காலத்தின் மிகச் சிறிய அளவு

ஒன்றைச் சார்ந்து எழுவதே மற்றது. இந்தக் கணம் அல்லது இந்த நொடி எந்த தர்மங்களைச் சார்ந்து எழுந்தது. இதன் பதிலை சிந்திக்க எத்தனித்த பௌத்த ஆச்சாரியர்களின் கருத்துக்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

வடிவத்தின் மிகச் சிறு எல்லை சிறு துகள். காலத்தின் மிகச் சிறு எல்லை கணம். இந்த கணத்தை எப்படி அளவிடுவது? சூழல் கனிந்து வருகையில் தர்மத்தின் (phenomenon) பெறுகை எழும் ; தர்மம் நகரும் போது ஒரு துகளில் இருந்து இன்னொரு துகளுக்கு நகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவு ஒரு கணம். அபிதர்மிகா சொல்லுவது போல : ஓர் ஆரோக்கியமான மனிதனின் ஒருமுறை விரல் சொடுக்கு அறுபத்தியைந்து கணங்கள் நீடிக்கும். – வசுபந்து

ஒரு துகள் சுழல எடுத்துக் கொள்ளும் நேரமே காலத்தின் மிகச்சிறிய தனித்த அலகு. – வசுபந்து

காரணக்காரியங்களை ஒட்டி எழும் தர்மங்களின் ஒற்றைக் கணத்துள், உதாரணமாக ஒரு விரல் சொடுக்குவதற்கு ஆகும் நேரத்துள் எண்ணற்ற கணங்கள் எழுந்து ஓய்கின்றன. அந்த கணத்தின் கால அளவுக்குள் 368 கணங்கள் கடந்து செல்வதாக ஸ்ராவகர்கள் சொல்கின்றனர் – தர்மமித்ரா

நாகார்ஜுனர் சூத்திராலங்காராவில் அவதாம்சக சூத்திரத்திலிருந்து கொடுக்கும் மேற்கோள் :- “கருடனை விட அதிக வேகத்தில் வலிமையான குதிரையால் இழுக்கப்படும் ஆயிரம் கம்பிகள் கொண்ட சக்கரத்தாலான இரும்பு ரதத்தில் அமர்ந்திருக்கும் மனிதன்..ஒரு விஷப்பாம்பு அந்த ரதத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரத்தில், பிக்கு ஆனந்தர் பத்து தர்மங்களை பயில்வித்து அதன் பொருள் புரிந்து கொள்ளபட்டது. ஆனந்தர் ஒரு தர்மத்தை பயில்வித்த கணத்தில் ஷாரிபுத்தர் ஆயிரம் தர்மங்களை பயில்வித்து அவற்றின் பொருள் புரிந்து கொள்ளப்பட்டது. ஷாரிபுத்தர் ஒரு தர்மத்தை பயில்விக்க எடுத்துக் கொண்ட கணத்தில் மௌத்கல்யாயன பிக்கு எண்பதாயிரம் லோகங்களுக்கு விஜயம் புரிந்தார்.”

நாகார்ஜுனர் ஐன்ஸ்டைனின் முன் ஜென்மமோ? ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாட்டை விவரிக்கும் பொருட்டு பயன்படுத்திய சிந்தனைப் பரிசோதனை போலவே மேலே சொன்ன கால அடுக்குகள் தொனிக்கின்றன அல்லவா?

நாகார்ஜுனர் மேலும் இந்தக் கணம் பற்றி சிந்திக்கிறார். ரத்தினாவளியில் சொல்கிறார் :-

ஒரு கணத்துக்கு ஒரு முடிவு இருப்பது போல
அதற்கு ஒரு தொடக்கமும் இடையும் இருக்கும் என்று யோசி
ஆகையால், மூன்று கணங்களை அது அடக்கிக் கொண்டிருப்பதால்
இந்த உலகம் ஒரு கணம் கூட நீடிப்பதில்லை

எப்படி பிரிக்க முடியாத நுண்மைத் துகளை ஸ்தாபிக்க முடியாதோ அதே போல பகுதியற்ற கணத்தை உள்ளடக்கிய காலத்தை இறுதியான கால அலகாக பிரகடனம் செய்துவிட முடியாது என்னும் கருத்தில் மத்யாமகர்களும் சித்தமாத்ர சிந்தனையாளர்களும் ஒத்துப் போகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s