புத்தரின் நிழல்


வீட்டு வரவேற்பறையில்

புத்தர் சிலை முன்

ஏற்றப்படும் தீபத்தின் கைங்கரியம்.

அறையிருட்டில்

புத்தர்

உயிர் பெற்று

விஸ்வரூபமெடுக்கிறார்.

இலேசான காற்றில்

தீபச்சுடர் ஆடுகையில்

புத்தரின் நிழல்

தலையசைத்து

மௌனப்பிரவசனம்

செய்வதாக தோன்றும் எனக்கு.

மின்வெட்டு முடிந்து

வெளிச்சம் திரும்பினால்

அசையும் நிழல் புத்தர் மறைந்து விடுகிறார்.

புத்தர் சிலை மட்டும் வீற்றிருக்கும்.

புத்தர் மீண்டும் உயிர் பெற

இருட்டுக்காக காத்திருக்க வேண்டும்

நன்றி : நவீனவிருட்சம் http://navinavirutcham.blogspot.in/2012/04/blog-post.html