பரிசுப் பொருள் கடையில்

white butterfly
பிளாஸ்டிக்
பூங்கொத்தை
சுற்றியவாறு
இருக்கும்
வண்ணத்துப்பூச்சியும்
பிளாஸ்டிக்
கண்ணுக்கு எளிதில்
புலப்படா
இழையால்
பூங்கொத்துடன்
இணைக்கப் பட்டிருப்பது
தெரிய வர
உற்று நோக்க
வேண்டியிருந்தது.