Tag Archives: புத்தகம்

குறுங்கதைகள்

பழக்கம் எனும் மகாசக்தி பாதிப் படித்து தலை திருப்பி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. என் படுக்கைக்குப் பக்கத்தில் இவ்வாறு சிதறிக் கிடந்த புத்தகங்களையெல்லாம் “ஷெல்ஃபில்” மனைவி எடுத்துவைத்துவிட்ட தினத்தன்று தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தேன். படுக்கையின் விளிம்பில் கரையாக இருந்த புத்தகங்களின் இழப்புணர்வு தாளாமல் சில புத்தகங்களை மீண்டும் வெளியில் எடுத்து … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா? – நட்பாஸ்

சிறப்புப்பதிவு – நட்பாஸ் சுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்). அமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , | 1 Comment

நினைவூட்டி

ஞாபகார்த்த இலை காணாமல் போனது மரத்திலிருந்து விடுபட்ட இலையிடமிருந்து நீ பாடம் கற்கவில்லை புத்தகப்பக்கங்களுக்கு நடுவில் சிறைப்படுத்தி வைத்திருந்தாய் புத்தகயாவின் புனித மரத்தின் இலையது என்பதை மறந்து போனாயா?

Posted in Buddhism, Poems | Tagged , , | Leave a comment

குளம் கோவில் புத்தகம்

கருணையுள்ளம் பருத்தியாகி திருப்திகுணம் நூலாகி தன்னடக்கம் முடிச்சாகி வாய்மை முறுக்காகி அமைந்த பூணுலொன்று உங்களிடம் இருந்தால் அதை எனக்கு அணிவியுங்கள் அது அறுந்து போகாது ; அது அழுக்காகாது ; எரிந்து போகாது ; தொலைந்தும் போகாது ; நானக் சொல்கிறான் அத்தகைய பூணூலை அணிந்தோரே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் -குரு நானக் ஒரு குளம். புனிதக் குளம். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , | Leave a comment

நம்பிக்கையின் நாளைகள் – அ.முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி

தமிழ்புனைவுகளின் நாயகர்கள் தமிழநாட்டில் இருப்பதாகத்தான் வர வேண்டும் என்று சில காலம் முன்னர் ஒரு மரபே ஏற்பட்டிருந்தது. எண்பதுகளில் ஒரு வாரப்பத்திரிக்கையில் சிவசங்கரி எழுதிய “47 நாட்கள்” என்ற தொடர்கதையை வாசித்திருக்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு மாப்பிள்ளையை மணமுடிக்கிறாள் கதையின் நாயகி. உண்மையில் அயல்நாட்டு மாப்பிள்ளை அவ்வளவு நல்லவன் இல்லை. அவன் நாயகியை கொடுமைப்படுத்துகிறான். … Continue reading

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , | 2 Comments

தொடர்பு

வெகு காலமாக புரட்டப்படாத புத்தகத்தின் பக்கங்களுக்குள் கிடந்தது இலை பச்சை மங்கி வெண்மைப் பட்டுப் போன ஆனால் வடிவம் குன்றா அந்த இலையில் வாசம் தொலைந்திருந்தது பழைய புத்தகத்தின் வாசனையை விரும்பி முகர்கையில் இலையின் வாசமும் சேர்ந்து வந்தது. இலை கிடந்த பக்கத்தில் காணாமல் போயிருந்த எழுத்துகள் சில இலையில் பதிந்திருந்தன

Posted in Poems | Tagged , | Leave a comment

சார்பியல் : ஒரு வரைபட கையேடு

(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்) இடம் காலம் என்ற இரட்டை தொடர்ச்சிகள் பிரக்ஞை என்றொரு மறைபொருளின் நூல் பொம்மைகள் நரைத்த மீசை … Continue reading

Posted in Personal Truths, Poems | Tagged , , , , , , , | 2 Comments