டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் – சிறுகதை தொகுப்பிற்கு சொல்வனம் (2/12/2016) இதழில் ஒரு விரிவான விமர்சனக்கட்டுரையை எழுதியிருக்கிறார் நண்பர் கிரிதரன். இங்கிலாந்தில் தகவல் தொழில்நுட்பப் பணியில் இருக்கும் கிரிதரன் சொல்வனம் இணைய இதழ் தயாரிப்பில் தொடர்ந்து தன் பங்களிப்பை வழங்கிவருகிறார். பிரதிகளை எடிட் செய்வதில் அவரிடம் இருக்கும் தனித்திறமையை நானறிவேன். சில வருடம் முன்னர் சொல்வனத்தில் வெளிவந்த என்னுடைய ஓரிரு கதைகளின் வடிவம் குறித்து அவருடன் நிகழ்த்திய கருத்துப்பரிமாற்றம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த விமர்சனக் கட்டுரையிலும் அவர் சொல்லும் கருத்துக்கள் புனைவிலக்கியம் எழுத விழையும் எவருக்கும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. கட்டுரைகள் மட்டுமல்ல ; சில அருமையான சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் கிரி. அவர் சிறுகதைகளில் “நந்தா தேவி” எனக்கு மிகப்படித்தமானது. ஜெயமோகன் தளத்திலும் அவர் சிறுகதையொன்று ஓரிரு வருடங்கள் முன்னர் வெளியானது.
கிரிதரன் என் நூலுக்கான விமர்சனம் ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும் என்று நண்பர் நட்பாஸ்-ஸிடம் ஒருமுறை சொன்ன போது, அவர்தான் கிரிதரனிடம் இது குறித்துப் பேசினார். எனவே இந்த விமர்சனக்கட்டுரை உருவாவதற்கு நட்பாஸும் ஒரு காரணம். கிரிக்கும் நட்பாஸுக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
சொல்வனம் கட்டுரைக்கான சுட்டி :
‘டைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில்’ சிறுகதைத் தொகுப்பு மதிப்புரை