Category: Uncategorized

  • “எதற்காக எழுதுகிறேன்?” நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கரின் பேரன் அவரிடம் “நீங்க நல்லவரா கெட்டவரா” என்று கேட்பானல்லவா? அப்போது வேலு நாயக்கர் சொன்னது போல “தெரியலியேப்பா” என்று தான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். இதற்கு முன்னரும் இந்த கேள்வி என்னுடைய சில நண்பர்களால் கேட்கப்பட்டது. ஒருவன் “என்ன அல்டெர்னெடிவ் கேரியரா?” என்று கேட்டான். “கேரியர்” என்றால் ஒற்றை ரூபாயாவது சம்பாதித்திருக்க வேண்டும். “எழுதறேன்னு சொல்லிட்டு ஒன்னோட வெட்டிச் செலவு தான் அதிகமாயிருக்கு!” என்று திருமதியார்…

  • மௌனத்திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த 1923 இல் தன் திரைப்பட வாழ்வை துவக்கியவர் மிசொகுச்சி. தனது 58ம் வயதில் அவர் இறக்கும் போது கிட்டத்தட்ட 75 திரைப்படங்களை அவர் இயக்கியிருந்தார். குரோசவா, யசுஜிரோ ஒசு – இவர்களோடு சேர்த்து மிசொகுச்சியும் ஜப்பானிய சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக கொண்டாடப்படுகிறார்.

  • சில இணைய இதழ்களில் வெளிவந்து பின்னர் இந்த வலைதளத்தில் வலையேற்றிய 23 சிறுகதைகளை காலச்சுவடு நிறுவனம் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது. பக்கங்கள் : 208 விலை : ரூ 190    

  • ஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து சிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது,  ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான்  மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “…

  • ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை.

  • சக்கரவாளம் கட்டுரைத் தொடர் இருபத்தியெட்டு இடுகைகளுடன் நிற்கிறது. கடும் அலுவலகப் பணிச்சுமை காரணமாக தவிர்க்க முடியாத இடைவெளி ஏற்பட்டுவிட்டது. கட்டுரைத்தொடரை மே மாதத்துக்குள் எழுதி முடித்துவிட வேண்டும்! பார்ப்போம் நடக்கிறதா என்று! இவ்வலையில் பதியப்பட்டிருந்த இருபது சிறுகதைகளை நீக்கி விட்டேன். அச்சிறுகதைகளை  எல்லாம் ஒரு தொகுதியாக காலச்சுவடு நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தொகுதியின் தலைப்பு – டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில். அச்சிடப்பட்டவுடன் புத்தகத்தின் முகப்புப் பக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வருடம் இரண்டே இரண்டு சிறுகதைகள் தான்…

  • மூன்று மாதங்களுக்கு முன்னர் பலவீனமானதொரு தருணத்தில் அகிரா குரோசவாவின் ஐந்து படங்கள் அடங்கிய பேக் ஒன்றை ஒரு கடையில் வாங்கித் தொலைத்துவிட்டேன். தினம் ஒரு படம் என்று ஐந்து நாட்களில் ஐந்து படங்கள். இணையத்தில் எங்காவது குரொசவாவின் வேறு படங்கள் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து தோல்வியடைந்தேன். அமேசானில் வேறு மூன்று திரைப்படங்கள் அடங்கிய பேக் ஒன்று, தனித்தனியாக இரண்டு டிவிடிக்கள் என மேலும் ஐந்து படங்கள் வாங்கினேன்….ஹ்ம்ம் குரொசவாவின் மொத்தம் பத்து படங்கள்! ( Drunken…

  • “என்னால் படைப்புக்குள் நுழைய முடியவில்லை” என்ற வாக்கியத்தை நாம் கேட்டிருக்கிறோம். படைப்புக்குள் நுழைதல் என்றால் அப்படைப்பின் பாத்திரங்களுக்கு நடுவில் பாத்திரங்கள் உலவும் சூழலில், கண்ணுக்குத் தெரியாமல், வேவு பார்ப்பவனைப் போன்று கலந்து நிற்றலைக் குறிக்கும். பாத்திரங்களின் உணர்வுப் பெருக்கில் மிதந்து செல்லும் இலை மேல் எறும்பாக வாசகன் / பார்வையாளன் தன்னை உணர்தலைக் குறிக்கும். ரஷமோன் திரைப்படத்தில் விறகுவெட்டி விடுவிடுவென்று நடந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் வந்தடையும் முதற்காட்சி யதார்த்தத்திலிருந்து உண்மையைத் தேடி விரையும் மனித விழைவின்…

  • சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன் ‘யாமிருக்க பயமேன்?’ என்ற ஆறுதற்சொற்களுக்கு மேல் வேலேந்தி நிற்கும் முருகன் படம் தொங்கும் தமிழ்நாட்டில் இன்று எழுத்தாளர் பெருமாள் முருகன் ‘மதம்’ பிடித்த யானைகளின் கால்களில் சிக்கித் தவிக்கிறார் ; ஓடி மறைகிறார்! நக்கீரனும் பொய்யாமொழிப்புலவனும் வாழ்ந்த பூமி! நாத்திகமும் ஓங்கி, சைவமும் தழைத்து, .ராமானுஜர் வகுத்த வழியில் வைணவம் சாதிச் சுவர்களையெல்லாம் தாண்டி அந்தணரையும் மற்ற வகுப்பினரையும் இணைத்துச் செழித்த நாடு ! மீசைக்கார பாரதி சாதிகள் இல்லையென்று…

  • பெருமிதமா? நெகிழ்வா? எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது? ராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார்.  “நான்…

  • மரம் வெட்டும் திருவிழா காலனியில் இன்று இனிப்பு விநியோகம் முன்வாசலில் நின்ற வயதான மரங்கள் வெட்டப்பட்டு கட்டிட பால்கனிகளில் வெளிச்சம் பாய்ந்த மகிழ்ச்சியில் ; கலைந்த கூடோன்றுள் கிடந்த பறவை முட்டைகளை வீசியெறிந்து விளையாடி குழந்தைகள் குதூகலிப்பதை மரங்களின் இடத்தடையின்றி நகர்ந்த வாகனங்களின் உறுமலில் எழுந்த புகையை சுவாசித்தவாறு சுழலும் சங்கிலி-இரம்பமிடும் சத்தத்தின் பின்னணியில் பால்கனிக்காரர்கள் கண்டு களித்தார்கள் மரண தினத்தை கொண்டாடும் மரபு மரம் மரணித்த அன்றும் மாறாமல் தொடர்ந்தது ​@ studiothirdeye.com செயல்முறை சிந்தனைப்பாத்திரத்தில்…

  •   சிறப்புப் பதிவு : மாதவன் நாராயணன் காஷ்மீர் ஓர் அரை-விதவை. சமவெளியுமல்லாத மலையுமல்லாத ஒரு பள்ளத்தாக்கு. இது ஒரு நாடு என்று சிந்திக்கும் சிலர் வசிக்கிற ஒரு மாநிலம். துள்ளலான நாட்டார் உச்சரிப்புக்கும்  உறவிலாத வேறோர் அதிகார பூர்வ மொழியின் பகட்டான இலக்கணத்துக்கும் நடுவில் தள்ளாடும் மொழி. சைவத்திலும் சூஃபியிலும் தோய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட தீவிரவாத எண்ணங்களால் பாதிப்புறும் பரந்த கலாச்சாரம். தடுமாற்றம் நிரந்தர இயல்பு இங்கே ; இருப்பதா? இல்லாமற் போவதா? நான் இருக்கிறேனா…

  • சிறப்புப்பதிவு – நட்பாஸ் சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்). அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/…

  • புண்ணியராசன் தன் பெருந்தேவியோடு சோலைக்கு வந்தான். அங்கிருந்த தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கி அறமும் பாவமும் அநித்தியப் பொருட்களின் வகைகளும் நித்தியப் பொருட்களின் வகைகளும், பிறப்பு முதலான துக்கமும், செல்கின்ற உயிர் புகுகின்ற இடமும், பேதைமை முதலிய பன்னிரெண்டின் தோற்றமும், அவற்றிலிருந்து நீங்கும் வழிவகையும், ஆசிரியன் புத்தனின் இயல்பும் தருமசாவகனிடமிருந்து அமைதி பெறக் கேட்டுக் கொண்டான். “மகளிருள் தனக்கிணையில்லாத பேரழ்குடையாளாய் கண்களில் இயங்கியும் காமத்துடன் இயங்காமலும் அழகிய கையிற் பிச்சைப் பாத்திரத்தைக் கொண்டு அறவுரை கேட்கின்ற இம்மங்கை…

  • உதயகுமரனை விஞ்சையன் கொன்று விடுகிறான் ;  அதற்குக் காரணமானவள் என்று மணிமேகலை சிறையிடப்படுகிறாள் ;  பின் இராசமாதேவி அன்பு காட்டுபவள் போல் நடித்து வஞ்சிக்க தன்னுடன் மணிமேகலையை தங்க வைத்துக் கொள்கிறாள். மயக்க மருந்தூட்டுதல், காட்டுமிராண்டி இளைஞன் ஒருவனை தீங்கிழைக்க ஏவுதல், பொய்ந்நோய் சொல்லி புழுக்கறையில் அடைவித்தல் என மணிமேகலைக்கிழைக்கப்பட்ட ஒவ்வொரு இன்னலிலிருந்தும் துன்பமின்றி இருந்தாள். இராசமாதேவி வியந்து நிற்கையில் மணிமேகலை அவளுக்கு தான் முன்பிறவி பற்றிய ஞானம் கொண்டவள் என்பதை தெரிவிக்கிறாள். “உடற்கழு தனையோ வுயிர்க்கழு…

  • ஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது;…

  • மணி ரத்னம் இயக்கிய “ராவண்” இந்தித் திரைப்படத்தில் பாடல்களை எழுதியவர் குல்சார் ; அதில் வரும் ஓர் அருமையான பாடலை கேளுங்கள் பாடலின் முதல் வரி குல்சார் அவர்களுடையதில்லை. சூஃபிக் கவிஞர் புல்ஹே ஷா-வின் பிரசித்தமான கவிதையின் முதல் வரியை குல்சார் இந்தப் பாட்டில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சுரிந்தர் சிங் கோஹ்லி அவர்கள் புல்ஹே ஷா பற்றி எழுதிய கட்டுரைப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். புல்ஹே ஷா ஒரு பஞ்சாபி சூஃபி. (காண்க : ஓ புல்லாவே!…

  • “சும்மா இரு சொல்லற என்றலுமே” என்று கந்தர் அனுபூதியில் வரும். “சும்மா இரு” “சொல்லற” – இவையிரண்டும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு தந்த போதனைகள். இதன் அர்த்தம் என்ன என்பதை அருணகிரிநாதரால் அப்போது சரியாக உணர்ந்து கொள்ள முடியவில்லை. திரும்பத் திரும்ப அவ்விரு போதனைகளைக் கூறிக் கொண்டே அதில் ஆழ்ந்து போனார். அருணகிரிநாதரைப் போலவே பட்டினத்தாருக்கும் இக்குழப்பம் இருந்திருக்கிறது. பட்டினத்தார் சொல்கிறார் : “சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் அம்மா பொருளிதென அடைய விழுங்கினண்டி” சும்மா இருக்க முடியாததால்…

  • சில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம்! எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அமைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன. “The Pursuit of Happyness”…

  • அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து நமக்கு பிடிக்கின்ற சிறுகதைகளுக்கு நடுவில் இருக்கும் பொதுப்புள்ளி என்ன? இலக்கிய ஆய்வாளர்கள் இக்கேள்விக்கு வெவ்வேறு விடைகள் சொல்லக் கூடும். என்னைப் பொறுத்த வரையில், கதையில் வரும் நிகழ்வுகள் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களுடன் சிறு அளவிற்கேனும் ஒட்டியோ வெட்டியோ சென்றால் அக்கதை நம் நினைவில் தங்கி விடும். பூமியைத் திறந்து குழி தோண்டி திட்டுகள் எழுப்பப்பட்டு கிணறு என்றழைக்கப்படும் நீர் நிலை மேல் இலக்கியவாதிகளுக்கு மாறாத காதல் இருந்திருக்கிறது எனலாம்.  கிணற்றோரக்…