குளத்திலே கல்லை விட்டெறியும்போது கல் திரும்ப பறந்து வந்து நம் தலையில் விழுமெனில், கல்லெறியும் விளையாட்டு நின்று போகும். பலன் என்னவாக இருக்கும் என்ற யூகம் இல்லாமல் நாம் வினையொன்றும் புரிவதில்லை. பலன் காலம் என்ற காரணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அறிவியல், சமூகவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் கால இடைவெளியை நிர்ணயிக்கின்றன. சூழ்நிலை நிர்ப்பந்தத்தாலொ, தெளிவு பெறாத மனோநிலையிலோ,வினையை தெரிவு செய்வதில் ஏற்படும் குழப்பத்தாலோ எதிர்பாராத பலனை அடைகிறோம். பின்னர் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் என்ற வாதங்களுக்கும் கருததுக்களுக்கும் இடம் கொடுக்கிறோம். வினைக்கும் பலனுக்கும் இடையே இருக்கும் கால இடைவெளி எளிதில் அறியாமையை உண்டு பண்ணும் வல்லமை வாய்ந்தது. சரியான அளவில் பொறுமை குணம் இல்லாதவர்கள் எண்ணவோட்ட நரகத்தில் சிக்கிச் சூழலும் அபாயம் இருக்கிறது.

Leave a comment