(RELATIVITY : A GRAPHIC GUIDE என்ற புத்தகத்தின் சில பக்கங்களை படிக்கும் போது வந்த தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. புத்தகத்தை மார்பில் மடித்து வைத்தவாறே உறங்கிய போது கண்ட கனவில் பின் வரும் வரிகளை யாரோ படித்தார்கள்)
இடம் காலம் என்ற
இரட்டை தொடர்ச்சிகள்
பிரக்ஞை என்றொரு
மறைபொருளின்
நூல் பொம்மைகள்
நரைத்த மீசை
இரைந்த முடி கொண்ட
இயற்பியல் மேதை
உணர்ந்து சொன்னான்.
+++++
சுவரில் சாய்ந்து
அமர்ந்த படி உறங்கியபோது
அண்ட வெளியில்
பறந்தேன்.
சட்டைப்பையிலிருந்து
விடுபட்ட
என் எழுதுகோலும்
நிலையான சித்திரம் போல்
என்னுடன் சேர்ந்து பறந்தது.
வெகு நேரமாகியது தரையைத்தொட.
குப்புறவிழுந்த நான்
எழச்சிரமப்பட்டேன்.
அறை உருள ஆரம்பித்தபோது
ஒரு மூலையிலிருந்து
எதிர் மூலையில் போய் விழுந்தேனாம்
சில வினாடிகளில் நடந்தேறியதாம்.
உருண்ட அறையிலிருந்து
என்னை மீட்டவர்கள் சொன்னார்கள்.
வெகு நேரமாக பறந்து கொண்டிருந்தேனே!
சில வினாடிகள் மட்டும் கழிந்தன
என்பது எங்ஙனம் சாத்தியம்?
இடங்களின் தூரமும்
கால அளவைகளும்
வெவ்வேறு யதார்த்த தளங்களில்
வேறுபடும் எனில்
யதார்த்தம் என்பதே பிரக்ஞை தானோ?
+++++
அறை உருளுதல்
எப்படி சாத்தியம் என்று
விழித்தவுடன் வினவப்போகும்
உனக்கு ஒரு சமிக்ஞை !
RELATIVITY : A GRAPHIC GUIDE
கட்டிலுக்கு பக்கத்தில்
தரையில் விழுந்து கிடக்கும்.
நடுநிளைதான் சார் நம் நாட்டுக்குத் தேவை. சார்பியல் கையேடு தயாரிக்கும் தங்கள் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நடுநிலைதான் சார் நம் நாட்டுக்குத் தேவை. சார்பியல் கையேடு தயாரிக்கும் தங்கள் முயற்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.