இன்னும் சிறிது விழித்திருந்தால்
விடியலைச் சந்திக்கலாம்
இதுவரை வாராத தூக்கம்
இப்போது வருமெனின்
முதல் துண்டு வெளிச்சம்
இருளுடன் கலந்து
விடியல் பூக்கும் சித்திரத்தைக் காண முடியாது
இரவெல்லாம் விழித்திருந்தமைக்கு
இந்த ஆறுதல் கிடைக்கட்டும்
உறக்கமின்மை ஒரு பரிசு
புற அமைதியை அனுபவிக்கும் சந்தர்ப்பம்
அக அமைதியை இழந்து
ஒரே தன்மையான
பல்வேறு சிந்தனைகள்
குறுக்கும் நெடுக்குமாக ஓடி
தூக்கத்தை தூர நிறுத்தி
விதிக்கப்பட்ட தண்டனைக்கு சிறு ஊதியம்
தலையோ தலைப்பாகையோ
உருளப்போவது எதுவாயினும் சரி
விடியல் காட்சியைக்
கண்டு களிக்கத் தயாராகிவிட்டேன்