-
சமீபத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பங்கு கொள்வதற்காக நண்பர் எம்டிஎம் தில்லி வந்திருந்தார். இக்கருத்தரங்கில் பார்வையாளனாக கலந்து கொண்டேன். கருத்தரங்கை மட்டுறுத்தியவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் அவர்கள். சர்வதேச அளவில் கவனத்தை பெற்றிருக்கும் சச்சிதானந்தன் இரு வருடங்களுக்கு முன்னர் நோபல் பரிசுக்கான இறுதிப் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் என்று சொல்லப் படுகிறது. சாஹித்ய அகாடமியின் முதன்மை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெறுவதற்கு முன்னர் கேரளாவில் ஆங்கிலப் பேராசிரியாக இருந்தார். ஏகப்பட்ட தேசிய சர்வ… Read more
-
சொல்வனம் இதழ் 80 இல் வெளியான கட்டுரையை வாசித்த நண்பர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். “முன்னுரையில் ஆர்வமூட்டும் இரண்டு வினாக்களைப் பட்டியலிட்டு அவற்றிற்கு மிலிந்தா பன்ஹா விடையளிக்கிறது என்றீர்கள்; முழு கட்டுரையிலும் ’ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?’ மற்றும் ‘ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?’ என்ற வினாக்களுக்கு விடை இல்லையே” என்றார். மற்ற வாசகர்களுக்கும் இது தோன்றியிருக்கலாம். இவ்விரண்டு வினாக்களுக்கும் “மறுபிறப்பு” என்ற இரண்டாவது அத்தியாயத்தில் விடை இருக்கிறது. அதன் சில பகுதிகளை… Read more
-
”மிலிந்தா பன்ஹா” பௌத்த இலக்கியத்தின் ஒரு புகழ் பெற்ற நூல் : ஏறக்குறைய கி.மு முதலாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்கலாம். பௌத்த தத்துவங்களை எளிதாகவும் கவனத்தில் கொள்ளத்தக்க வகையிலும் இந்நூல் பேசுகிறது. பாக்ட்ரியா என்ற பிரதேசத்தை ஆண்டு வந்த கிரேக்க மன்னன் மிலிந்தனுக்கும், பௌத்தத் துறவி நாகசேனர் என்பவருக்கும் இடையிலான உரையாடல் வடிவில் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரையாடலில் மிகவும் சுவையான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. உதாரணத்திற்கு “ஆன்மா இல்லையென்றால், மறுபிறவியில் பிறப்பது எது?ஆன்மா இல்லையென்றால், இப்போது பேசிக்கொண்டிருப்பது எது?”… Read more
-
மக்காவின் எல்லா முஸ்லீம்களும் மதினாவிற்கு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். நபிகள் நாயகமும் அபு-பக்கரும் மட்டும் எஞ்சியிருந்தனர், மக்காவை விட்டு வெளியேறுவதற்கு அல்லாஹ்-வின் அனுமதிக்காக நபிகள் நாயகம் காத்திருந்தார். இறுதியில் ஒரு நாள் ஜிப்ரீல் அவரிடம் வந்து சொன்னது : ”இன்றிரவு உன்னுடைய படுக்கையில் படுக்காதே” இரவு நெருங்கிய போது, அலியும் நபிகள் நாயகமும் மட்டும் வீட்டில் தனியே இருந்தனர். திடீரென்று, அவர்கள் வீட்டுக்கு வெளியே சில சத்தங்களைக் கேட்டனர். வெளியில் பார்த்தபோது, நபிகளின் எதிரிகள் வீட்டைச் சுற்றி… Read more
-
இன்னும் இருக்கிறது வாசலில் சில செருப்புகள் மோகத்தைக் கொன்று விடு விலை போகாத எனது 3 கதைகளின் தலைப்புகளை மாற்றி எழுதிப் பார்த்தேன் சில செருப்புகள் இன்னும் வாசலில் இருக்கிறது கொன்றுவிடு மோகத்தை! வேறு மாதிரி மாற்றிப் பார்த்தேன் வாசலில் கொன்றுவிடு மோகத்தை இன்னும் சில செருப்புகள் இருக்கிறது வேற்றுமை உருபை மாற்றி இன்னொரு சொல்லையும் சேர்க்கலாமா? என்னுடைய கதையின் தலைப்புகள் தானே! யாரைக் கேட்க வேண்டும்? வாசலில் இன்னும் இருக்கும் சில செருப்புகளால் அடிப்பர் மோகத்தை… Read more
-
வெற்றி, ஆரோக்கியம் மற்றும் விவேகம் – இவைகள் ஆன்மாவின் இயற்கைக் குணங்கள். பலவீனமான சிந்தனைகளுடனும் பழக்கவழக்கங்களுடனும் அடையாளப்படுத்திக் கொள்ளுதலும் மனதை ஒரு நிலைப்படுத்துதல், விடாமுயற்சி மற்றும் தைரியம் – இவற்றின் பற்றாக்குறைகளுமே வறுமை, நோய், மற்றும் இன்ன பிறவற்றால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காரணங்களாகும். உன் வெற்றிக்கான மனத்திறனை அச்ச எண்ணங்கள் கொண்டு நீயே முடக்கி விடுகிறாய். வெற்றியும், உடல்-மன பூரணத்துவமும் மனிதனின் உள்ளார்ந்த பண்புகளாகும் ஏனெனில் அவன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான். தன் பிறப்புரிமைக்கு பாத்தியதை… Read more
-
நிறைவு என்ற பதத்துக்கு நிறைய என்று பொருள் கொண்டு கொண்டாடப்படும் பண்டிகைகளின் போது நிறைய வகைகளில் “நிறைய”.. “கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய” “சென்ற வருடத்தை விட நிறைய” “மைத்துனரின் வீட்டை விட நிறைய” என! கொஞ்சமிருப்பவரும் “நிறைய” காண்பிப்பதற்கு நிறைய கடன்களைப் பெற நிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும். அந்தஸ்தை நிரூபிக்க நிறைய பரிசுகள் ! நிறைய உடைகள் ! நிறைய இனிப்புகள் ! நிறைய விருந்துகள் ! நிறைய வாழ்த்தட்டைகள் ! நிறைய மனநிறைவும்… Read more
-
அக்கரையின்றி திரிபவனின் வேட்கை படரும் கொடி போல வளரும் ; வனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல் அவன் அங்கும் இங்குமாக அலைந்து திரிவான். பிசுபிசுப்பு மிக்க அருவெறுப்பான தீவிர நாட்டம் உன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது கடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய் உன் துயரங்கள் வளரத் தொடங்கும் மாறாக, இவ்வுலகத்திலேயே, அருவெறுப்பான தீவிர வேட்கையிலிருந்து நீ விடுபடுவாயானால் தாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல உன் துயரங்கள் நீங்கும் இங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும்… Read more
-
போன வருடம் ஒரு கட்டுரையில் “பாரதி மாயை” என்ற சொற்றொடரை முதல் முறையாகப் படித்தேன். அப்போது பாரதியின் ”மாயையைப் பழித்தல்” என்ற கவிதையின் கீழ்க்கண்ட வரி என் நெஞ்சில் ஓடிற்று :- “உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?” எனக்கும் பாரதிக்குமிடையிலான உறவு எப்போது தொடங்கியது? கையடக்க ”பாரதியார் கவிதைகள்” புத்தகம் அன்பளிப்பாக கிடைத்தபோதுதான் என்று நினைக்கிறேன். ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்புத்தகம் கிடைத்தவுடன் நான் புத்தகத்தைப் பிரித்து படித்த முதல் பாடல் என்ன என்று எனக்கு… Read more
-
லைஃப் ஆப் பை – திரைப்படத்தை இன்று பார்த்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தைகள் இல்லாமல் தனியாக நானும் என் மனைவியும் சென்று பார்த்த படம் என்ற சிறப்பு இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. வார நாள் என்பதால் கூட்டமில்லாமல் இருக்கும்; காலை 10 மணிக்காட்சிக்கு ஒன்பதரை மணிக்கு சென்றால் எளிதில் டிக்கட் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் மல்டிப்ளெக்ஸுக்குள் நுழைந்தால் கவுன்டரில் நீளமாக க்யூ. இளவட்டங்கள் கையில் புத்தகங்களில்லாமல் கேர்ள்-ஃப்ரண்ட்ஸ் சகிதமாக அதிகாலை ஒன்பது மணிக்கே படம் பார்க்க வந்து… Read more
-
நடந்து கொண்டேயிருக்கையில் திடீரென்று நான் அணிந்திருந்த என் செருப்புகள் காணாமல் போயின அவற்றை தேடி பல இடங்களிலும் அலைந்து திரிந்தேன் வெகு நேரத் தேடலுக்குப் பின் கிடைத்தன என் செருப்புகள் அவற்றை என் கையில் பத்திரமாய் பிடித்துக் கொண்டு இல்லம் வந்தடைந்தேன். Read more
-
அமைதியை குலைத்து அறைக்குள் நுழைந்த இசையை விரட்டியடிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி காதை பொத்திக்கொண்டேன் இசை இப்போது தென்படவில்லை. இசை கண்ணுக்கு தெரியாமல் எங்காவது ஒளிந்திருக்கக்கூடும் என்று காதிலிருந்து கைகளை எடுக்கவில்லை கை வலிக்கத் துவங்கியபோது இரு கைகளை தொங்கப்போட்டு வலியை துரத்தினேன். இசை அவ்விடத்திலிருந்து ஏற்கெனவே விலகிச் சென்றிருக்கலாமென எண்ணிக்கொண்டு மீண்டும் உறக்கத்தை தேடும் முயற்சியில் இறங்கினேன் Read more
-
மிருகக் காட்சி சாலையின் முகப்பில் கம்பீரமாக தசைகள் புடைக்க மிடுக்குடன் வீரமாக உறுமுவது போல நிற்கும் சிங்கத்தின் சிலை. கூண்டுக்குள் பிடறி எலும்பு தெரிய ரோமம் உதிர்ந்து பாவப் பட்ட பார்வையுடன் தரையில் போடப்பட்ட காய்ந்த புற்களை நக்கிக் கொண்டிருக்கும் நிஜச் சிங்கம். Read more
-
“Writer’s Block” என்று சொல்வார்கள். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் ஒர் எழுத்தாளருக்கு எதுவுமே எழுதத் தோன்றாமல் இருக்கும் ஒரு phase-ஐ அப்படி சொல்வார்கள். கற்பனை சரிவர எழாது. “rhythm”ஐ இழந்து போயிருப்பார். சொந்த வாழ்க்கை ஏற்பட்ட சில துயர சம்பவங்களாலோ, துக்க நிகழ்வுகளாலோ எழுத்தாளருக்கு இப்படியொரு “block” ஏற்படக்கூடும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆகஸ்டு 16க்குப் பிறகு ஒன்றும் எழுதவில்லை. ஒரு வரி கூட. அலுவலகத்தின் வேலைப் பளுவோ, அலுவல்கள் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களோ, அலுவலகம் இடம்… Read more
-
வெகு காலமாக புரட்டப்படாத புத்தகத்தின் பக்கங்களுக்குள் கிடந்தது இலை பச்சை மங்கி வெண்மைப் பட்டுப் போன ஆனால் வடிவம் குன்றா அந்த இலையில் வாசம் தொலைந்திருந்தது பழைய புத்தகத்தின் வாசனையை விரும்பி முகர்கையில் இலையின் வாசமும் சேர்ந்து வந்தது. இலை கிடந்த பக்கத்தில் காணாமல் போயிருந்த எழுத்துகள் சில இலையில் பதிந்திருந்தன Read more
-
சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு ஓடி வந்த நாயொன்றின் மேல் கல் வீசப்பட அது வள்ளென்று குரைத்தவாறு கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத ஜாடியின் உள்ளிருந்து விழுந்து சிதறிய மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு……… ஆரம்பம் எது முடிவெது என்ற குழப்பத்தில் ரங்கராட்டினம் போல் ஒரு வட்டத்தில்… Read more
-
மரம் போலவொரு அழகான கவிதை என் வாழ்நாளில் என்னால் எழுத முடியாது. பசி மிகுந்த மரத்தின் வாய் பூமித் தாயின் வழியும் முலைகளில் பொருத்தப்பட்டிருக்கும். கடவுளை தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் தன் இலைக் கரங்களை எழுப்பி தொழுகை புரியும். கோடை காலங்களில் வண்ணாத்திக் குருவியின் கூடுகளை தொப்பிகளாக அணிந்து கொள்ளும். மார்பில் பனி பூசிக் கொண்ட மரங்கள் மழையுடன் கூடும் என் போன்ற முட்டாள்களால் கவிதை மட்டுமே கிறுக்க இயலும் கடவுளால் மட்டுமே மரத்தினை படைத்தல்… Read more
-
ஒரு பாழடைந்த கோட்டை முன் நின்று கொண்டிருந்தேன். ஸ்பெயின் நாட்டில் ஓலைட் என்கிற ஊருக்கருகில் இருக்கும் கோட்டையது. கோட்டையின் நுழைவாயிலின் முன் ஒருவன் நின்றிருந்தான். என்னை அவன் உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்கிறான். உள்ளே நுழையக் கூடாது என்று அவன் சொல்வதன் காரணம் என் நுழைவை தடுத்து நிறுத்தி அதன் மூலம் ஒரு விதமான முக்கியத்துவம் பெறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று என் உள்ளுணர்வு சொன்னது. நான் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பதை சொன்னேன்.… Read more
