கள் முற்றுப்புள்ளியை அழைத்து வந்து பொருத்திக்கொண்டு அமைதியாயின. புன்னகை புன்முறுவல் குறும்புப்பார்வை வெடுக்கென எழுதல் உடல்மொழி கட்டைவிரலை உயர்த்திக்காட்டி வெளியேறியது… சொற்கள் அமைதியாய் காகிதத்தில் வந்தமர்ந்தன கவிதையாக. இறுமாப்புடன் திரும்பிய உடல்மொழி கவிதையாக உருக்கொண்ட சொற்களைக்கண்டு மோனமாகி நெற்றி அகன்று சிந்தனை வயப்பட்டது.… Read more

  • சிறுவயதிலிருந்தே நாகசொப்பனம் கண்டு அச்சத்தில் பலமுறை தூக்கம் விழித்திருக்கிறேன். சிறுவயதில் பாம்புக்கனவு வந்து தூக்கத்தில் கத்தினால், என் தாய்க்கு பக்கத்தில் தூங்கக்கிடைக்கும். வாலிபனான பிறகுகூட பாம்புக்கனவுகள் தொடர்ந்தன. இளமையில் காம உணர்ச்சி மிகுந்திருப்பதால் பாம்புக்கனவு வரக்கூடும் என்று சொன்னார்கள். ஒரு ஜோசியன் ஏன் ஜாதகத்தை பார்த்துவிட்டு, "உங்கள் கண்ணுக்கு நாக தரிசனம் அடிக்கடி கிடைத்து கொண்டிருக்கும்" என்றார். அவை கனவு தரிசனங்களா ? அல்லது நிஜ தரிசனங்களா? என்று தெளிவு படுத்தவில்லை. திருமணமான பிறகும் பாம்புகள் கனவில்… Read more

  • வாசல்

    சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் வரும் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி Read more

  • என் கவிதைக்கான கருப்பொருளாக நீரைத் தேர்ந்தெடுத்தேன். பீய்ச்சியடித்த ஊற்று, மணலில் சீறிப்பாய்ந்து பாறைகளைத்தள்ளி விரையும் காட்டாறு. அதி உச்சியின் மேலிருந்து கொட்டும் அருவி. சமவெளிகளில் நகரும் நதி. கிளைக்கும் கால்வாய்கள். புனித நகரங்களின் இரு மருங்கிலும் படரும் ஜீவ நதி. அணைகளால் தடுக்கப்பட்ட ஒட்டத்தை தன் மட்டத்தை உயர்த்தி மீட்டெடுத்து கடும் வேகத்தில் பயணமாகி, பரந்து விரிந்த கடலுடன் சங்கமமாகி தன் அடையாளமிழக்கும் ஆறு. குழாயிலிருந்து விடுபட்டு கழுவியில் நிறைந்து, குழிந்து, வெளிச்செல்லும்குழாயின் உள் புகும் நகராட்சி… Read more

  • யாரோ எழுப்பிவிட்டது போல ஆறு மணிக்கே எழுந்துவிட்டேன். வார நாட்களில் கூட ஏழரை அல்லது எட்டு மணிக்கு குறைவாக எழும்பிய ஞாபகம் இல்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்பதறைக்கு முன்னர் எழுந்ததாக சரித்திரமே இல்லை. இன்று என்னவோ சீக்கிரம் விழித்துவிட்டேன். இயற்கையின் அழைப்பு வரும்போது தூக்கத்திலிருந்து எழுந்து சிறுநீர் கழித்து பின்னர் படுக்கைக்கு திரும்பி தொடர்ந்து தூங்குதல் நிறைய நாள் நடந்திருக்கிறது. இன்றும் அப்படிதான் நினைத்தேன். சிறுநீர் கழித்தவுடன், என்ன தோன்றியதோ பற்பசையையும் பிரஷ்ஷையும் எடுத்து பல் துலக்கினேன். பல்… Read more

  • சமரசம்

    சுவரேறி குதித்து தனியார் நிலமொன்றில் தெருவோரக்கிரிக்கெட் விளையாடினார்கள் சிறுவர்கள். மட்டைக்குரிமையாளனே முதலில் மட்டை பிடிப்பான். அவ்வளவு எளிதில் ஆட்டமிழப்பதுமில்லை. ஒங்கி அடித்தான் பந்தை. சுவரைத்தாண்டி ரோட்டில் விழுந்தது. பந்து சுவரைத்தாண்டிப்போய் விழுந்தால் அவுட். ஆட்டமிழக்கவிருப்பமில்லை மட்டையாளனுக்கு. தானே அம்பயராக வேண்டுமென்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அவன் கருத்துப்படி அவன் “நாட் அவுட்” அவனைப்பெவிலியனுக்கு அனுப்ப பேச்சு வார்த்தை துவங்கியது. ரோட்டில் விழுந்து லாரியொன்றின் டயரில் சிக்கி நசுங்கிப்பொயிருந்த பந்தை எடுத்துவந்தான் ஒரு பீல்டர். ஆட்டம் தொடர வேறொரு… Read more

  • முழுதும் மொட்டையடிக்கப்பட்ட ஒற்றைக்குன்று அதன் உச்சியில் ஒரே ஒரு மரம். குன்றின் பின்னிலிருந்து உதித்துக்கொண்டிருந்த சூரியனின் கதிர்களை மறைத்தது உச்சியில் இருந்த ஒற்றை மரம். +++++ மருந்துக்கு ஒரு புல் கூடமுளைத்திருக்கவில்லை. குன்றின் சொறசொறப்பான உடம்பை இறுக்கப்பற்றி ஏறிக்கொண்டிருக்கையில் கைகள் சிவந்துபோயின. சில இடங்களில் கல்குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய வழுவழுப்பில் கால்கள் வழுக்கினாலும் கரங்கள் சுகம் பெற்றன. சற்றுநேரத்தில் சூரியன் மரத்திற்கு பின்னிலிருந்து உயர எழுந்து கண்ணைக்கூசவைத்தது. கூசிய கண்களை சுருக்கியபடி ஏறி உச்சியை அடைந்தேன். +++++ சூரியனை… Read more

  • வெண்மணல். உடைந்த சிறுசிறு கண்ணாடித்துண்டுகள். காயாத செந்நிற திரவம். ஒர் இறுக்கமான ஒவியத்தின் சாத்தியக்கூறுகள். திருட்டுத்தனமாக புகைக்க வந்த சிறுவன் மணல்மேட்டில் சிதறிக்கிடந்த கூறான கண்ணாடித்துண்டுகளை கவனிக்காமல் தடுக்கிவிழுந்திருக்கலாமோ? ஆற்றோரமாயொரு சமயவிழாவில் நடந்த குரூரமான வன்முறையின் குறியீடோ? காதலனொருவன் காதலியின் மேல் சிவப்புநீரடித்து ரகசியமாக “ஹோலி” கொண்டாடுகையில் உடைந்துபோன வெண்ணிற வளையல்துண்டுகளோ? உரிமம் பெறாத மருத்துவர் செய்த கருக்கலைப்புக்கான ஆதாரங்களின் குவியலோ? +++++ மணற்புயலுருவாகி மணல் மூடி கண்ணாடித்துண்டுகள் மற்றும் செந்நிற திரவம் மறைந்து போயின. +++++… Read more

  • பழத்தில் உள்ள விதைகளை எண்ணுதல் எளிது. விதைக்குள் இருக்கும் பழங்களை எண்ணுவது எப்படி? +++++ அறுத்துவைத்த ஆப்பிளுக்குள் இருந்த விதை ஆறு ! பத்திரப்படுத்தி வைத்திருந்த விதைகளைக் கவர்ந்ததாரு? என்னிடமிருப்பது ஒரே ஒர் ஆப்பிள். விதைகளை கொண்டு தாரும் ! கடைசி ஆப்பிளை தரவும் சம்மதம். விதையிருந்தால் போதும். +++++ காணாமல்போன விதைகளைத்தேடி கானகம் வரை வந்துவிட்டேன். நிறைய மரங்கள் ! என் வீட்டிலிருந்து களவு போன விதையிலிருந்து எந்த மரம் முளைத்தது? யாராவது சொல்லுங்கள் !… Read more

  • மும்பையில் என் நண்பன் – நினாத் – உயிரிழந்துவிட்டான். பூனாவிலிருந்து இன்னொரு நண்பன் போன் செய்துசொன்னான். எதாவது வம்புக்காக மட்டும் போன் செய்து கொஞ்சம் "போர்"அடிக்கும் பூனா நண்பனின் தொலைபேசி அழைப்பை நிறைய நேரம் எடுக்காமல் இருந்திருக்கிறேன். இன்று நான் அப்படி செய்யவில்லை. எடுக்காமல் விட்டிருக்கலாமோ? இல்லை இன்று என்றில்லை, நினாத் (Ninad) தின் மரணச்செய்தி எப்போது எட்டியிருந்தாலும், இன்றைய மாலையில் எனக்குள் ஏற்படுத்திய அதே அதிர்ச்சியை மாறாமல் தந்திருக்கும். இறக்கும் வயதல்ல நினாத்துக்கு. 35 வயதுதான்… Read more

  • உண்மை ஒர் பிரசினை. இரக்கமற்றது. நிம்மதியை குலைப்பது. எல்லா பக்கங்களிலும் நம்மை வளைத்து என்ன இருக்கிறது என்று வலுக்கட்டாயமாக காட்டுகிறது ; பார்க்கவைக்கிறது. மொத்தமாக, உண்மை எரிச்சலூட்டுவது. (translation of a paragraph from "Conversation with the God" written by Neale Donald Walsch) Read more

  • ராஜினாமா

    வெளியேறும் எண்ணம் வந்தது. இருக்கையிலிருந்து எழ முயலும்போது கை கட்டப்பட்டது பொன் விலங்கோ? மஞ்சள் நூலோ? பொருட்படுத்தாமல் கையை உதறி எழுகையில் அழுகை சத்தம். போகாதே ! என்னை விட்டு போகாதே ! மேலதிகாரியின் குரலென அறிவதற்கு கொஞ்ச நேரம் பிடித்தது. எங்களை விட்டு போகாதே இது அதிகாரியின் அதிகாரி. சபாஷ்! எல்லாருக்கும் நான் எழும் சத்தம் கூட தெளிவாக கேட்கிறது. என் குரல் பழையபடி கேட்க முடியாதவாறு இவர்கள் செவிகள் மீண்டும் பழுதுபடுமுன் இங்கிருந்து விலகுதல்… Read more

  • ஒளித்துவைக்கப்பட்டிருந்த உண்மையொன்று வெளிவர முயன்றது. வாசலை சார்த்தி வைத்திருந்தார்கள் உண்மையை சித்திரவதை செய்து அறையில் அடைத்துவைத்தவர்கள். உடைத்து திறக்க ஆயுதமேதும் அகப்படவில்லை. தலையை முட்டி மோதி திண்டாடி தடுமாறி வந்தது வெளியே. யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எங்களில் ஒருவன் போல் இல்லையே! என்று சொல்லி நிராகரித்தன பொய்கள். உண்மைக்கு பசித்தது. உயிர் போகும்படி பசி. நீதி மன்றத்தில் நீதிபதிகள் சோறிட்டு உண்மையின் உயிரை காப்பாற்றுகிறார்கள் என்று கேள்விப்பட்டு விரைந்தது. உணவருந்திக்கொண்டிருந்த நீதிபதி வக்கீலும் துணைக்கு வந்து சோறு… Read more

  • முடிதிருத்தும் நிலையத்தில் நன்கு தூக்கம் வருகிறது. திரையரங்குகளிலும். தேர்வு எழுதும் அறைகளில் திறம்பட. கோவில்களில் மணியோசை தாயின் தாலாட்டு போலவே ஒலிக்கிறது. ரயிலின் புறப்பாட்டுக்கு காத்திருக்கும்போது துடங்கி சேருமிடம் வரும்வரை சயனம்தான். வேலை செய்யுமிடத்தில் மதியவுணவுக்குப்பின் வரும் கொட்டாவி பிறருக்கு தெரியாமலிருத்தல் பிரம்மப்ரயத்தனந்தான். மகளின் பள்ளியில் ஆசிரியர்களை சந்திக்க காத்திருக்கும் பொழுதுகளில் குழந்தைகள் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்து திருப்பள்ளிஎழுச்சியாகும். இரவு எத்தனிக்கும்போது மட்டும் தூக்கம் காணாமல் போய்விடுகிறது. புத்தகம் படித்தாலும் காதுக்குள் வைத்து கைத்தொலைபேசியில் வானொலி கேட்டாலும்… Read more