ஐன்ஸ்டைனின் உலகு

காகிதத்தில்
வரையப்பட்டிருந்தவை.
நேர்கோடுகள் தாம்!
ஐயமில்லை.
தரையால் ஈர்க்கப்பட்டு
விழுந்தன
அக்கோடுகள் !
இப்போது
அவைகள்
தம் நேர்த்தன்மையை இழந்து
வளை கோடுகளாகியிருந்தன.
+++++
நம் மனதில் உறையும்
முழுமையான
உட்பொருட்களின்
நிழல்களே
நாம் புறவுலகில்
உணரும் பொருட்கள்
என்றுரைத்தான் பிளேட்டோ.
+++++
புறவுலகத்தின் ஏதொவோர் இயக்கத்தை
வரைபடத்தில்
குறித்தால்
அருவமாக (abstract) மாறும்.
பருண்மை துறந்து
கணிதவுலகத்தில் நுழைந்து
விடுதலை பெறும்
+++++
மூன்று பரிமாண உருவங்களும் நிகழ்வுகளும்
காலவெளி என்றொரு
நான்காவது பரிமாணத்துடன் சேர்ந்து
கணிதச்சித்திரங்களாகி உலவும்.
எண்ணிலடங்கா பரிமாணங்களை
உருவாக்கி,
வரைபடமாக்க
மனத்திரை மட்டும் போதும் ;
அவற்றிற்கொத்த
எதிரிணையை
புறவுலகில் காணமுடியாவிடிலும்
என்ன?
நிரூபணங்களை
பின்வரும் சந்ததிகள் தேடி
பிளேட்டோ சொன்னதை உண்மையாக்குவார்கள்.

.

1 Comment

  1. சிவா says:

    கருத்து என்ற அளவில் சிறப்பாக வந்திருக்கிறது. நல்ல முயற்சி, அறிவியலைத் தமிழ் கவிதை பேசுவதைக் காண மகிழ்ச்சியாக இருக்கிறது./

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.